சகரி மக பம தப
மபகம ரிகரிரிக மககா
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே
திருமலர் தாழ் போற்றி வா கண்மணி
வணங்குவோம்
திருமலர் தாழ் போற்றி வா கண்மணி
வணங்குவோம்
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே
உன் கோயில் எங்கும்
நாதஸ்வரங்கள் கேட்கும்
அந் நாதம் நெஞ்சில்
உந்தன் நினைவை வார்க்கும்
நாள் தோரும் பாயும்
நாத வெள்ளம் நீயே
பாவாணர் நாவில்
மேவும் எங்கள் தாயே
உந்தன் பாதம் போற்றி
உந்தன் பிள்ளை நாங்கள் வேண்டும்
(ஸ்)வரங்கள் தாராயோ
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே
பாட்டாலே மீரா
நந்தன் வசமே சேர்ந்தாள்
பூங்கோதை ஆண்டாள்
கண்ணன் மனதை ஆண்டாள்
ஆண்டாளைப் போலே
பாவை ஒன்று பாடு
ஆண்டாண்டு காலம்
அன்பு தன்னை தேடு
தஞ்சம் நீயே என்று
நெஞ்சும் நாவும் நாளும் பாட
ஸ்வரங்கள் தாராயோ
(கை வீணையை )
திரைப்படம்: வியட்நாம் காலனி
பாடகர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ,
இசை: இளையராஜா
பாடல் ஆசிரியர்:வாலி
Tuesday, October 11, 2011
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 9:18 AM
வகை இளையராஜா, பாம்பே ஜெயஸ்ரீ, வாலி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment