ஒரு மலையோரம்
அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம்
ஒரு வீடு
உன் கை கோர்த்து
என் தலை சாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு
செல்லம் கொஞ்சி நீப்பேச
உள்ளம் உருகி நான் கேட்க
அந்த நிமிடம் போதும்மடா..
இந்த ஜென்மம் தீரும்மடா..
ஒ..
(ஒரு மலையோரம் )
பெண்ணே முதல் முறை
உன் அருகிலே
வாழ்கிறேன்
போதும் போதும் விடு
உன் நினைவிலே தோய்கிறேன்..
என்னானது எந்தன் நெஞ்சம்
ஏனிந்த மாற்றமோ
பெண்ணானதும் நாணம் வந்து
தன் வேலையை காட்டுமோ..
உன் எதிரிலே... ஏ ஏ ஏ
எதுவுமே பேசிட வேண்டாம்
மௌனங்கள் ஆயிரம் பேசுமே
என் உள்ளிருந்து நீ பேச
இன்னும் என்ன நான் பேச
இந்த மயக்கம் போதும்மடி..
இன்னும் நெருக்கம் வேண்டும்மடி
ஓஓஹோ
ஒரு மலையோரம்
அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம்
ஒரு வீடு
உன்னைக் காணும் வரை
நான் கனவிலே
வாழ்ந்தவன்
உன்னைக் கண்டேன் பெண்ணே
உன் நினைவிலே
வாழ்கிறேன்..
என் தனிமையின் ஓரம் வந்து
இனிமைகள் ஊட்டினாய்
என் தாயிடம் பேசும் போதும்
வெறுமையைக் கூட்டினாய்
உன் காதலிலே… ஏ ஏ ஏ
மனமது புகையினைப் போலே
மறைத்தது யாருமே இல்லையே
என்னுள்ளே சேர்ந்திருக்க
எங்கே எனை நான் மறைக்க
இந்த வார்த்தை போதும்மடி..
எந்தன் வாழ்க்கை மாறும்மடி..
பெண்ணே..
திரைப்படம்: அவன் இவன்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ்,பேபி பிரியங்கா, பேபி ஸ்ரீ நிஷா ,பேபி நித்யஸ்ரீ
வரிகள்:நா.முத்துக்குமார்
இசை : யுவன் சங்கர் ராஜா
Thursday, October 20, 2011
ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 1:12 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment