மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் -இங்கு
வாழும் மானிடர் காதல் என்பதா
(மழையும்)
இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தானே அதுதானா மோன நிலை
அடடா இதுதான் சொர்க்கமா
இது காமதேவனின் யாகசாலையா
(மழையும்)
கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலைபோல் மனமும் அலையும்
கருநீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் அதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ இந்த ஏக்கம் யாரறிவார்
முதலாய் முடிவாய் இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்
(மழையும்)
படம்; அழகன்
இசை: மரகத மணி
பாடல்: மழையும் நீயே வெயிலும் நீயே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
Tuesday, March 13, 2012
மழையும் நீயே வெயிலும் நீயே
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 2:29 PM
வகை SP பாலசுப்ரமணியம், மரகதமணி
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
மனம் நனைக்கிற நல்ல பாடல்.
இனிமையான பாடல்.
அழகன் படத்தில் இனிமையான அழகான பாடல் பகிர்விற்க்கு நன்றி.
பாடல் புலமைபித்தன்
Post a Comment