Wednesday, March 21, 2012

அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே

அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே
கண்ணீரில் துன்பம் போச்சே
கரை சேத்திடேல் காதற்கே

உன் காதல் சரம் என் மீதினில்
என் காதல் மனம் உன் மீதினில்
விண்மீதே இருள் தான்
நாடுதே (விண்மீதே)
ஆ என் செய்வேன்
நினைவே தேடுதே
(அன்பே வா)

ஓ வழிக்காணேன் பூமி மீதில்(2)
வந்து காண்பாய் நீயே கனவில்(2)
(அன்பே வா)

இன்று என் தாபம் தன்னை
பார்க்கவா
உன்னை நீ நாடி
என்னைப்பார்க்கவா
முன்னம் நீயே பார்க்காத
வேடிக்கை
மூச்சு போகின்ற விந்தை
பார்க்கவா

திரைப்படம் : அவன்
பாடியவர்: ஏ.எம்.ராஜா, ஜிக்கி
வரிகள் : கம்பதாசன்
இசை: ஷங்கர் ஜெய்கிஷன்
http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD2037'&lang=ta

5 Comments:

வல்லிசிம்ஹன் said...

கயலம்மா. எத்தனை பழையபாட்டு.!
நானும் ஜிக்கியுமாக ரேடியோவில் இழைந்து பாடினால் எங்க அப்பாவுக்குத் தலைவலி வந்துவிடும்;0
சின்னப் பெண்ணா லட்சணமா கேக்கிற பாட்டா இது என்று அலுத்துக் கொள்வார்.
இந்தி தான் முதலில் வந்தது. ஜிக்கி தான் பெஸ்ட்:0)நன்றி நன்றி நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) காலம் இப்பயும் அப்படியே இருக்கு.. வல்லி ..

Kannan said...

Nandru. Good post.

பால கணேஷ் said...

தங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் வந்து பார்த்துக் கருத்திட்டால் மகிழ்வேன். நன்றி!

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_05.html

Boys said...

நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
http://www.YahooAds.in/publisher_join.php

Last 25 songs posted in Thenkinnam