
வி.எஸ்.ராகவன் ஐயா அவர்கள் சிறப்பான குணச்சித்திர நடிகர் இவரின் பழைய படங்களில் அப்பா பாத்திரத்தில் மிகவும் மிடுக்குடன் அபாரமாக நடிப்பவர். அப்பா கேரக்டர்களில் மேஜர் சுந்தரராஜன் அவர்களூக்கு அடுத்தது வி.எஸ்.ராகவன் ஐயா அவர்களின் நடிப்பு எனக்கு ரொம்பவும் பிடிக்கும். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற தொடரில் இவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மிக ஆவலுடன் பார்த்தேன். அந்த அனைத்து தொடர்களீலும் அசத்தப்போவது யாரு கலைஞர்கள் இவரை குரலை பேசாதவர்களே இருக்க மாட்டார்கள் ஒவ்வொரு வாரமும் எப்படியோ இவர் குரல் மிமிக்ரி செய்வார்கள். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் பேசும் குரலை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை இப்படியா நான் பேசுகிறேன் என்று நடுவர்களிடமே கேட்டதும் நடுவரில் ஒருவர் நடிகர் சிட்டி பாபு இவரை செமத்தியாக கலாய்த்தது தான் நிகழ்ச்சியின் உச்சகட்டம் சளைக்காமல் ஐயாவும் திரும்பவும் பதில் தந்தது பாப்பவர்களூக்கு நல்ல தொரு விருந்தாக இருந்தது. இங்கே இதைப்பற்றி எழுத தேவையில்லை தான். இந்த ஒலித்தொகுப்பு கேட்கும் போது அந்த நிகழ்ச்சியின் நினைவுகள் வந்தன தங்களூடன் பகிர்ந்து கொள்கிறேன். திரைபடத்துடன் தனக்கு இருந்த தொடர்புகளை மிகவும் ஸ்வாரசியமாக வழங்கியிருக்கிறார் திரு.வி.எஸ்.ராகவன் ஐயா அவர்கள். அவர் நீடுழி பல்லாண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்தி இந்த ஒலித்தொகுப்பை ஒலிப்பரப்பிய அறிவிப்பாளர் திரு.பால்ராஜ் அவர்களுக்கு தேன் கிண்ணம் நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தொகுப்பில் இறுதியில் சில பாடல்கள் ஒலிப்பரப்பு சரியா வரதாதல் சுமாராக இருக்கும் தயவுசெய்து பொறுத்து கொள்ளுங்கள் தகவல்களுக்காக பாடலை எடுக்க முடியவில்லை கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.
1.தைப்பொறந்தால் வழி பிறக்கும்
2.நிலவை பார்த்து வானம் சொன்னது
3.புன்னகை மண்ணன் பூவிழிக்கண்ணன்
4.பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
5.பார்த்தேன் சிரித்தேன்
6.வாடிக்கை மறந்ததும் ஏனோ
7.காத்திருப்பான் கமலக் கண்ணன்
8.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
for down load clik here
3 Comments:
சிறப்பு விருந்தினராக ஒருவர் வந்திருக்கும்போது, அவரையோ அல்லது அவருடைய உறவினர்களையோ (உதாரணத்திற்கு, சிம்பு சிறப்பு விருந்தினராக வந்தால், சிம்புவை மட்டுமின்றி டி.ஆரையும்) இமிடேட் செய்யாமல் இருப்பது நல்லது..
இது இரு தரப்பு embarassed situation க்கு வழிவகுக்காமல் இருக்கும்!
அன்புடன்
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com
நல்ல பதிவு
//சிறப்பு விருந்தினராக ஒருவர் வந்திருக்கும்போது, அவரையோ அல்லது அவருடைய உறவினர்களையோ (உதாரணத்திற்கு, சிம்பு சிறப்பு விருந்தினராக வந்தால், சிம்புவை மட்டுமின்றி டி.ஆரையும்) இமிடேட் செய்யாமல் இருப்பது நல்லது.. //
கார்த்திகேயன் சார் நீங்க சொன்னது முற்றிலும் சரியே. வருகைக்கு நன்றி. சதீஸ் குமார் சார் உங்களூக்கும் நன்றி.
Post a Comment