காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்
லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேசா நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல
சுண்டெலி வலையில நெல்லைபோல் உந்தன்
நெனப்ப எனக்குள்ள சேர்க்குற
அல்லிப்பூ கொளத்துல கல்லைப்போல் உந்தன்
கண்விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்னேன்
கருச்சாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமும் மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்
(லேசா... )
தத்தி தத்தி போகும் பச்சபுள்ள போலே
பொத்தி வச்சுதானே மனசு இருந்ததே
திருவிழா கூட்டத்தில் தொலையறேன் சுகமா
தொண்டைக்குழி தாண்டி வார்த்தை வரவில்ல
என்னென்னவோ பேச ஒதடு நெனைச்சது
பார்வைய பார்த்ததும் எதமா பதறுது
ராத்திரி பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி
பூட்டுன வீட்டுலதான் புதுசா பட்டாம்பூச்சிப் பறக்குதடா
(கருச்சாங்குருவிக்கு... )
லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
பூவா விரிகிற ஒலகம் ஒலகம்
தரிசா கெடந்தது இதுவர
ஒத்தமரம் போல செத்துக்கெடந்தனே
ஒன்னப்பாத்த பின்னே உசுரு மொளச்சது
சொந்தமா கிடப்பியா சாமிய கேப்பேன்
ரெட்டை ஜடை போட்டு துள்ளித் திரிஞ்சேனே
ஒன்னப்பாத்த பின்னே வெட்கம் புரிஞ்சதே
உனக்குதான் ஒனக்குதான் பூமியில் பொறந்தேன்
காவடி சுமப்பது போல் மனசு காதல சுமக்குதடா
கனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்குதடி
(கருச்சாங்குருவிக்கு... )
Monday, July 26, 2010
லேசா பறக்குது மனசு மனசு
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 8:26 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment