வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலாதேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலாநீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலாமானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?(வான் நிலா நிலா அல்ல)தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?அவள் காட்டும் அன்பிலா?இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?தீதிலா காதலா ஊடலா கூடலா?அவள் மீட்டும் பண்ணிலா?(வான் நிலா நிலா அல்ல)வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?அவள் நெஞ்சின் ஏட்டிலா?சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?அதைச் சொல்வாய் வெண்ணிலா!(வான் நிலா நிலா அல்ல)படம்: பட்டினப் பிரவேசம்இசை: M.S.விஸ்வநாதன்பாடல்: கண்ணதாசன்பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்
ADD THIS VIDEO,/......http://www.youtube.com/watch?v=S11qvOjO_NE
Post a Comment
1 Comment:
ADD THIS VIDEO,/......
http://www.youtube.com/watch?v=S11qvOjO_NE
Post a Comment