ஓ வெண்ணிலாவே ஏ ஏ வா ஓடிவா (2)
நாளை இந்த வேளை எமை நீ காண வா- ஓ
பால் போல வா
(ஓ வெண்ணிலாவே)
நிலவின் ஜாடை தெரியும் ஓடை
அழகே நீயும் நீராடு ஹோ
மலர்கள் சேர்த்து மாலை கோர்த்து
அடடா நீயும் பூச்சூடு
கதைகள் பேசு
கவிகள் பேசு
விடியும் வரையில் நீ பாடு
நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால் போல வா
(ஓ வெண்ணிலாவே)
லாலிலாலி லாலிலாலா லாலி லாலி
இதமாய்ச் சாய்ந்து இமைகள் மூடு
இதுதான் முடிவு வேறேது ஹோ
இறக்கும்போதும் இதுவே போதும்
இனிமேல் பிறவி வாராது
காதல் மாலை
சூடும் வேளை
அழுகை ஏனோ கூடாது
நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை எமை நீ காண வா
ஓ பால் போல வா
(ஓ வெண்ணிலாவே)
ஆனந்தம் கொண்டு நீங்கள்
இன்று போல் வாழ்கவே
ஆயிரம் பௌர்ணமிகள் கண்டுதான் வாழ்கவே
ஆதியில் சேர்ந்த காதல் ஆனந்தம் காணவே
ஆகாயம் உள்ள மட்டும் அழியாமல் வாழ்கவே
திரைப்படம் : ஆனந்தக் கும்மி
இசை :இளையராஜா
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
Sunday, February 6, 2011
ஓ வெண்ணிலாவே வா ஓடிவா
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 6:44 PM
வகை S ஜானகி, SP பாலசுப்ரமணியம்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
நல்ல பாடல் சகோ. பகிர்வுக்கு மிக்க நன்றி.
இனிமையான பாடல். சிறுவயதில் ரேடியோவில் அடிக்கடி கேட்ட பாடல். பகிர்வுக்கு நன்றி முத்துலெட்சுமி.
Post a Comment