தலைகீழாய் பிறக்கிறான்
தலை கீழாய் நடக்கிறான்
வயிறு என்ற பள்ளத்தில்
இதயத்தையே புதைக்கிறான்
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..
மனிசன் ஒரு கட்டை
மக்கப் போற மட்டை
தேகம் ஒரு சட்டை
நீ யாரை வாழ விட்ட?
ஒற்றை துளியில ஒற்றை துளியில
ஒரு லட்சம் ஒரு கோடி உயிரு இருக்குது
அத்தனை உயிரையும் அடிச்சு துரத்திட்டு
ஒற்றை உயிர் ஒற்றை உயிர்
கருவில் வளருது..!
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..
கண்ணுக்குள்ள மண்ணு பட்டா
கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்தத்தையும்
மண்ணுல புதைக்கிறோம்..!
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..
மனிசன் ஒரு கட்டை
மக்கப் போற மட்டை
தேகம் ஒரு சட்டை
நீ யாரை வாழ விட்ட?
(தலைகீழாய்...)
எப்ப பிறக்குறோம் எப்ப பிறக்குறோம்
பெத்துப் போடும் ஆத்தாளுக்கும் தேதி தெரியலை..
எப்போ இறக்கிறோம் எப்போ இறக்கிறோம்
சாகப்போகும் ஆளுக்கும் தேதி தெரியலை..
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..
வாழ்க்கையை முழுசா வாழ்ந்தவன் யாரம்மா?
மனுசன் ஒரு ஓட்டைப்பானை மனசு நிறையுமா?
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..
மனிசன் ஒரு கட்டை
மக்கப் போற மட்டை
தேகம் ஒரு சட்டை
நீ யாரை வாழ விட்ட?
(தலைகீழாய்...)
படம்: ஜெமினி
இசை: பரத்வாஜ்
பாடியவர்: மாணிக்க விநாயகம்
விரும்பி கேட்டவர்: அருண் குமார்
Friday, September 2, 2011
தலைகீழாய் பிறக்கிறான்
பதிந்தவர் MyFriend @ 2:05 AM
வகை 2000's, பரத்வாஜ், மாணிக்க விநாயகம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment