ஓ சாமி
ஐயா சாமி ஆவோஜி சாமி
ஐயா ராய்யா வாய்யா யூ கம்மைய்யா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக்கொம்பிருக்கு வாங்கலியோ
(ஐயா)
ஐயா சாமி ஓ ஐயா சாமி
கோழியாட்டை பிடிக்கும்
எங்க குள்ள நரி
ஏழை ரத்தம் குடிக்கும்
இங்கே உள்ள நரி
பல்லிளித்துக்காட்டி
பட்டம் பலதைத் தேடி
கட்சிப் பேரைச் சொல்லி
ஊரை ஏமாத்திடும்
(ஐயா சாமி ஆவோஜி சாமி)
வேட்டையாடியாடி பிழைக்கும்
எங்கக் காட்டு நரி
மூட்டைக்காட்டி பதுக்கும்
உங்க நோட்டு நரி
வேலை ரொம்ப வாங்கும்
கூலி தர ஏங்கும்
பட்டினி பார்த்தும்
புளி ஏப்பம் விடும்
(ஐயா)
காட்டிலுள்ள நரி ரொம்ப
நல்லதுங்க
உங்க நாட்டிலுள்ள நரி
ரொம்ப பொல்லாதுங்க
குள்ள நரிக் கொம்பை
கோத்துப்போடு சாமி (குள்ள)
புள்ளைக்குட்டிக்காக்கும்
நல்ல புத்தி வரும்
(ஐயா)
படம் :ஓர் இரவு
பாடியவர் : எம்.எல்.வசந்தகுமாரி
இசை : ஆர் சுதர்சனம்
Sunday, September 4, 2011
ஐயா சாமி ஆவோஜி சாமி
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 10:10 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment