காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்
காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து
வேடனை வீழ்த்தும்
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்
கனவுகள் பூக்கின்ற செடி என
கண்கள் மாறுதுன்னாலே
வயதிலும் மனதிலும்
விட்டு விட்டு வண்ணம் வழியிதுன்னாலே
உனது வளையாடும் அழகான
கை சீண்டவே
தலையில் இலை ஒன்று விழ வேண்டுமே
குடைகள் இல்லாத நேரத்து
மழை வாழ்கவே
உனது கை ரெண்டும் குடை ஆனதே
உனது முத்ததில் நிறம் மாறுதே
உடலில் ஒரு சோடி நதி பாயுதே
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயனம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்
வானத்தின் மறுபுறம்
பறவையாய் நீயும் நானும் போவோமே
பூமியின் அடிப்புறம்
வேர்களாய் நீண்ட தூரம் போவோமே
கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே
காதல் மொழி கேட்டு மழை ஆனதே
நூறு நூற்றாண்டு காணாத பூவாசமே
பூமி எங்கெங்கும் தான் வீசுதே
என்உள் உன்னை உன்னுள் என்னை
காலம் செய்யும் காதல் பொம்மை
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்
திரைப்படம்: வெயில்
பாடியவர்கள் : சின்மயி , கார்த்திக், நிதிஷ்
இசை: G.V.பிரகாஷ்
வரிகள் : நா.முத்துக்குமார்
Friday, September 30, 2011
காதல் நெருப்பின் நடனம்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 10:34 AM
வகை GV பிரகாஷ் குமார், கார்த்திக், சின்மயி, நா. முத்துக்குமார், நிதிஷ்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
எனக்கு மிக பிடித்தமான பாடல்... மீண்டும் ஓர் முறை ரசித்து கேட்டேன்...
Post a Comment