Monday, September 12, 2011

கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும்

கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும்
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் ஓ
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் (கல்யாண ஊர்வலம்)

மாப்பிள்ளை நுதலின் திலகம் போலே
மணமகள் எழில் சிந்தவே (?)
மணமகள் எழில் சிந்தவே
பார்த்திட எந்தன்
உள்ளத்தின் கனவே
பூர்த்தி பெறும் விரைவே
பூர்த்தி பெறும் விரைவே

சிங்காரம் செய்வாள் சேடியே
மருதாணி சூடியே
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் ஓ
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்
கல்யாண ஊர்வலம் வரும்

கல்யாண பெண்ணும் பிள்ளை
பல்லக்கில் ஏறி
செல்வார் விரைந்து வெளியூர் (கல்யாண)
கணம் கணம் அவர்கள்
ஞாபகம் வந்தால்
கருத்தும் கலங்கிடுமே
கருத்தும் கலங்கிடுமே
கண் சிந்தும் காரின் மழைதான்
மென்மேலும் இருள்தான்
தன்னந்தனி ஆகிடுவேன் ஓ
தன்னந்தனி ஆகிடுவேன்
கல்யாண ஊர்வலம் வரும்
உல்லாசமே தரும்
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் ஓ
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்

திரைப்படம் : அவன்
பாடியவர் : P.லீலா
எழுதியவர் : கம்பதாசன் (?)
இசை: சங்கர் ஜெய்கிஷன்


0 Comments:

Last 25 songs posted in Thenkinnam