Monday, December 31, 2012
மழை வருது மழை வருது
பதிந்தவர் நாகை சிவா @ 9:30 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1990's, இளையராஜா, சித்ரா, புலமைப்பித்தன், யேசுதாஸ்
Sunday, December 30, 2012
போ போ போ
போ போ போ நீ எங்கு வேணா போ
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ
போ போ போ நீ எங்கு வேணா போ
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
நூறு ஜென்மம் ராணி போல வாழ போற பூமானே
என்னை போல எவனும் இல்ல சொல்ல போற நீதானே
பச்சைக்கிளி நீயே விட்டு பறந்தாயே
சொல்லாம கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே
போ போ போ நீ எங்கு வேணா போ
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
தங்கமே என்னிடம் என்ன குறை கூறு
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ளும் நீரு
ஓய்ந்திடாமலே சிறுவயதில் ஊஞ்சல் ஆடினோம்
மாறிடாமலே நடுவயதில் ஊரை கோடினோம்
ஒரு நாள் கூட நீங்காமல் கேலி பேசினோம்
நம்மை வேறாக பார்த்தோரை ஏனோ ஏசினோம் செல்வமே
போ போ போ நீ கூடு விட்டு போ
போ போ போ நீ கூறும் கெட்டு போ
கல்லடி பட்டு நான் கண்டதில்ல காயம்
சொல்லடி பட்டு நான் நிப்பதென்ன நியாயம்
காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன்
கானலாகி நீ பறந்திடவே சாக போகிறேன்
உனை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி
எனை ஏற்கமால் போனாலே போடி உன் விதி உன் விதி
எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ
போ போ போ நீ தாலி கட்டி போ
போ போ போ நா வாழாவெட்டி போ
நூறு ஜென்மம் ராணி போல வாழ போற பூமானே
என்னை போல எவனும் இல்ல சொல்ல போற நீ தானே
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாம கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே
போ போ போ
படம் : மனம் கொத்தி பறவை (2012)
இசை : இமான்
பாடியவர் : ஜாவித் அலி
வரிகள் : யுகபாரதி
பதிந்தவர் நாகை சிவா @ 9:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, D இமான், யுகபாரதி, ஜாவித் அலி
Saturday, December 29, 2012
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்
பதிந்தவர் நாகை சிவா @ 9:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, கிருஷ்ணராஜ், சத்யன், சினேகன், யுவன் சங்கர் ராஜா, வேல் முருகன்
Friday, December 28, 2012
அந்த காண்டாமணி
பாண்டி மலையாளம் காசி ராமேஸ்வரம்
கருவநாதன் தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன்
உனக்குள்ள அடக்கம்ப்பா
ஆடி வெள்ளி பூத்திருக்கு உச்சி பூஜை காத்திருக்கு
ஏத்துக்கிட வெளிய வா வெளிய வா வெளிய வா
விரு விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
அந்த காண்டாமணி ஒசை கேட்டுருச்சு
எங்க கலியுகத்து சாமி வெளிய வா
எங்கு வாக்குப்படி ஆடி வெள்ளியில பூசை ஏத்துக் கொள்ள
சாமி வெளிய வா
பேய்காமன அடக்கி வைச்ச விருமாண்டிய
பேச்சியம்மா கூப்பிடுறா
சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு
சத்தியத்தை காத்துப்புடு
அந்த காண்டாமணி ஒசை கேட்டுருச்சு
எங்க கலியுகத்து சாமி வெளிய வா
விரு விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
எங்கு வாக்குப்படி ஆடி வெள்ளியில பூசை ஏத்துக் கொள்ள
சாமி வெளிய வா
உதவ கரம் கொடுத்த சாமியே உன்னை தான்
ஒடுக்கி அடைச்சது பாவம்
சண்டப்ப சண்டக்காணும் மறுபடியும் எழுந்தா
தஞ்சமா நாங்க எங்கே போவோம்
திக்கத்த ஏழைக்குங்க உன்னை விட்டால்
கஷ்டத்தில் கை கொடுக்க யாரு இருக்கா
பிள்ளை செஞ்ச குத்தம் எல்லாம்
உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா
குறை ஏதும் இல்லாத சாமியே
எங்க தெய்வமுனு எங்களுக்கு காமி
அந்த காண்டாமணி ஒசை கேட்டுருச்சு
எங்க கலியுகத்து சாமி வெளிய வா
எங்கு வாக்குப்படி ஆடி வெள்ளியில பூசை ஏத்துக் கொள்ள
சாமி வெளிய வா
பேய்காமன அடக்கி வைச்ச விருமாண்டிய
பேச்சியம்மா கூப்பிடுறா
சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு
சத்தியத்தை காத்துப்புடு
அந்த காண்டாமணி ஒசை கேட்டுருச்சு
எங்க கலியுகத்து சாமி வெளிய வா
படம் : விருமாண்டி (2004)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : இளையராஜா, கமல்ஹாசன், திப்பு, கார்த்திக்
வரிகள் : முத்துலிங்கம்
பதிந்தவர் நாகை சிவா @ 10:00 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, இளையராஜா, கமல்ஹாசன், கார்த்திக், திப்பு, முத்துலிங்கம்
Thursday, December 27, 2012
மாட விளக்கே மகராசி மண்ண
மாட விளக்கே
மகராசி மண்ண விட்டு போனீயோ
ஏண்டா காச வாங்கிட்டு எல்லாரும் பேசாம நிக்குறீங்க
அடிங்கடா கொட்ட
மாட விளக்கே மகராசி மண்ணை விட்டு போனீயே
சொர்ண நிலாவே சொந்தம் விட்டு சொல்லாம போனீயே
வானம் ஏறி போனவளே வந்தவழி திரும்புவீயோ
அடி ஆத்தாடி வாய் வயித்துல அடிக்குறேன்
இப்போ வார்த்தை வராம துடிக்குறேன்
நீ பழகியதெல்லாம் நினைக்குறேன்
இப்போ ரத்த கண்ணீர வடிக்கிறேன்
படம் : விருமாண்டி
பாடியவர் : தேனி குஞ்சாரம்மா
பதிந்தவர் நாகை சிவா @ 4:00 PM 0 பின்னூட்டங்கள்
வகை இளையராஜா, தேனி குஞ்சாரம்மா, நாட்டுப்புற பாடல்கள், முத்துலிங்கம்
மாட விளக்கே யாரு
மாட விளக்கே யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா
மாட விளக்கே யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா
மல்லிக்கை பூவை யாரு இப்போ வேலியில சூட்டுனா
கிழக்கே விடியலயே மேற்கால தான் கருத்திடுமா
ஆத்தாடி
பொத்தி வளர்த்தது போதுமா
என்னை ஒத்தையில் விட்டது நியாயமா
நீ ஒஞ்சி நின்னது ஏன்னம்மா
இப்போ சாஞ்சி கிடக்குற தாங்குமா
மாட விளக்கே யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா
வேலை வெட்டி இல்லாத வெட்டிப்பையன் நானு
வாய கட்டி வளர்த்தது எல்லாம் ஆனது என்ன வீணு
ஆறாக நீ ஓட உதவாக்கரை நானு
ஈரம் இல்லா நெஞ்சானாலும் ஊத்துடி கண்ணு
வளர்த்த கடன் தீர்க்கலையே வார்த்தை சொல்லி போகலையே
நீ எனக்கு செஞ்தெல்லாம் சொல்லி அழ கூடலையே
ஆத்தா நீ நெனச்சதுன்ன சொல்லு நிம்மதி இல்லை
பொத்தி வளர்த்தது போதுமா
என்னை ஒத்தையில் விட்டது நியாயமா
நீ ஒஞ்சி நின்னது ஏன்னம்மா
இப்போ சாஞ்சி கிடக்குற தாங்குமா
மாட விளக்கே யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா
மல்லிக்கை பூவை யாரு இப்போ வேலியில சூட்டுனா
கிழக்கே விடியலயே மேற்கால தான் கருத்திடுமா
ஆத்தாடி
பொத்தி வளர்த்தது போதுமா
என்னை ஒத்தையில் விட்டது நியாயமா
நீ ஒஞ்சி நின்னது ஏன்னம்மா
இப்போ சாஞ்சி கிடக்குற தாங்குமா
படம் : விருமாண்டி (2004)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கமல்ஹாசன்
வரிகள் : முத்துலிங்கம்
பதிந்தவர் நாகை சிவா @ 9:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, இளையராஜா, கமல்ஹாசன், முத்துலிங்கம்
Wednesday, December 26, 2012
உன்ன விட இந்த உலகத்தில்
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்லை
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்லை
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்லை யாருமில்லை
வாக்கப்பட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
என்னை விட உன்ன சரி வர புரிஞ்சிக்க யாருமில்லை எவருமில்லை
உன்ன விட
என்ன விட
அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் கொளத்து உடும்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலைபாயுது
நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து சோடி சேருது
சேர்த்து வைச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது
என்ன புது தாகம் அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காணா கனா வந்து கொல்லுது
இதுக்கு பாரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா
உன்ன விட
காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கு அது கோயில் மணி
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி
போத்திகிற நமக்கு அது மூடு துணி
உன்ன விட
ஒங்கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமிய
என்ன கேட்குற சாமிய
நூறு ஜென்மம் உன் கூட
போதுமா
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய
காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும் என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கனும்இருக்கணும் கலக்கணும்
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்லை
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்லை யாருமில்லை
வாக்கப்பட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
படம் : விருமாண்டி (2004)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கமல்ஹாசன், ஸ்ரேயா கோஷல்
வரிகள் : கமல்ஹாசன்
பதிந்தவர் நாகை சிவா @ 9:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, இளையராஜா, கமல்ஹாசன், ஷ்ரேயா கோஷல்
Tuesday, December 25, 2012
இழப்பதற்கு எதுவும் இல்லை
இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு துணியும் பொழுதிலே
கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றும் இல்லையே
இடை விடாத முயற்சி என்றும் பொய்த்ததில்லையே
தொலைத்தது கிடைத்திடாமல் நினைத்தது நடந்திடாமல்
இலக்குகள் முடிவதில்லை தோற்பதில்லை வெற்றியே
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு துணியும் பொழுதிலே
கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றும் இல்லையே
இடை விடாத முயற்சி என்றும் பொய்த்ததில்லையே
தொலைத்தது கிடைத்திடாமல் நினைத்தது நடந்திடாமல்
இலக்குகள் முடிவதில்லை தோற்பதில்லை வெற்றியே
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
அச்சம் என்பது எந்த நொடியும் நம்மை விழுங்கும் மறவாதே
உச்சம் என்பது எட்டும் வரையில் கண்கள் உறங்க நினையாதே
அறிவெனும் ஆயுதம் நமதுயிர் காக்குமே போரை ஏற்போமே
தடைகளை மீறினால் அரியணை ஏறலாம் ஒரு கை பார்போமே
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
உண்மை என்பது நம்மை தொடரும் உள்ள வரையில் துணிவோமே
நம்பி செய்திடும் எந்த செயலும் நன்மை பயக்கும் அறிவோமே
தெளிவுடன் தேடினால் எதனையும் காணலாம் பாதை மாறாதே
ஒரு முறை தேறினால் தலைமுறை வாழுமே வேர்வை காயாதே
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
படம் : சாட்டை (2012)
இசை : இமான்
பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம், திவ்யா, சாய், வெங்கட், ஹரிப்ரியா, அஸ்வத்
வரிகள் : யுகபாரதி
Monday, December 24, 2012
எம்.ஜி.ஆர் - இன்னும் எத்தனைக் காலம் தான்
எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாக பலதொழில் பயிலுவோம்
கருத்தாக பலதொழில் பயிலுவோம்
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினை போக்குவோம்
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினை போக்குவோம்
இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
அதில் ஆனா கலைகளை சீராக பயில்வோம்
அதில் ஆனா கலைகளை சீராக பயில்வோம்
கேளிக்கையாகவே நாளிதை போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாக போற்றுவோம்
இன்னும் எத்தனைக் காலம் தான்
இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இந்த நாட்டிலே இந்த நாட்டிலே
படம் : மலைக்கள்ளன்
இசை : சுப்பைய்யா நாயுடு
பாடியவர் : செளந்தர்ராஜன்
வரிகள் : ராமய்யா தாஸ்
பதிந்தவர் நாகை சிவா @ 4:00 PM 5 பின்னூட்டங்கள்
வகை 1950's, MGR, TM சௌந்தர்ராஜன், TN ராமய்யா தாஸ், சுப்பையா நாயுடு
எம்.ஜி.ஆர் - உண்டாக்கி விட்டவர்கள்
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
கொண்டாடும் போது ஒரு நூறு பேர்
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
கொண்டாடும் போது ஒரு நூறு பேர்
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்
இவன் தேறாத வைத்தியத்தை சேர்ந்து படித்தான்
படித்தான் முடித்தான் ஹோய்
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்
இவன் தேறாத வைத்தியத்தை சேர்ந்து படித்தான்
படித்தான் முடித்தான்
பிறர் நோய் தீர்க்கும் வைத்தியசன்
நோய் தீர்க்க மாட்டாமல்
பாய் போட்டு தூங்குதப்பா
உயிரும் பேயோடு சேர்ந்தப்பா
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்
எந்த காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்
எந்த காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
நல்ல சேதி சொல்லும் ஜோசியர்க்கும்
நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து விட்டதடியோ
கணக்கில் மீதி வைக்கவில்லை அடியோ
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டது போல வேலி எடுத்தான்
எடுத்தான் முடித்தான் ஹோய்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டது போல வேலி எடுத்தான்
அதில் எட்டு அடுக்கு மாடி வைத்து
கட்டிடத்தை கட்டி விட்டு
எட்டு அடிக்குள் வந்து படுத்தான்
மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
கொண்டாடும் போது ஒரு நூறு பேர்
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர்
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்
கொண்டாடும் போது ஒரு நூறு பேர்
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
படம் : முகராசி
இசை : மகாதேவன்
பாடியவர் : செளந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்
பதிந்தவர் நாகை சிவா @ 9:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1960's, KV மகாதேவன், MGR, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்
Sunday, December 23, 2012
தேவனின் கோவில் மூடிய நேரம்
தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே
நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி
பிறந்தே வாழும் நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி
இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் பறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி
(தேவனின்)
ஒருவழிப்பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்
நானோர் கண்ணீர் காதலி
(தேவனின்)
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:00 PM 3 பின்னூட்டங்கள்
வகை 1980's, இளையராஜா, கங்கை அமரன், சித்ரா
பீட்சா - எங்கோ ஓடுகின்றாய்
எங்கோ ஓடுகின்றாய்
ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால்
பக்தி பாடுகின்றாய்
ஓ ஆசை இல்லா
நெஞ்சம் கொண்ட
ஜீவன் இல்லை
ஓ ஆசை வந்தால்
நெஞ்சுக்குள்ளே
ஜீவன் இல்லை
தண்ணீரில் நீ தீக்குளிப்பாய்
கண்ணீரில் உன் கால் நனைப்பாய்
கானல் நீரும் தாகம் தீர்க்கும்
காலம் வந்தால் பேயும் தாக்கும்
கண்கள் மூடிக்கொண்டால்
ஓ ஆசை இல்லா
நெஞ்சம் கொண்ட
ஜீவன் இல்லை
ஓ ஆசை வந்தால்
நெஞ்சுக்குள்ளே
ஜீவன் இல்லை
படம்: பீட்சா
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடல்: அருண் ராஜா
பாடியவர்கள்: அல்போன்ஸ் ஜோசப், தர்ஷனா
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 3:00 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, அருண் ராஜா, சந்தோஷ் நாராயணன், தர்ஷனா
பீட்சா - ராத்திரியை ஆளும் அரசன்
Rathiri - Arath
Rathiri - Rap
ராத்திரியை ஆளும் அரசன்
எனை மிஞ்ச இணை எவனென்று
யுகங்கள் தேடிடும்போது
முதல் முறை எனை வெல்ல வா
தட்டிப் பறிக்கவே
எட்டிப் பிடிக்கிறேன்
எட்டிப் பிடித்து நான்
வெட்டி முடிக்கிறேன்
போதை தரும் கோப்பை இங்கே
கோப்பையும் போதை தேடுதே
கோழை அவன் நெஞ்சம் என்றும்
காகிதக் கோட்டை போலவே
பட்டப்பகலிலும் முட்டி முளைக்குதே
நட்டநடுவிலே தூக்கம் கலைக்குதே
போதை தரும் கோப்பை இங்கே
கோப்பையும் போதை தேடுதே
கோழை அவன் நெஞ்சம் என்றும்
காகிதக் கோட்டை போலவே
படம்: பீட்சா
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடல்: அருண் ராஜா
பாடியவர்: ஹரிசரண்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 12:33 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, அருண் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஹரிச்சரண்
அந்துருண்ட கண்ணழகி
பதிந்தவர் நாகை சிவா @ 10:00 AM 0 பின்னூட்டங்கள்
Saturday, December 22, 2012
சித்திரை நிலா - கடல்
சித்திரை நிலா ஒரே நிலா
பரந்த வானம் படைச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையிலே நிக்குதுடே
நீ கூட ஒத்தையில நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டு வச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா
மனிதன் நினைத்தால் வழி பிறக்கும்
மனதிலிருந்தேஒளி பிறக்கும்
புதைக்கின்ற விதையும் முயற்சிகொண்டால் தான்
பூமியும் கூட தாழ் திறக்கும்
எட்டு வை மக்கா
எட்டு வச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா
கண்களில் இருந்தே காட்சிகள் தோன்றும்
களங்களிலிருந்தே தேசங்கள் தோன்றும்
துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும்
தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும்
சூரியன் மறைந்தால் விளக்கொன்று சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும்
மரமொன்று விழுந்தால் மறுபடி தழைக்கும்
மனமின்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும்
பூமியைத் திறந்தால் புதையலும் இருக்கும்
பூக்களைத் திறந்தால் தேன்துளி இருக்கும்
நதிகளை திறந்தால் கழனிகள் செழிக்கும்
நாளையைத் திறந்தால் நம்பிக்கை சிரிக்கும்
படம்: கடல்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 9:00 PM 2 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, AR ரஹ்மான், விஜய் யேசுதாஸ், விஜய் ஜேசுதாஸ், வைரமுத்து
காற்றிலே நடந்தேனே - ஆதிபகவன்
காற்றிலே நடந்தேனே
காதலை அளந்தேனே
நீ தொட பறந்தேனே
நான் எனை வியந்தேனே
ஐயோ ஐயோ மேகம் போலே
கலைந்து கலைந்து போகிறேன்
மெய்யோ பொய்யோ தோணவில்லை
ரசிக்கும் கவிஞன் ஆகினேன்
விண்மீன் முதுகில் ஏறினேன்
நூறு கண்டம் தாவினேன்
உன்னில் உன்னில் மூழ்கினேன்
உயிரே உயிரே ரெண்டானதே
இளமை உடைந்து திண்டாடுதே
பாறை கரைந்து பாழானதே
பார்வை நான்கும் கொண்டாடுதே
வானம் எந்தன் தலை தட்டுதே
வார்த்தை என்னுள் கவி கட்டுதே
நீயும் நானும் கேட்காமல் நாம் ஆனதேன்?
மூச்சுக் காற்றிலே நுழைந்தாயே
பூச்சுப் பூட்டுகள் திறந்தாயே
நீ யாரடா தேடினேன் முகவரிதானே
வாய் கூசுதே உன் பேரை தான் பேசுதே
சாரலில் நான் காய்கிறேன் உன் விழி குடைதானா
ஊமையாய் நான் தேய்கிறேன் உன் மொழி விடைதானா
ரசித்து கவியை நாடினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன்
மின்னல் முதுகில் ஏறியே நானும் கண்டம் தாண்டினேன்
படம்: ஆதிபகவன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: அறிவுமதி
பாடியவர்கள்: உதித் நாராயணன், ஸ்வேதா பண்டிட்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 3:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, அறிவுமதி, உதித் நாராயண், யுவன் ஷங்கர் ராஜா, ஸ்வேதா பண்டிட்
காதல் எந்தன் காதல் - மூன்று பேர் மூன்று காதல்
காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரீல் மீன்கள் துள்ளி
வந்தால் இன்பமே
ஒருகணம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறுகணம் ஏங்கிட வைத்தவன்
காதல் செய்யும் இம்சை போல
வேறு ஏதும் இல்லையே
ஆசை ஏணி பாம்பு உள்ளே
பரமபதம்தான் வாழ்க்கையே
ஒருமுறை உந்தன் தோளில்
சாய்ந்திட வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம்
சொக்கிப் போவேன்
விரல்களைக் கோர்த்து செல்லும்
வரம் கொடு போதுமே
வேறு என்ன வேண்டும் அன்பே
செத்துப் போவேன்
விரும்பிய உன்னைத் தொட்ட காற்றும்
வழியில் தொலையாமல் என்னைத் தொடுமோ?
வாசம் தருமோ
ஐயோ என்ன ஆகுமோ!
படம்: மூன்று பேர் மூன்று காதல்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: நேகா பசின்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 12:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, நா. முத்துக்குமார், நேகா பஸின், யுவன் ஷங்கர் ராஜா
நண்பா வா நண்பா
Friday, December 21, 2012
ஆஹா காதல் - மூன்று பேர் மூன்று காதல்
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே
அதே பேரில் என் பெயர் சேர்க்கின்றதே
வினாத்தாளில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியால்
நதியில் விழும் இலை இந்த காதலா
கரையைத் தொட இத்தனை மோதலா
விழுந்தது நானா? எழுந்திடுவேனா?
எழுந்திடும்போதும் விழுந்திடுவேனா?
உனைப் பார்ப்பதை நானறியேன்
உன்னைப் பார்க்கிறேன் வேறறியேன்
என்னுடன் நீயா உன்னுடன் நானா
நானே நீயா நீயே நானா
இது என்ன ஆனந்தமோ
தினம் தினம் சுகம் சுகம்
எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அதுதான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா கிடைத்திடுவேனா?
கிடைத்திடும்போதும் தொலைந்திடுவேனா?
பெண்கள் மனம் ஒரு ஊஞ்சலில்லை
ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா வருவது நானா
திசையறியாது திரும்பிடுவேனா
காதல் பொன்னூஞ்சலில் அசைவது சுகம் சுகம்
படம்: மூன்று பேர் மூன்று காதல்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்:நந்தினி ஶ்ரீகர்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:00 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, நந்தினி ஸ்ரீகர், நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா
நெஞ்சுக்குள்ள - கடல்
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன் இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?
வெல்லப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குள்ள நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான்
அப்பறமா குனியலையே! குனியலையே!
குடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே
பட்சி உறங்கிருச்சு
பால் தயிராத் தோஞ்சிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூடத் தூங்கிருச்சு
காசநோய்க்காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்த மக
அரை நிமிசம் தூங்கலையே!
ஒரு வாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே!
ஏழை இளஞ்சிறுக்கி
ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே!
படம்: கடல்
இசை:ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: சக்திஶ்ரீ கோபாலன்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 4:43 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, AR ரஹ்மான், சக்திஸ்ரீ, வைரமுத்து
அன்பின் வாசலே - கடல்
நீ இல்லையேல்
நான் என் செய்வேன்?
அன்பின் வாசலே
அன்பின் வாசலே
எமை நாளும் ஆளும் உருவை
மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும்
உனதே என்போம்
நாளங்கள் ஊடே
உனதன்பின் பெருவெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்
நீயே எமதன்னமாக
நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீ நிறைந்தாய் மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே
மீண்டும் உனை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்
ஹோ வான் மண் நீர் தீ...
எல்லாம் நீ தானே
சீற்றம் ஆற்றும்
காற்றும் நீ தானே
கண்ணீரைத் தேக்கும்
என் உள்ளத்தாக்கில்
உன் பேரைச் சொன்னால்
பூப்பூத்திடாதோ
பூவின் மேலே
வண்ணம் நீ தானே
வேரின் கீழே
ஜீவன் நீதானே
அன்பின் வாசலே
அன்பின் வாசலே
படம்: கடல்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: மதன் கார்க்கி
பாடியவர்: ஹரிசரண்
நன்றி: http://karky.in
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 1:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, AR ரஹ்மான், மதன் கார்க்கி, ஹரிச்சரண்
அடி ராங்கி ராங்கி
அடி ராங்கி ராங்கி ராங்கி
பதிந்தவர் நாகை சிவா @ 10:00 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, D இமான், சந்தோஷ் ஹரிஹரன், யுகபாரதி
Thursday, December 20, 2012
அடியே - கடல்
மனச தொறந்தாயே... நீ
எங்கிருந்து வந்தாயோ நீ?
அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?
பள்ளம் குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே - இந்த
காட்டுப் பய ஒரு ஆட்டுக்குட்டிப் போல
உன் பின்ன சுத்துறேனே
அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?
மீனத் தூக்கி ரெக்க வரஞ்ச
வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்கப் பழக்குறியே
எங்கிருந்து வந்தாயோ நீ?
அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?
உன் கண்ணால கண்ணாடி செஞ்சு
என் அச்சத்தக் காட்டுறியே
என் தூசுத் துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளையடிக்குறியே
அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?
பூமி விட்டு சொர்க்கத்துக்கு - நீ
வானவில்லில் பாத விரிச்ச
மனச கயிறாக்கி
இழுத்துப் போறாயே நீ
சொர்க்கம் விட்டு பூமி வந்தா
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தா
நான் விழிச்சுப் பாக்கையில
கலஞ்சு போவாயோ நீ?
அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?
படம்: கடல்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: மதன் கார்க்கி
பாடியவர்: சிட் ஶ்ரீராம்
நன்றி:http://karky.in
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:00 PM 1 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, AR ரஹ்மான், சிட் ஶ்ரீராம், மதன் கார்க்கி
ஏலே கீச்சான் - கடல்
ஏமா சீலா -நம்ம
கடலம்மா அள்ளித் தாரா
ஆமா சீலா - அவ
அலைவீசி சிரிக்குறா
ஏலே கீச்சான் வெந்தாச்சு - நம்ம
சூச பொண்ணும் வந்தாச்சு
ஏ ஈசா வரம் பொழிஞ்சாச்சு
வா லே! கொண்டா லே!
கட்டு மரம் கொண்டா லே!
குண்டு மீன அள்ளி வரக் கொண்டா லே!
ஏளா! பாய் விரிச்சா... அய்யோ
வாவல் வாசந் தேடி
வாரான் கீச்சான் - ஒங் கீச்சான்
ராவோட கூவை கிட்ட கண்ண கேப்பான்
றாலோட றாலோட மீச ஒண்ண கேப்பான் கீச்சான்
புலிவேசம் போட்டு வருவான் கீச்சான்
ஏ சடசட சடவென காத்துல ஆடும்
என் சாரம் ஏளா ஒம் பேர பாடாதா?
ஒரு ஒரு ஒரு ஒரு ஓ...
ஒருதரம் ஒருதரம் ஒரச
பொசுக்குன்னு உசுப்புற உசுர
ஒனக்காக வலையொண்ணு வலையொண்ணு
விரிச்சிருக்கேன் நான் தவமிருக்கேன் - நீ
விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு
முழிச்சிருக்கேன் நான் அரக் கிறுக்கேன்
நீ வேணா சொன்னா
எங்க எங்க போவானோ தோமா?
ஒத்த அலையில மெதக்குற
ஓடம்போல் உன் நெனப்புல
நான் மெதந்து கெடக்குறேன்
ஓரப் பார்வையால சிரிச்சா என்ன?
நீ திடுதிடுக்க - என்ன
சுத்தி வளைக்க - நான்
வெலவெலக்க - தல
கிறு கிறுக்க
நீ பாத்த நொடியே - ஹே
பித்துப் பிடிக்க - என்
தூத்துக்குடியே ஒன்ன
தூக்கி இழுக்க! தூக்கி இழுக்க!
ஏ இத்தன மச்சம் - ஹே
எத்தன லட்சம் - அத
எண்ணி முடிச்சே - நாம
தூக்கம் தொலச்சோம்
ஏ ஒத்த பிடியா - நீ
மொத்தம் கொடுத்த - என்
அன்ன மடியா - என்ன
வாரி எடுத்த! வாரி எடுத்த!
ஓ ஓ ஓ ஓ ஓ வா லே! கொண்டா லே!
ஏலம் போடக் கொண்டாலே!
போகும் மேகம் மீனத் தூவும் கொண்டா லே!
படம்: கடல்
இசை/பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: மதன் கார்க்கி
நன்றி: http://karky.in/
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 3:15 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, AR ரஹ்மான், மதன் கார்க்கி
சகாயனே சகாயனே
சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்க என் கன்னங்கள் பூக்க
நீ வயதுக்கு வாசம் தந்தாய்
சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே
பசி இன்றி போவதென்ன
பலமுறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல்
விழி ரெண்டும் கேட்பதென்ன
தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுத்தாயடா
தவணை முறையில் உனை நான் சிறை பிடித்தேனடா
பிள்ளை போலே என்னை கையில் ஏந்து
எல்லை ஏதும் இல்லை அன்பில் நீந்து நீந்து
சகாயனே சகாயனே
கனவிலும் காணாத வகையினில் உன் தோற்றம்
எனக்குள்ளே கூச்சல் போட
இது வரை கேட்காத இசை என உன் பேச்சு
அளவில்லா ஆட்டம் போட
இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா
மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம் குடுத்தாயடா
கள்ளப் பார்வை என்னை கொத்தி தின்ன
என்ன ஏது என்று உள்ளம் எண்ண எண்ண
சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்க என் கன்னங்கள் பூக்க
நீ வயதுக்கு வாசம் தந்தாய்
படம் : சாட்டை (2012)
இசை : இமான்
பாடியவர் : ஸ்ரேயா கோஷல்
வரிகள் : யுகபாரதி
பதிந்தவர் நாகை சிவா @ 10:00 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, D இமான், யுகபாரதி, ஷ்ரேயா கோஷல்
Wednesday, December 19, 2012
கடல் - மூங்கில் தோட்டம்
மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நெறஞ்ச மெளனம்
நீ பாடும் கீதம்
பெளர்ணமி இரவு
பனிவிழும் காடு
ஒத்தையடி பாதை
உன்கூட பொடி நட
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே
குளத்தாங்கரையிலே
குளிக்கும் பறவைக
சிறகு உலத்துமே
துளிக தெறிக்குமே
முன்கோபம் விடுத்து
முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க
நா உன்னை அணைக்க
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே
மரங்கள் நடுங்கும்
மார்கழி இருக்க
ரத்தம் உறையும்
குளிரும் இருக்க
உஷ்ணம் யாசிக்கும்
உடலும் இறுக்க
ஒத்தப் போர்வையில
இருவரும் இறுக்க
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே
படம்: கடல்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: அபய் ஜோத்பூர்கர், ஹரிணி
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 1:30 PM 1 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, AR ரஹ்மான், அபய் ஜோத்பூர்கர், வைரமுத்து, ஹரிணி
காதல் வந்து பொய்யாக
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்
உன் பார்வையிலே ஒரு மாற்றம் நடக்கும்
உன் வாழ்க்கையிலே இனி மௌனம் குதிக்கும்
உன் தேவதையை நீ காணும் வரைக்கும்
பல பூகம்பங்கள் உன் நெஞ்சில் வெடிக்கும்
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
ஒற்றை வார்த்தை பேசும் போதும்
கற்றை கூந்தல் மோதும் போதும்
நெற்றி பொட்டில் காய்சல் வந்து குடியேறும்
நண்பனோடு இருக்கும் போதும்
தன்னந்தனிமை நெஞ்சம் தேடும்
அங்கும் இங்கும் கண்கள் தேடி தடுமாறும்
கண்ணோடும் கனவோடும் யுத்தம் ஒன்று வந்திடுமே
கண்ணீரை தந்தாலும் காதல் இன்பம் என்றிடுமே
காதல் என்றும் கடலை போலே கரையை யாரும் கண்டதில்லை
காதல் கையில் மாட்டி கொண்டால் அய்யோ பிடிக்கும் பைத்தியமே
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
காற்றில் கையை வீசிட தோன்றும்
மேகம் பார்த்து பேசிட தோன்றும்
காதல் வந்து செய்யும் மாயம் புரியாதே
நேரம் கெட்ட நேரத்தில் எழுப்பும்
நடக்கும் போதே பறந்திட துடிக்கும்
காதலுக்கு காதல் செய்ய தெரியாதே
பறவைக்கு வேறாரும் பறக்க கற்று தருவதில்லை
நீயாக முன்னேறு நண்பன் உதவி தேவையில்லை
கஷ்ட நஷ்டம் கணக்கை பார்த்தால் இதயம் வாழ முடியாதே
தட்டு தட்டு மீண்டும் தட்டு காதல் கதவை திறந்திடுமே
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்
படம் : சுந்தரபாண்டியன் (2012)
இசை : ரகுநந்தன்
பாடியவர் : ஹரிசரண்
வரிகள் : நா. முத்துக்குமார்
பதிந்தவர் நாகை சிவா @ 10:00 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, NR ரகுநந்தன், நா. முத்துக்குமார், ஹரிச்சரண்
Tuesday, December 18, 2012
மழை மழை - மூன்று பேர் மூன்று காதல் (2012)
மழை மழை மழை ஓ மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு துரத்தும் மழை
பெண்ணே நீதான் என் மழை
நான் உன்னைப் பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டிப் பெய்தது மழை
நீ என்னைப் பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை
அலைஅலை எனத் தாக்குதே மழை தாக்குதே மழை தாக்குதே
நினை நினை எனக் கேட்குதே மனம் கேட்குதே மனம் கேட்குதே ஐயோ!
அணை அணை என கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே
அடிக்கொருமுறை கொஞ்சுதே உனைக் கொஞ்சுதே ஐயோ!
முத்தம் கேட்டால்
வெட்கம் தருவேன்
வெட்கம் கேட்டால்
வண்ணம் தருவேன்
காத்துக்கிடந்தால்
மெல்ல வருவேன்
தூக்கம் கெடுத்து
தொல்லை தருவேன்
கனவில் தொட்டால்
தள்ளிவிடுவேன்
நேரில் தொட்டால்
கிள்ளிவிடுவேன்
நீ அடங்காத என் ராட்சசி
பொய்கள் சொன்னால்
வாடிவிடுவேன்
மீண்டும் சொன்னால்
ஓடிவிடுவேன்
மழையில் வந்தால்
குடைகள் தருவேன்
மடியில் வந்தால்
உதைகள் தருவேன்
கெஞ்சிக் கேட்டால்
கொஞ்ச வருவேன்
கொஞ்சிக் கேட்டால்
கொஞ்சம் தருவேன்
நீ எனைக் கொல்லும் வனதேவதை
நீ உன் பாதியை என் பார்வையில் தேடினாய்
நான் என் மீதியைக் கண்டேனெனக் கூவினேன்
நெஞ்சமென்னும் தீவுக்குள்ளே காதல் பூக்க
வானும் மண்ணும் தீயும் நீரும்
நீயும் நானும் காதலாகி மேவியாட
காதலென்றால்
செல்லப்பார்வை
ஆசையென்றால்
கள்ளப்பார்வை
ஊடலென்றால்
கொஞ்சம் கோபம்
கோபமென்றால்
மீண்டும் ஊடல்
தேடலென்றால்
உன்னுள் என்னை
தேடி வந்தால்
தொலையும் பெண்மை
நான் தொலைந்தாலும் சுகம்தானடி!
தயக்கமென்றால்
இதழின் நடனம்
மயக்கமென்றால்
மனதின் நடனம்
கிரக்கமென்றால்
கண்ணின் நடனம்
கலக்கமென்றால்
நரம்பின் நடனம்
விருப்பமென்றால்
விழியின் நடனம்
நெருக்கமென்றால்
விரலின் நடனம்
இனி நெருங்காமல் நெருப்பில்லை
நீ எனக்காகவே உருவானவள் சிநேகிதி
என் எதிர்காலத்தின் முகம்தானடி கண்மணி
நேற்றை கொன்று இன்றை வென்று
நாளை செய்தால்
உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு
காதலாகி என்ன பேசும் ஈரக் காற்று
(மழை மழை)
படம்: மூன்று பேர் மூன்று காதல்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: நா.முத்துகுமார்
பாடியவர்கள்: கார்த்திக், ஸ்வேதா மேனன்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:19 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, கார்த்திக், நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஸ்வேதா
பீட்சா - தினக்குதா
நினைக்குதே மனமதே மணக்கவே
திளைக்குதே கலந்திடப் பிடிக்குதே
கனக்குதே தலைக்கு மேலே
நமக்கென கிடைத்தது வாழ்வே!
தினக்குதா!
கடக்கும் பாதையில்
கிடக்கும் வேலியே
மடக்கும் போதையில்
அடக்கும் போலியே
துடிக்கும் ஓசையில்
படிக்கும் நேரமே
முடித்துத் தீரவே
அடுத்து மாறுமே
தினக்குதா!
அதற்குப்பின் எதற்குமே உதவுமா எதுவுமே!
படம் : பீட்சா (2012)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடல் : முத்தமிழ்
பாடியவர் : கானா பாலா
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 3:21 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, கானா பாலா, சந்தோஷ் நாராயணன், முத்தமிழ்
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
அட உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
ஆத்து வெள்ளம் நீ என்றால் ஆடும் தோணி நானே
ஆட விட்டு அக்கரையில் கொண்டு சேர்ப்பாயே
பட்டாம்பூச்சி நான் என்றால் எட்டு திசை நீயே
எந்த பக்கம் போனால் என்ன நீதான் நிப்பாயே
மெட்டி வாங்கி தர சொல்லி குட்டி விரல் கூத்தாட
பட்டு சேல பல நூறு பாழா கிடக்கு
பக்கத்துல நான் தூங்க பத்துமடை பாய் வாங்க
நித்தம் நித்தம் நான் ஏங்க நாளும் போகுது
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
முள்ளு தச்ச காயத்த முத்தம் இட்டு ஆத்த
பத்து ஊரு தாண்டி வந்து பக்கம் நிப்பாயே
பட்ட பகல் என்றாலும் பித்தம் தலைக்கேறும்
என்னை சீண்டி ஏதோ ஏதோ பேச வைப்பாயே
பத்து தல பாம்பாக வட்டமிடும் என் ஆச
மொட்டு போல முகம் கூப்பி உள்ளம் மறைப்பேன்
நெஞ்சுக்குழி மேலாட தாலி கொடி நான் தேட
மஞ்சத்தண்ணி நீரோட எப்போ வருவ
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
படம் : சுந்தரபாண்டியன் (2012)
இசை : ரகுநந்தன்
பாடியவர் : சைந்தவி
வரிகள் : தாமரை
பதிந்தவர் நாகை சிவா @ 10:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, NR ரகுநந்தன், சைந்தவி, தாமரை
Monday, December 17, 2012
ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன் ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தேன்
தப்பி தொலைந்தேன் போக துடித்தாய்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடி பிடித்தேன்
எனக்கென பதுக்கிய கனவுகள் முதன்முறை தரை விட்டு பறக்குது உன்னாலே
உனக்கென செதுக்கிய நினைவுகள் முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே
எத்தனை வேகம் சென்றாலும் நிற்பதாய் தோன்றும் உன்னாலே
எத்தனை பக்கம் வந்தாலும் வெட்கமே இல்லை உன்னாலே
கண்களில் மின்னிடும் காதலை நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனை பாய்ச்சிட அதை நீயே சொன்னாய் மறுமுறை
ரெக்கை விரித்தேன் ரெக்கை விரித்தேன்
எனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தாய்
தப்பி தொலைந்தேன் போக துடித்தேன்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடி பிடித்தாய்
பகலிலே சுவரை வெறித்தேன்
தெருவிலே தனியே சிரித்தேன்
கழன்றதாய் பேரும் எடுத்தேன் எல்லாம் உன்னாலே
இரவிலே தூக்கம் தொலைத்தேன்
படுக்கையில் சுற்றி அலைந்தேன்
வகுப்பிலே தூங்கி வழிந்தேன் எல்லாம் உன்னாலே
கட்டம் போட்ட ஒன்றா இல்லை கோடு போட்ட ஒன்றா
எந்த சட்டை போட என முட்டிக் கொண்டேன் உன்னாலே
பச்சை வண்ண பொட்டா இல்லை மஞ்சள் வண்ண பொட்டா
நெற்றி மேலே ரெண்டு நான் ஒட்டிக் கொண்டேன் உன்னாலே
கண்களில் மின்னிடும் காதலை நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனை பாய்ச்சிட அதை நீயே சொன்னாய் மறுமுறை
கவிதைகள் கிறுக்கிட வேண்டாம்
கசக்கியும் எறிந்திட வேண்டாம்
எறிந்ததை மீண்டும் பிரித்து சிரித்திட வேண்டாமே
காற்றிலே முத்தம் வேண்டாம்
வார்த்தையில் அர்த்தம் வேண்டாம்
சுற்றிலும் சத்தம் போடும் ஏதும் வேண்டாமே
சாலை ஓர தேநீர் அது கோப்பை ரெண்டில் வேண்டாம்
பேருந்தெறும் போதும் இனி டிக்கெட் ரெண்டு வேண்டாமே
பாறை மேலே ஏறி நம் பேரை தீட்ட வேண்டாம்
எல்லை கொஞ்சம் மீற இனி அச்சம் ஏதும் வேண்டாமே
கண்களில் மின்னிடும் காதலை நீ அன்றே கண்டாய் ஒருமுறை
நெஞ்சினில் தேனை பாய்ச்சிட அதை நானே சொன்னேன் மறுமுறை
ரெக்கை முளைத்தேன் ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தேன்
தப்பி தொலைந்தேன் போக துடித்தேன்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடி பிடித்தாய்
இனி இனி தனித்தனி உலகினில் இருவரும் உலவிடும் நிலையே வேண்டாமே
இனி இனி மனதினில் தேக்கிட காதல் உண்டாக்கிடும் வலியே வேண்டாமே
ஓரக் கண் பார்வை வேண்டாமே ஓரடி தூரம் வேண்டாமே
மாறிடும் நேரம் வேண்டாமே ஊரிலே யாரும் வேண்டாமே
கண்களில் மின்னிடும் காதலை நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனை பாய்ச்சிட அதை நானே சொன்னேன் மறுமுறை
படம் : சுந்தரபாண்டியன்
இசை : ரகுநந்தன்
பாடியவர்கள் : ஜி.வி. பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்
வரிகள் : மதன் கார்க்கி
பதிந்தவர் நாகை சிவா @ 10:00 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, GV பிரகாஷ் குமார், NR ரகுநந்தன், மதன் கார்க்கி, ஷ்ரேயா கோஷல்
Sunday, December 16, 2012
மனம் விரும்புதே உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்து இளமார்பில் ஒட்டியது ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே மனம் ஏங்குதே
மீண்டும் காண மனம் ஏங்குதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவை போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்று வரை நம்பலையே
என் காதலா என் காதலா
நீ வா நீ வா என் காதலா
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
படம் : நேருக்கு நேர் (1997)
இசை : தேவா
பாடியவர் : ஹரிணி
வரிகள் : வைரமுத்து
Saturday, December 15, 2012
பெத்து எடுத்தவதான்
பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா
பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா
பிள்ளையின் மனசு பித்தாச்சு இங்க பெத்தவ மனசு கல்லாச்சு
இன்னொரு மனசு என்னாச்சு அது முறிஞ்சு போன வில்லாச்சு
பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
தத்து கொடுத்துப்புட்டா
வயிற்றுல வளர்த்த புள்ள வந்து நிக்க வாசலில்லை
மடியிலே வளர்ந்ததுக்கு இங்கிருந்த ஆசையில்லை
மகனா பொறந்ததுக்கு தொட்டணைக்க தாயுமில்லை
மகனா வளர்ந்த புள்ள துள்ளுறது நியாயமில்லை
தொட்டிலில் நாம் கிடந்தா சோகம் வந்து சேர்வதில்லை
தோளிலே வாழும் வரை துன்பமுன்னு ஒண்ணுமில்லை
கட்டில் பார்த்த பின்னே காண்பதெல்லாம் எங்கு சொல்ல
கண்ணுல ஆறிருக்கு போவதுக்கு தோணி இல்லை
சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி முடிச்சிரலாம்
நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்
காவிரி கங்கை ஆறுகள் போல கண்களும் இங்கே நீராட
பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா
தலையில் வகிடெடுத்த தங்க விரல் பார்த்தேனே
தலையில எழுதி வைச்ச அந்த விரல் பார்த்தேனா
கிளியை வளர்த்தெடுத்தா கேள்வியது கேட்காது
புலியை வளர்த்தெடுத்தா பாசமுன்னு பார்க்காது
சொல்லத்தான் வார்த்தையின்றி தாய் மனசு நோகுமங்கே
சொல்லவே வாயுமின்றி ஓர் மனசு வாடுமிங்கே
சொல்லிலே வேலெடுத்து வீசுகின்ற சேயுமங்கே
மௌனத்தை பேசவிட்டா மாறிவிடும் யாவும் இங்கே
ரெண்டு கிளியிருக்கு ஒண்ணு தனிச்சிருக்கு
பெத்த கிளி அதுக்கு எந்த துணையிருக்கு
ஊர்ல எங்கே நாட்டுல எங்கே காட்டுங்க எங்க தாய்போல
பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா
பிள்ளையின் மனசு பித்தாச்சு இங்க பெத்தவ மனசு கல்லாச்சு
இன்னொரு மனசு என்னாச்சு அது முறிஞ்சு போன வில்லாச்சு
பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா
படம் : வேலைக்காரன் (1987)
இசை : இளையராஜா
பாடியவர் : மலேசியா வாசுதேவன்
வரிகள் : மு. மேத்தா
பதிந்தவர் நாகை சிவா @ 8:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1980's, இளையராஜா, மலேசியா வாசுதேவன், மு.மேத்தா, ரஜினி
Friday, December 14, 2012
தோட்டத்துல பாத்தி
ஏங்குதே மனம் இன்ப நாளிலே
தூங்குதே ஜனம் இந்த ராவிலே
தாங்குதே குணம் போதை வாழ்விலே
ஏங்குதே தினம் பாடும் பாடலை
ஏங்குதே மனம் தூங்குதே ஜனம்
தாங்குதே குணம் ஏங்குதே தினம்
தினம்
தினம் தினம் ஒரு கூட்டம் மயில்களின் நடமாட்டம்
மலர்களும் தலையாட்டும் இரவுகள் அரங்கேற்றம்
கனவுகள் வளரும் கவிதைகள் மலரும்
இது தான் நம் தோட்டம்
கனவுகள் வளரும் கவிதைகள் மலரும்
இது தான் நம் தோட்டம்
இது தான் நம் தோட்டம்
தோட்டம்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடுமே கெட்டுடுமே
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடுமே கெட்டுடுமே
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சிங்காரமா ஊரு இது சென்னையின்னு பேரு
ஊரை சுத்தி ஓடுதைய்யா கூவம் ஆறு
சிங்காரமா ஊரு இது சென்னையின்னு பேரு
ஊரை சுத்தி ஓடுதைய்யா கூவம் ஆறு
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
கூவமுன்னு பேரு சொன்னா சொன்னவங்க வாய் மணக்கும்
கண்ணகி இங்க வந்தா கண்ணடிக்கும் கூட்டமுங்க
மதுரைய எரிச்சவளே மனசு மாற கூடுமுங்க
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
புத்தனும் இப்போ பட்டணம் வந்தா போதை மரத்துல ஏறிக்குவான்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடுமே கெட்டுடுமே
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடுமே கெட்டுடுமே
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
கல்லூரிக்கு போனா கன்னி பொண்ணு மீனா
கல்லூரியப் படிச்சதுல கர்ப்பம் ஆனா
கல்லூரிக்கு போனா கன்னி பொண்ணு மீனா
கல்லூரியப் படிச்சதுல கர்ப்பம் ஆனா
கட்சிகளும் வாங்கி இங்கே கட்டிடங்கள் வச்சிருக்கு
கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம் கட்டாந்தரை தான் இருக்கு
கல்யாண மண்டபங்கள் கட்டி வைச்சு காத்திருக்கு
கைகளிலே காசு இல்ல கன்னி பொண்ணு மூத்திருக்கு
இன்னமும் கதைய சொல்லட்டுமா
குப்பைய கூடையில் அள்ளட்டுமா
இன்னமும் கதைய சொல்லட்டுமா குப்பைய கூடையில் அள்ளட்டுமா
சொல்வது ஒண்ணு செய்வது ஒண்ணு பட்டணம் கைகளை சுட்டதண்ணே
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடுமே கெட்டுடுமே
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடுமே கெட்டுடுமே
படம் : வேலைக்காரன் (1987)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், சைலஜா
வரிகள் : மு. மேத்தா
பதிந்தவர் நாகை சிவா @ 10:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP சைலஜா, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, மு.மேத்தா, ரஜினி
Thursday, December 13, 2012
உலக வாழ்க்கையே
பதிந்தவர் நாகை சிவா @ 4:00 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, ரஜினி
நம்ம சூப்பர் ஸ்டார் - Star Rocks But Super Star Rules
There was a huge applause
பதிந்தவர் நாகை சிவா @ 10:00 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, அல் ரூபின், ஆல்பம், ஐஸ்வர்யா, சுட்டி அரவிந்த், ரஜினி, ராகவ் மகேஷ்
Wednesday, December 12, 2012
இது ரஜினி சாங் - தலைவா ஹப்பி பர்த்டே
தலைவா ஹப்பி பர்த்டே
நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி
This song is dedicated to one and only super star Rajinikanth
ஹப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்
ஹப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்
ஹப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்
ஹப்பி பர்த்டே
சென்னை ரஜினி
நெல்லை ரஜினி
கோவை ரஜினி
மதுரை ரஜினி
நேற்று சூப்பர் ஸ்டார்
இன்று சூப்பர் ஸ்டார்
நாளை சூப்பர் ஸ்டார்
என்றும் சூப்பர் ஸ்டார்
வானம் பூராவும் தேடி போனாலும் சூப்பர் ஸ்டார் போலே ஸ்டார் இல்லை மாமா
இந்தி ஆனாலும் ஜப்பான் போனாலும் சூப்பர் ஸ்டாருக்கு கட் அவுட் மாமு
ரஜினி தான் ஸ்டைலு
ரஜினி தான் தில்லு
ரஜினி தான் ஸ்பீடு
ரஜினி தான் தூளு
சென்னை ரஜினி
நெல்லை ரஜினி
கோவை ரஜினி
மதுரை ரஜினி
நேற்று சூப்பர் ஸ்டார்
இன்று சூப்பர் ஸ்டார்
நாளை சூப்பர் ஸ்டார்
என்றும் சூப்பர் ஸ்டார்
தலைவா Happy Birthday
ரசிகன் இன்னிக்கு ஆனந்தமே
உனக்கு வாழ்த்து சொல்ல உலகமே கொண்டாடுது
நல்லவனை கண்டுப்படி நண்பனாக்கி கட்டிப்பிடி
வாழ்க்கையை நீ நல்லா படி வாழ்ந்திடனும் நல்லப்படி
சொல்லுறத செஞ்சிமுடி செய்யுறத சொல்லி அடி
உள்ளத நீ உள்ள படி உண்மை சொல்லி வாழ்ந்து முடி
விடிய முன்னே முழிக்கனும் வியர்வை சிந்தி உழைக்கனும்
பெத்தவள மதிக்கனும் யாரு இது சொன்னா
ரஜினி தான் ஸ்டைலு
ரஜினி தான் தில்லு
ரஜினி தான் ஸ்பீடு
ரஜினி தான் தூளு
சென்னை ரஜினி
நெல்லை ரஜினி
கோவை ரஜினி
மதுரை ரஜினி
நேற்று சூப்பர் ஸ்டார்
இன்று சூப்பர் ஸ்டார்
நாளை சூப்பர் ஸ்டார்
என்றும் சூப்பர் ஸ்டார்
கஷ்டப்பட்டு மேல ஏறு கீழ உள்ள ஆள பாரு
ஏழ பாழ எல்லாத்தையும் கை கொடுத்து தூக்க பாரு
உன்னதெல்லாம் உன்னதில்லை என்னதெல்லாம் என்னதில்லை
ஆசைய நீ தள்ளி வச்சு அள்ளிக் கொடு தப்பே இல்ல
கோபத்தை நீ குறைக்கனும் அன்ப மட்டும் குடுக்கனும்
குடும்பத்தை நீ நினைக்கனும் யார் இதை சொன்னா
ரஜினி தான் ஸ்டைலு
ரஜினி தான் தில்லு
ரஜினி தான் ஸ்பீடு
ரஜினி தான் தூளு
சென்னை ரஜினி
நெல்லை ரஜினி
கோவை ரஜினி
மதுரை ரஜினி
நேற்று சூப்பர் ஸ்டார்
இன்று சூப்பர் ஸ்டார்
நாளை சூப்பர் ஸ்டார்
என்றும் சூப்பர் ஸ்டார்
வானம் பூராவும் தேடி போனாலும் சூப்பர் ஸ்டார் போலே ஸ்டார் இல்லை மாமா
இந்தி ஆனாலும் ஜப்பான் போனாலும் சூப்பர் ஸ்டாருக்கு கட் அவுட் மாமு
ரஜினி தான் ஸ்டைலு
ரஜினி தான் தில்லு
ரஜினி தான் ஸ்பீடு
ரஜினி தான் தூளு
போடு போடு நல்லா போடு
சந்தோசமா ஆடி பாடு
சூப்பர் ஸ்டாருனு நல்லா இருக்க
வாடா நண்பா வாழ்த்து பாடு
தலைவா ஹப்பி பர்த்டே
ஆல்பம் : இது ரஜினி சாங் (2012)
இசை : விஜய் அண்டனி
பாடியவர்கள் : விஜய் அண்டனி, எம். சி. ஜாஸ்
வரிகள் : அண்ணாமலை
பதிந்தவர் நாகை சிவா @ 10:56 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2010's, 2012, MC Jazz, அண்ணாமலை, ஆல்பம், ரஜினி, விஜய் ஆண்டனி
தி பாஸ்
சிவாஜி ரைட்டா
ஷேகா பைட்டா
சிவாஜி ரைட்டா
ஷேகா பைட்டா
சிவாஜி ரைட்டா
வாடா வாங்கிக்கடா
பீடா போட்டுக்கடா
வாடா வாடா வாங்கிக்கடா
வாயில் பீடா போட்டுக்கடா
போடா போடா பொழச்சு போடா
பொடவ வாங்கி கட்டிக்கடா
ஷேகா பைட்டா
சிவாஜி ரைட்டா
ஷேகா பைட்டா
சிவாஜி ரைட்டா
வாடா வாடா வாங்கிக்கடா
வாயில் பீடா போட்டுக்கடா
போடா போடா பொழச்சு போடா
பொடவ வாங்கி கட்டிக்கடா
ஷேகா பைட்டா
சிவாஜி ரைட்டா
ஷேகா பைட்டா
சிவாஜி ரைட்டா
சச்சின் அடிச்சா சிக்ஸ்ர்தான்டா
சிவாஜி அடிச்சா பஞ்சர்தான்டா
சிங்கம் கூட ஜுஜுபிதான்டா
சிவாஜி வாயில் ஜிலேபிதான்டா
பவர் ரேஞ்சர் ஜெட்டிக்ஸ்தான்டா
பத்து விரல் ஜிமிக்ஸ்தான்டா
பாயும் வேகம் ஜெட்லீதான்டா
பஞ்ச் வச்சா சட்னிதான்டா
திக் திக் திக் திக்
நெஞ்சில் திக் திக்
படம் : சிவாஜி (2007)
இசை : ரஹ்மான்
பாடியவர்கள் : நரேஷ் ஜயர், ப்ளேஸ், ரகீப் ஆலம்
வரிகள் : நா. முத்துக்குமார், ப்ளேஸ்
பதிந்தவர் நாகை சிவா @ 4:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், நரேஷ் ஐயர், நா. முத்துக்குமார், ப்ளேஸ், ரகீப் ஆலம், ரஜினி
ஒரு கூடை சன்லைட்
ஒரு கூடை சன்லைட்
ஒரு கூடை மூன்லைட்
ஒன்றாக சேர்ந்த கலர் தானே என் வொயிட்
அப்ப தான் வெச்ச கருப்பே
இப்ப தான் செக்கச்சிவப்பே
எப்போதும் பச்சைத்தமிழன்
இப்போ நான் வெள்ளைத்தமிழன்
அட அட அட அசத்துது ஸ்டைல்
நட நட நட நடப்பதும் ஸ்டைல்
கட கட கட சிரிப்பதும் ஸ்டைல்
பட பட பட பேச்சிலும் ஸ்டைல்
கலக்குது உன் ஸ்டைல்
இழுக்குது உன் ஸ்டைல்
ஜெயிக்குது உன் ஸ்டைல்
குழந்தைக்கும் உன் ஸ்டைல்
இளசுக்கும் உன் ஸ்டைல்
பெருசுக்கும் உன் ஸ்டைல்
அட அட அட அசத்துது ஸ்டைல்
நட நட நட நடப்பதும் ஸ்டைல்
கட கட கட சிரிப்பதும் ஸ்டைல்
பட பட பட பேச்சிலும் ஸ்டைல்
சுட சுட சுட தொடுவதும் உன் ஸ்டைல்
தட தட தட அதிரடி ஸ்டைல்
அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல்
வர வர எல்லாமே ஸ்டைல்
ஒரு கூடை சன்லைட்
ஒரு கூடை மூன்லைட்
ஒன்றாக சேர்ந்த கலர் தானே என் வொயிட்
ரகளை செய் ரௌத்திரவீரா
மிரள செய் மன்மதமாறா
கனித்தேடும் கலகக்காரா
கண்தடவும் கந்தலமாறா
கிண்னென்ற கன்னியை பூரா
தின்னின்று வெள்ளைக்காரா
அடடா நீ கைத்தடி மிட்டாய்
நடந்தாயே நீ பறக்கிற தட்டாய்
இருந்தாயே நீ உருவத்தில் எட்டாய்
மலர்ந்தாயே நீ மொழுமொழு மொட்டாய்
ஐஸ் நதியை நரம்புக்குள் விட்டாய்
ஜி என்னும் சொல்லிலே சுட்டாய்
ஈபில் டவர் இதயத்தில் நட்டாய்
பட்டாசாய் பட்டாய்
ஹீரோ ஹீரோ ஹீராதி ஹீரோ
ஸ்டாரோ ஸ்டாரோ நீ சூப்பர் ஸ்டாரோ
ஒரு கூடை சன்லைட்
ஒரு கூடை மூன்லைட்
ஒன்றாக சேர்ந்த
அப்ப தான் வெச்ச கருப்பே
இப்ப தான் செக்கச்சிவப்பே
எப்போதும் பச்சைத்தமிழன்
இப்போ நான் வெள்ளைத்தமிழன்
படம் : சிவாஜி (2007)
இசை : ரஹ்மான்
பாடியவர்கள் : சுரேஷ் பீட்டர்ஸ், ரவி கோட்டி, தன்வி, ப்ளேஸ்
வரிகள் : பா. விஜய்
பதிந்தவர் நாகை சிவா @ 1:00 PM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், சுரேஷ் பீட்டர்ஸ், தன்வி, பா. விஜய், ப்ளேஸ், ரவி கோட்டி, ரஜினி
நான் பொல்லாதவன்
நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்
வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால் நான் என்ன செய்வேனடி
நானுண்டு வீடுண்டு நாடுண்டு வாழ்வுண்டு என்றே தான் வாழ்ந்தேனடி
நாளாக நாளாக தாளாத கோபத்தில் நான் வேங்கை ஆனேனடி
நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய் மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்
நீ என்ன நான் என்ன நிஜம் என்ன பொய் என்ன சந்தர்ப்பம் சதிரானதடி
ஏதேதோ நடக்கட்டும் எங்கேயோ கிடக்கட்டும் எனக்கென்ன உனக்கென்னடி
எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்போர்கள் உலகத்தில் கிடையாதடி
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக இது போல ஆனேனடி
நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய் மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்
படம் : பொல்லாதவன் (1980)
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர் : பாலசுப்ரமணியம்
வரிகள் : கண்ணதாசன்
பதிந்தவர் நாகை சிவா @ 10:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1980's, MS விஸ்வநாதன், SP பாலசுப்ரமணியம், கண்ணதாசன், ரஜினி
Tuesday, December 11, 2012
வானத்தை பார்த்தேன்
வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்லே
உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க
வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
குரங்கிலிருந்து பிறந்தானா
குரங்கை மனிதன் பெற்றானா
யாரை கேள்வி கேட்பது நாதில்லையே
கடவுள் மனிதனை படைத்தானா
கடவுளை மனிதன் படைத்தானா
ரெண்டு பேரும் இல்லையே
ரொம்ப தொல்லையே
அட நான் சொல்வது உண்மை
இதை நீ நம்பினால் நன்மை
அட நான் சொல்வது உண்மை
இதை நீ நம்பினால் நன்மை
வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
அட பலநாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல
சில நாள் இருந்தேன் கருவறையில்
பல நாள் கிடந்தேன் சிறையறையில்
அம்மா என்னை ஈன்றது அமாவாசையாம்
அதனால் பிறந்தது தொல்லையடா
ஆனால் என் மனம் வெள்ளையடா
பட்டப்பாடு யாவுமே பாடந்தானாடா
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை
இல்லை போராட்டமே வாழ்க்கை
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை
இல்லை போராட்டமே வாழ்க்கை
வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல
உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க
வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல
அந்த நிம்மதி இங்கில்ல
படம் : மனிதன் (1987)
இசை : சந்திரபோஸ்
பாடியவர்: பாலசுப்ரமணியம்
வரிகள் : வைரமுத்து
பதிந்தவர் நாகை சிவா @ 10:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், சந்திரபோஸ், ரஜினி, வைரமுத்து
Monday, December 10, 2012
வானத்தை பார்த்தேன் (சோகம்)
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா
தங்கை என்னும் தங்கம் இங்கே
தீயில் வேகும் இப்போது
கண்கள் சிந்தும் கண்ணீராலே
எந்த தீயும் அணையாது
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா
மாமா அடிச்சாரோ மல்லிகைப்பூ செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு ஆக்கினைகள் செய்து வைப்பேன்
நிலைமையை சொல்ல முடியாது
நிலவுக்கு தற்கொலை கிடையாது
பூவை வைத்த பாவியே தீயை வைக்கிறாய்
நெருப்புக்கு உண்மை தெரியாது
தெரிந்தால் நெருப்பும் எரியாது
உண்மை வந்து பேசுமா ஊமை நானம்மா
மணநாள் பார்த்தவன் நானே
பிணநாள் பார்ப்பதும் நானே
மணநாள் பார்த்தவன் நானே
பிணநாள் பார்ப்பதும் நானே
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா
ஏற்கனவே அவன் எரித்து விட்டான்
எரித்ததை மறுபடி எரித்து விட்டான்
தர்மம் காக்கும் தேவனோ
தூங்கி போய் விட்டான்
வாழ்க்கை எதுவென்று புரியவில்லை
வாய் விட்டு அழவும் வசதியில்லை
வெந்த புண்ணில் அல்லவோ வேலும் பாய்ந்தது
விதியால் வந்ததா இல்லை
சதியால் வந்ததே தொல்லை
விதியால் வந்ததா இல்லை
சதியால் வந்ததே தொல்லை
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா
தங்கை என்னும் தங்கம் இங்கே
தீயில் வேகும் இப்போது
கண்கள் சிந்தும் கண்ணீராலே
எந்த தீயும் அணையாது
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா
படம் : மனிதன் (1987)
இசை : சந்திரபோஸ்
பாடியவர்: பாலசுப்ரமணியம்
வரிகள் : வைரமுத்து
பதிந்தவர் நாகை சிவா @ 10:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், சந்திரபோஸ், ரஜினி, வைரமுத்து
Sunday, December 9, 2012
கண்மணியே காதல்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மாநேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
இந்தப் பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய்
தேவையை நானறிவேன்
நாளொரு தேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களை நீயணைக்க வண்ண தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
படம் : ஆறிலிருந்து அறுபது வரை (1979)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள் :பஞ்சு அருணாச்சலம்
பதிந்தவர் நாகை சிவா @ 10:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1970's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, பஞ்சு அருணாச்சலம், ரஜினி, ஜானகி
Saturday, December 8, 2012
ராத்திரியில் பூத்திருக்கும்
பதிந்தவர் நாகை சிவா @ 10:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, புலமைப்பித்தன, ரஜினி, ஜானகி
Friday, December 7, 2012
ராஜா என்பார் மந்திரி
பதிந்தவர் நாகை சிவா @ 10:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1970's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, பஞ்சு அருணாச்சலம், ரஜினி
Thursday, December 6, 2012
ஒரு தங்கரதத்தில்
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
செம்மண்ணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது
தங்கை அல்ல தங்கை அல்ல தாயானவள்
கோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள்
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா
முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா
என் ஆலயம் பொன் கோபுரம்
ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேனேம்மா
தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேனேம்மா
மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன்
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
படம் : தர்மயுத்தம் (1979)
இசை : இளையராஜா
பாடியவர் : மலேசியா வாசுதேவன்
வரிகள் : கண்ணதாசன்
பதிந்தவர் நாகை சிவா @ 10:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1970's, இளையராஜா, கண்ணதாசன், மலேசியா வாசுதேவன், ரஜினி
Wednesday, December 5, 2012
நம்ம ஊரு சிங்காரி
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பாலாடை போலாடும் பாப்பா எப்பொதும் நான் சொன்னா கேப்பா
ராஜாவை பாக்காமல் ரோஜா ஏமாந்து போனாளே லேசா
நான் நாளை வச்சு தேதி வச்சு ஊரு விட்டு ஊரு வந்து
நீயின்றி போவேனோ சம்போ
நான் மூணு மெத்தை வீடு கட்டி மாடி மேல ஒன்ன வெச்சு
பாக்காமல் போவேனோ சம்போ
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
அன்பான உன் பேச்சு ராகம் நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல் இதிலென்ன இனிமேலும் ஊடல்
அந்த தேவதைக்கு நானும் சொந்தம் தேவனுக்கு நீயும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை
நானொன்று நீயொன்றுதாம்மா
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
படம் : நினைத்தாலே இனிக்கும் (1979)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர் : பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்
பதிந்தவர் நாகை சிவா @ 10:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1970's, MS விஸ்வநாதன், SP பாலசுப்ரமணியம், கண்ணதாசன், ரஜினி