Sunday, December 23, 2012

தேவனின் கோவில் மூடிய நேரம்





தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே


நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி
பிறந்தே வாழும் நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி
இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் பறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி

(தேவனின்)

ஒருவழிப்பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்
நானோர் கண்ணீர் காதலி

(தேவனின்)


படம்: அறுவடை நாள்
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, சித்ரா

வேணுவனம்:  தேவனின் கோவில்

3 Comments:

சுபத்ரா said...

மிக்க நன்றி!!!!!!!!!!!!!!!!

Guru said...

Manathai thota padal
pahirvuku nantri nanpa.

Anonymous said...

1.பிரிந்தே வாழும்
2.மறப்பதற்காக

Last 25 songs posted in Thenkinnam