Friday, January 30, 2009

919 திரு.கே.பாலசந்தர் படப்பாடல் தொகுப்பு



திரு.கே.பாலசந்தர் படப்பாடல் தொகுப்பு

//1. தாமரைக் கன்னங்கள், 2. கன்னி நதியோரம், 3. விண்ணுக்கு மேலாடை, 4. ஒரு நாள் யாரோ, 5. அடிப்போடி பைத்தியகாரி, 6. புன்னகை மன்னன் பூவிழி, 7. நானொரு சிந்து காவடி சிந்து.//

இந்த பாடல்கள் தான் ஒலிக்கோப்பில் வலம் வருபவை.

Get this widget | Track details | eSnips Social DNA


பல ஸ்வாரசியமான தகவல்களுடன் இயக்குநர் கே.பாலசந்தர் படங்களில் இருந்து பாடல்கள் தொகுப்பு தான் இந்த ஒலித்தொகுப்பு. நமது பல்சுவை தள வாத்தியார் ஐயா போல் எழுதலாம். நேரமின்மை என்ற காரணம் ஒரு புறம் இருந்தாலும். அமர்க்களமான பாடல்கள் இடையினில் நமது ”டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாரயாணா அவர்களின் குரலில் ஆச்சரியமான படத்தகவல்களை கேட்டு ரசிக்கும் அனுபவம் அலாதியானது. எழுத்தில் அந்த உணர்வுகளை வாத்தியார் போல் எல்லோரும்
எழுத்தில் வார்த்தை ஜாலங்களால் வடிக்க முடியாது. இருந்தாலும், அறிவிப்பாளர் எப்படி தகவல்களை தாராளமாக அள்ளித் தருகிறார் என்று கேட்டு அனுபவியுங்கள் அன்பர்களே.

முழுமூச்சோடு கேட்டு மகிழ்ச்சியோடு ஆனந்தமாக இருக்கும் இசையன்பர்களூக்கு இரண்டு போனஸ் பாடல்கள் ”மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் வைகை கரை காற்றே நில்லு, மற்றும் கேள்வி கேட்கும் நேரம் இது.”... ஆமாம் ஒலித்தொகுப்பின் இடையிடையே உங்கள் ஸ்வாரசியத்திரற்காக கேள்வியும் உண்டு. அந்த கேள்வி ”ஓஹோ ஹோ பிரம்மசாரி... ஹே ஹே பிரம்மச்சாரி” என்ற பாடலில் பிரம்மசாரி என்று கிண்டல் செய்து பாடி எந்த நடிகரை குறிப்பிடுகிறார்கள் அந்த நடிகர் யார்? ஏவி.எம்.ராஜன், முத்துராமன், ரவிச்சந்திரன் இந்த மூன்று நடிகர்களீல் ஒருவர். தெரிந்தால் தரலாமே இசையன்பர்களே.

Last 25 songs posted in Thenkinnam