இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே சுகம்
(இளமையெனும்..)
தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கனவம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா
(இளமையெனும்..)
அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தால் மறந்தால்
ஏள்வி எழுமுன் விழுந்தால்
எந்த உடலோ எந்த உறவோ
(இளமையெனும்..)
மங்கை இனமும் மன்னன் குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ
(இளமையெனும்..)
படம்: பகலில் ஒரு நிலவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்
Saturday, October 31, 2009
இளமையெனும் பூங்காற்று
பதிந்தவர் MyFriend @ 1:14 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், கண்ணதாசன்
Friday, October 30, 2009
மணியோசை கேட்டு எழுந்து
மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திரு தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்த கோயிலின் மணி வாசலை
இன்று மூடுதல் முறையோ
(மணியோசை..)
கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தாள் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் ஆ..
கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தாள் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்
பேசக் கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் முகம் வாடாலாமோ
வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ
(மணியோசை..)
பாதை மாறிப் போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போகும்போது
ராகம் தோன்றாது
பாதை மாறிப் போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போகும்போது
ராகம் தோன்றாது
பாடும் புது வீணை இங்கே
ராகம் அதில் மாறும் அங்கே
தாளம் மாறுமோ ராகம் சேறுமோ
(மணியோசை..)
படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
பதிந்தவர் MyFriend @ 1:05 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1980's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Thursday, October 29, 2009
கொத்தவரங்கா போல உடம்பு
அற்புதமான மயிலிறகு ஒலித்தொகுப்பு பாடகி ஜமுனாராணி அவர்களின் குரலும் அவரின் தகவல்களும் விவரித்து வழங்குகிறார் அறிவிப்பாளர் திரு.சசிக்குமார் அவர்களூக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.
1.ஆதிமனிதன் காதலுக்கு பின் >> 2. தடுக்காதே தடுக்காதே >> 3.தாகமும் சோகமும் தனித்திடும் >> 4.பக்கத்திலே கன்னிப்பெண் இருக்கு >> 5.நீயோ நானோ யார் நிலவே >>
6.கொத்தவரங்கா போல உடம்பு >> 7.பாலாற்றில் இரண்டு >> 8.குங்க்குமப்பூவே கொஞ்சும் புறாவே >> 9.புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்>> 10.மலைமுடியில் பனிமலையில் >> 11.டூயட் டூயட் பாடிடும் முதலிரவு.
|
For Download Click here
பதிந்தவர் Anonymous @ 6:42 PM 2 பின்னூட்டங்கள்
வகை வானொலி
ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா
ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அக்கம் பக்கம் யாருமில்லா அள்ளிக்கலாம் வாப்புள்ள
(ஏ ஆத்தா..)
ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம அணைக்கத் துடிச்சிக்கிறேன்
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு தனிச்சுப் படுத்திருக்கேன்
தவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேண்டாமா
தழும்பும் நெனப்பு அள்ளிக்கிறேன் நீவாம்மா
மாருல குளிருது செத்தேனா அணைச்சேனா
தீருமடி குளிரும் கட்டிப் பிடிச்சிக்க
(ஏ ஆத்தா..)
நான் போறேன் முன்னால நீவாடி பின்னால நாயக்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணால என்னாடி அம்மாலே ஆடுற ஆட்டத்துக்கு
சிரிச்ச சிரிப்புல சில்லறையும் சிதறுது
செவந்த முகங்கண்டு எம்மனசு பதறுது
ஒஅவழ வாயில தெரியுற அழகப்
பார்த்ததுமே மனசுங் கெட்டுத் தவிக்குது
(ஏ ஆத்தா..)
படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பதிந்தவர் MyFriend @ 1:56 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Wednesday, October 28, 2009
இதோ இதோ என் பல்லவி
இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ
(இதோ..)
என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலா
நான் காணும் கோலமோ
என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ
பசியென்பதே ருசியல்லவா
அது என்று தீருமோ
(இதோ..)
அந்த வானம் தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம்
நம் பாசம் மாறுமா
ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடலாகிறேன்
விதி மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் க்ஊடுமா
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா
(இதோ..)
படம்: சிகரம்
இசை: SP பாலசுப்ரமணியம்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 2:55 AM 7 பின்னூட்டங்கள்
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், சித்ரா, வைரமுத்து
Tuesday, October 27, 2009
இதழில் கதை எழுதும் நேரமிது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
(இதழில்..)
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுத
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திருமோ
காளை மனம் அதுவரை பொருத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
(இதழில்..)
தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும்
சுந்தர நிலவோ
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது
(இதழில்..)
படம்: உன்னால் முடியும் தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள் : கவிஞர் முத்துலிங்கம்
பதிந்தவர் MyFriend @ 1:46 AM 4 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, சித்ரா
Monday, October 26, 2009
என்ன சமையலோ
என்ன சமையலோ என்ன சமையலோ
எதிர்த்துக் கேட்க யாருமில்லை
என்ன சமையலோ
(என்ன..)
அண்ணி சமையல் தின்று தின்று மறத்து போனதே
என்னடி? நாக்கு.. மறத்துபோனதே
அடுத்த அண்ணி சமலை ருசிக்க ஆசை வந்ததே
அடியே மோகனா.. அடுப்படி எனக்கென்ன சொந்தமா
நீயும் வந்து சமைத்துபாரு
பேச்சை வளர்த்தால் உனக்கெங்கு கிடைத்திடும் சாப்பாடு
சமைத்துப்பாரடி..
சமைத்துக்காட்டுவோம்..
இஷ்டம் போல நாங்கள் இங்கே சமைத்து வெலுத்து கட்டுவோம்
கல்யாணி.. ராகம் போலவே சைவ பிரியாணி
தங்கை நீயும் கவனமுடன் கலைந்திடு அரிசியை
கல்யாணி.. கல் கல் ஆணி ஆணி.. கவனி கல்யாணி
கரிகரிசரிகம கரி காய்களும் எங்கே
கரி வேப்பிலை எங்கே
கரி கரி கரி கரி காய்களும் இங்கே
கரி வேப்பிலை இங்கே
மமமமமமமம மஞ்சள் பொடி எங்கே
மசாலா பொடி எங்கே
மமமமமமமம மஞ்சள் பொடி இங்கே
மசாலா பொடி இங்கே
பபபபபபக பருப்பு இருக்குதா
இருக்கு
கனி கனி கனி கனி கனி தனியா இருக்கா
நிநிநிநி கொஞ்சம் பொறு நீ
அடுப்பை கொஞ்சம் கவனி
கொதிக்கும் நீரில் அரிசியை போடு
வெந்தால் அதை நீ வடித்திடு
கிடைத்திடும் சாப்பாடு
சமைத்துக்காட்டுவோம்..
அப்பா வரும் நேரம் சகசகசகக்சகமாக
அப்பா வரு நேரம் சகமபதாகமப
ராகம் வசந்தா நானும் ருசித்து பார்க்க ரசம் தா
பாடு வசந்தா
சமகமகமகமகம வாசம் வருதே
மசாலா கரம் மசாலா
கமகமகமகமக வாசம் வருதே
சரிசரிசரிசரி விளையாட்டுகள் போதும்
கமகா பதனி சாதம் ரெடியா
சாதம் இருக்கு ரெடியா
ரசம் கொதிக்குது தனியா
சமையல் ரெடி
அவியல் ரெடி
சமையல் ரெடி
அவியல் ரெடி
வருவல் ரெடி
பொறியல் ரெடி
தகிந்திகத்தோம் தகிந்திகத்தோம்
முடிஞ்சு போச்சு
இலையை போடடி பெண்ணே
இலையை போடடி
சமைத்த உணவை ருசித்து பார்க்க
இலையை போடடி
படம்: உன்னால் முடியும் தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
பதிந்தவர் MyFriend @ 2:30 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, சித்ரா
Sunday, October 25, 2009
இதயம் ஒரு கோவில்
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்
(இதயம்..)
ஆத்மா ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது
(இதயம்..)
காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதங்கள்
ராம நாமன் மீதிலே நாடத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது
(இதயம்..)
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேறும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேரம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேரம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதுயிர் ஜீவன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே
(இதயம்..)
படம்: இதய கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், இளையராஜா
பதிந்தவர் MyFriend @ 1:14 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Saturday, October 24, 2009
சொந்த குரலில் பாட
சொந்த குரலில் பாட
ரொம்ப நாளா ஆசை
ஹெல்லோ சுசிலா ஆண்டி
ஹெல்லோ ஜானகி ஆண்டி
குயில் பாட்டு சித்ரா
எல்லோரும் என்னை மன்னியுங்கள்
(சொந்த..)
காற்றிலேறி பாட்டுப் பாட போகிறேன்
ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன்
வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன்
நிலாவில் சென்று நீர் அருந்தப் போகிறேன்
மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன்
முன்னூரு ஆண்டு இளமை வாங்கப் போகிறேன்
(சொந்த..)
இந்த பூமி பழைய பூமி அல்லவா
ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டு வா
ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா
ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா
(சொந்த..)
படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஷாலினி
பதிந்தவர் MyFriend @ 4:25 AM 0 பின்னூட்டங்கள்
Friday, October 23, 2009
சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
என் மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா
விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே
உன் மேல் நான் கொண்ட காதல்
என் மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ
போடா பொல்லாத பயா
நம் மேல் நம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா
(சுடிதார்..)
உன் பேரை சொன்னாலே
நான் திரும்பி பார்க்கிறேன்
உன் பேரை மட்டும்தான்
நான் விரும்பி கேட்கிறேன்
இருவர் ஒருவராய் இணைந்து விட்டோம்
இரண்டு பெயர் ஏனடி
உனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன்
உன்னையே கேளு நீ
அடி உன்னை நான் மறந்த வேளையில்
உன் காதல் மாறுமா
விடிகாலை தாமரை பூவிது
விண்மீனை பார்க்குமா
(உன் மேல்..)
பல கோடி பெண்களிலே
எதர்கென்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக
நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே
என்னை கொஞ்சம் தோன்றுமா
அடி போடி காதலிலே
நரை கூட தோன்றுமா
உன் கண்ணில் உண்டான காதலிது
மூடிவிடும் என்னமோ
என் நெஞ்சில் உண்டான காதலிது
நெஞ்சை விட்டு போகுமா
(உன் மேல்..)
(சுடிதார்..)
படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
வரிகள் : பழனி பாரதி
பதிந்தவர் MyFriend @ 3:19 AM 2 பின்னூட்டங்கள்
வகை 1990's, சாதனா சர்கம், பழனிபாரதி, வித்யாசாகர், ஹரிஹரன்
Thursday, October 22, 2009
Wednesday, October 21, 2009
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சுவரை கொல்லையிட்டு போனதில்லை
ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எறி அமிலத்தை வீசியவர் யாரும் இல்லை
(மேகங்கள்..)
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எறியும் உடலென்று தெரியும் பெண்ணே
என் இளமைக்கு தீயிட்டு எறிக்க மாட்டேன்
(மேகங்கள்..)
கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்
என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம்
அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்
(மேகங்கள்..)
செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி
எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன்
என் இரவினைக் கவிதையாய் மொழி பெயர்த்தேன்
(மேகங்கள்..)
மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடி போகாதே ஊமைப்பெண்ணே
நாம் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி
(மேகங்கள்..)
படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 4:34 AM 3 பின்னூட்டங்கள்
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், பரத்வாஜ், வைரமுத்து
Tuesday, October 20, 2009
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்பியூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆமபளையே தெரியாமன கொழந்தை பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
டப்பு மட்டும் வச்சிருந்தா போதும் நீங்க
தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்
பொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூபி எப்படி உய்யும்
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி
மஹா கணபதி மஹா கணபதி
கண்ணகிக்கு கோயில் கட்டும் கற்பு மிக்க நாடு இது
கற்புன்னா எத்தனை லிட்டர் புதுப்பொண்ணு கேட்குது
அட சேல பாவாட அது மலை ஏறிப்போச்சு
மிடியோடு சுடிதாறும் பொது உடையாகிப்போச்சு
போலி புன்னாக்கு பள்ளி எதுக்கு தந்தாலே பட்டம் இருக்கு
ஏட்டில் உள்ளது ஒழுக்கம் அது ரோட்டில் வந்தாலும் வழுக்கும்
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி
மஹா கணபதி மஹா கணபதி
அண்ணனுக்கு ஜே காதல் மன்னனுக்கு ஜே மரத் தமிழனுக்கு ஜே
நம்ம தலைவனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே
தலைவனுக்கு ஜே ஜே
திரையில பொய்களை சொன்னா சாதிசனம் நம்புது
கருத்துல்ள கவிஞன் சொன்னா காத தூரம் ஓடுது
அட சத்துள்ள தானியம் அது காணாமப் போச்சு
வெறும் பொக்குள்ள அரிசி பொது உணவாகிப் போச்சு
பாசம் கண்ணீரு பழைய தொல்லை
தாயே செத்தாலும் அழுவதில்லை
அட ஏழுக்குண்டலவாட இது இன்னைக்குத் திருந்தும் நாடா
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி
மஹா கணபதி மஹா கணபதி
(காலம்..)
படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 4:41 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1990's, பரத்வாஜ், வைரமுத்து, ஸ்ரீநிவாஸ்
Monday, October 19, 2009
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்த காற்றை நிருத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
(கண்ணாமூச்சி..)
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா
உன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா
(கண்ணாமூச்சி..)
வான்மழை விழும்போது மழைக்கொண்டு காத்தாய்
காண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா
தினம் ஊசலாதுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
(கண்ணாமூச்சி..)
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சித்ரா
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 3:47 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், சித்ரா, வைரமுத்து
Sunday, October 18, 2009
சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொள்ளோ
பட்டுக் கருநீலப் புடவை படித்த நல் வைரம்
நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி
சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி
வாழைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்
சாத்திரம் பேசுகிறாய் சாத்திரம் ஏதுகக்டி
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: பாரதியார்
பதிந்தவர் MyFriend @ 4:51 AM 1 பின்னூட்டங்கள்
வகை AR ரஹ்மான், பாரதியார், ஹரிஹரன்
Saturday, October 17, 2009
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி துடிக்குது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுருதியும் லயமும் ஒன்று சேர
(தகிட..)
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் துளிநீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
ஆ...
(தகிட..)
பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பெரிது
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்க வில்லை
(தகிட..)
படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 5:05 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, வைரமுத்து
Friday, October 16, 2009
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபினயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேரு பெருமே
ராகங்களே ஆ.. பழகுவதே ஆ..
ராகங்களே பழகுவதே பாவங்களே கலையசைவே
குழலோடு உயர்வுகள் இணைகின்ற தவமிது
(நாத..)
கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒலி தீபம்
நவரச நடனம் தனிதனி தனிசா
ஜதி தரும் அமுதம் தனிதனி தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்
அவன் விழி அசைவில் எழுதுளி அசையும்
பரதமென்னும் நடனம் ஆ..
பிறவி முழுதும் தொடரும் ஆ..
பரதமென்னும் நடனம் பிறவி முழுதும் தொடௌம்
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
திமிதிமி திமிதிமி
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாழும்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நடனம்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்
திரன திரன திரதிர திரதிர
(நாத..)
படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
பதிந்தவர் MyFriend @ 4:00 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1990's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Thursday, October 15, 2009
நான் காற்று வாங்கப் போனேன்
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனால்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான்..)
நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக்கொண்டு போகும்
நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக்கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப் போனால்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான்..)
நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும்
என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கிப் போனால்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான்..)
என் உள்ள என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
என் உள்ள என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனால்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான்..)
படம்: கலங்கரை விளக்கம்
பாடியவர்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்
பதிந்தவர் MyFriend @ 5:10 AM 3 பின்னூட்டங்கள்
வகை 1970's, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்
Wednesday, October 14, 2009
சரிகமபதநி இது சப்தஸ்வர ராகம்
இசை ஜாம்பவான்களில் முன்னோடி அமரர் ஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் ஓராண்டு முடிந்த நினைவில் அண்ணாரின் நினவலைகளில் மூழ்கடிக்க கோவை வானவில் பண்பலையில் ஓர் அற்புதமான ஒலித்தொகுப்பு ஒலிப்பரப்பட்டது. அண்ணாரின் பாடல்கள் பலதடவை கேட்டிருக்கிறோம், அவரின் இசையமைப்பில் மயங்கியிருக்கிறோம். இருந்தாலும் மீண்டும் அவரின் பாடல்களை ஒலித்தொகுப்பாகவும் அதுவும் அவரின் அபூர்வ தகவல்களூடன் கேட்கும் போது ஓர் இனம் புரியாத சோகம் நம் மனதையும் எட்டிப்பார்க்கும். அவரின் இனிமையான பாடல்களை நமக்காக தன் குல்கந்த் குரலால் ஒரே சீராக வெள்ளி நூல் பிடித்தார் போல் அண்ணாரின் தகவல் முத்துக்களை கோர்த்து ஓர் முத்து சரமாக வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் திருமதி.சாரதா ராமாநாதன். இந்த ஒலித்தொகுப்பி அதிகபட்ச பாடல்கள் இறைவன் முருகன் மீது பாடப்பட்ட பாடல்களாக தேர்ந்தெடுத்து ஒலிப்பரப்பினாலும் துவக்கமே என் அபிமான ஆதர்ஸ பாடகரின் என்றென்றும் என் மனதை கவர்ந்த சரிமகமபதநி என்று துவங்கி முடிவில் சீர்காழியாரின் தனம் தரும் கல்வி தரும் என்று அமர்க்களமாக முடித்து இனிமையான இசையுடைய பாடலை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்தார் போல் துவங்கியது அதி அற்புதம். இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் “இறைவனை வழி படவே முன்னோர்கள் இசையே சிறந்தது என்று சொன்னர்கள்” என்ற வரிகள் மூலம் இந்த ஒலித்தொகுப்பை கேட்கும் ஓவ்வொரு மானிடரையும் இறைவனுக்கு அருகில் கொண்டு சேர்த்த பெருமை அவரையே சாரும். அதற்கு ஆதார அச்சாணியாக இருந்த குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசை இனிய பாலமாக அமைந்தது என்றால் மிகையாகாது. இந்த ஒலித்தொகுப்பை அழகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திருமதி.சாராதா ராமாநாதன் அவர்களுக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.
|
1.சரிகமபதநி இது சப்தஸ்வர ராகம் >> 2.அகரமுமாகி அதிசயமாகி >> 3.குன்றகுடி குமரய்யா >> 4.கல்லேல்லாம் சிலை செஞ்சான் >> 5.திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய்
6.திருப்பதி மலைவாழும் வெங்கேடசா >> 7.உலகெல்லாம் படைத்தவளே ஓங்காரி
8.ஓம் நமச்சிவாய >> 9.இன்னிசையால் செந்தமிழாய் இருப்பவனே >> 10.மருதமலை மாமுனியே முருகய்யா >> 11.தனம் தரும் கல்வி தரும்.
பதிவிறக்கம் இங்கே
பதிந்தவர் Anonymous @ 1:12 PM 4 பின்னூட்டங்கள்
வகை வானொலி
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
(நான் பாடும்..)
உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னை காண வெண்ணிலா வந்து போனதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடி தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இன்று பாடுது
உடு இன்று குயிலைத் தானே தேடுது
(நான் பாடும்..)
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே யோகம் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது
காம்பு இங்கு வாடுது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது
(நான் பாடும்..)
படம்: இதய கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பதிந்தவர் MyFriend @ 4:16 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Tuesday, October 13, 2009
ஐந்தாம் படை - ஓரம்போ
பதிந்தவர் MyFriend @ 8:17 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2009, D இமான், அர்ஜித், கார்த்திகேயன், ரஞ்சித்
Monday, October 12, 2009
Sunday, October 11, 2009
Saturday, October 10, 2009
கண்டேன் காதலை - நான் மொழி அறிந்தேன்
நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வலியறிந்தேன் உன் பாதையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் விசையறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே
(நான் மொழி..)
நல்லதொரு பூவாசம் நான் அறிந்த வேளையில்
நந்தவனம் போன இடம் நான் அறிவேன்
என்னுடைய ஆதாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நான் அறியேன்
காற்றைப்போல வீசியவள்
கையை வீசிப் போனதெங்கே
ஊற்றைப் போலப் பேச்யவள்
ஊமையாகிப் போனதெங்கே
வாழ்வை மீட்டுக் கொடுத்தவளே
நீயும் தொலைந்துப் போனதெங்கே
(நான் மொழி..)
கண்ணிமையில் ஓர் ஆசை
ஊஞ்சலிடும் வேளையில்
உண்மைகளை உள்மனது காண்பதில்லை
புன்னகையில் நான் தூங்க
ஆசைப்பட்ட வேளையில்
உன் மடியின் தூங்கும் நிலை ஞாயமில்லை
மேகம் நீங்கிப் போகும் என
நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை
கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழ்ந்துப்போகும் வாழ்க்கையிலே
நமது கையில் ஏதுமில்லை
(நான் மொழி..)
படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சுரேஷ் வாட்கர்
பதிந்தவர் MyFriend @ 3:27 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2009, சுரேஷ் வாட்கர், வித்யாசாகர்
Friday, October 9, 2009
மனதிலே ஒரு பாட்டு
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழிப்பூவும் மலரும் காலை நேரம்
(மனதிலே ஒரு பாட்டு)
காற்று பூவோடு கூடும்
காதல் சங்கீதம் பாடும்
பார்த்து என்னுள்ளம் தேடும்
பாசம் அன்போடு மூடும்
இதயம் போடாத லயமும் கேட்டு
இளமை பாடாத கவிதை பாட்டு
இமைகளில் பல தாளம்
இசைகளை அது கூறும்
இரவிலும் பகலிலும்
உனைப் பார்த்து பார்த்து பார்வை வாடும்
(மனதிலே ஒரு பாட்டு)
நீயும் நூறாண்டு வாழ
நேரம் பொன்னாக மாற
நானும் பாமாலை போட
தோளில் நான் வந்து சூட
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
எழுந்து வா இளம்பூவே
இசையிலே அழைத்தேனே
இனிமைகள் தொடர்கதை
இனி சோகம் ஏது சேரும் போது
(மனதிலே ஒரு பாட்டு)
படம்: தாயம் ஒண்ணு
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:04 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1980's, P சுசீலா, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, கங்கை அமரன்
கண்டேன் காதலை - ஒரு நாள் இரவில்
ஒரு நாள் இரவில் பகல் போல் இரவில்
பருவம் பதினாறை கண்டேனே
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் மெழுகாகி நின்றேனே
கண்டேனே கடிக்கின்ற மானை
பெண்ணுக்குள் இருக்கின்ற மானை
பார்த்தாளேப் பயத்தோடும் சேனை
வெட்கத்தில் அடங்காத பெண்ணை
நெஞ்சத்தில் நெறுப்பேற்றும் கண்ணை
மொத்தத்தில் பறித்தாளே என்னை
(ஒரு நாள்..)
படப்படப்படபடப்பில் பார்த்தாளே பயமேற
தொடத்தொடத்தொடதொடப்பில் உள்நெஞ்சில் இரயில் ஓட
வாயாடிப் பெண்ணாக வந்தாயே
என் நெஞ்சைப் பந்தாடிச் சென்றாயே
(படபட..)
சின்னச்சின்னக் கண்ணாளே
சிக்க வச்சிப் போறாளே
சக்கரத்தைப் போலத்தான் சுத்த வச்சிப்போனாளே
முதல் அவளென முதல் முதல் அவளே என
முதல் முறைத் துளைத்தேனே
(ஒரு நாள்..)
வறேன் வறேன் வறேன் என்றாலும் மனதோடு வந்தாளே
சர சர சரவெடியாய் திரியேற்றிச் சென்றாளே
ஐயய்யோ ஐயய்யோ யாரோ நீ
என்னாளும் எனை ஆள வந்தாய் நீ
பஞ்சிருக்கும் பக்கத்தில் நெஞ்சிருக்கும் வெப்பத்தில்
காதல் என்னும் யுத்தத்தில் என்னை வென்றாள் மொத்தத்தில்
முதல் அவளென முதல் முதல் அவளே என
முதல் முறைத் தொலைத்தேனே
(ஒரு நாள்..)
படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: திப்பு
பதிந்தவர் MyFriend @ 3:36 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2009, திப்பு, வித்யாசாகர்
Thursday, October 8, 2009
கண்டேன் காதலை - வெண்பஞ்சு மேகம் என்பேனா
வெண்பஞ்சு மேகம் என்பேனா
பொன் மஞ்சள் நேரம் என்பேனா
பொன் தோன்றும் கோளம் என்பேனா
என் அன்பே என் அன்பே
சில்லென்ற சாரல் என்பேனா
சில்வண்டு பாடல் என்பேனா
உள்ளத்தின் தேடல் என்பேனா
என் அன்பே என் அன்பே
என்னென்று உன்னை சொவது
மொழி இல்லை சொல்ல என்னிடம்
பொய் இல்லை என்ன செய்வது
எனதுள்ளம் இன்று உன்னிடம்
உன்னாலே உன்னாலே உன்னாலே
மண் மேலே மண் மேலே மண் மேலே
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
ஓஹோ ஹோ ஹோ ஹோ
(வெண்பஞ்சு..)
கண்கள் இரண்டை காதல் வந்து சந்திப்பதேன்
இல்லை இல்லை தூக்கம் என்று வஞ்சிப்பதேன்
உள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள சிந்திப்பதேன்
கொள்ளைக்கொண்டு போனப்பின்பும் மண்ணிப்பதேன்
உன் கையை சென்றிடவே என் கைகள் நீளுவதேன்
உன் பேரைக் கேட்டதுமே தார்சாலைப் பூப்பது ஏன்
பூத்தப் பூக்கள் அடிக்கடி சிரிப்பதும் ஏன்
முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன்
என் ஆசைகள் உன்னை சொல்வது
நீ ஆயுதம் இன்றிக் கொல்வதேன்
(கண்டேன்..)
குட்டிக்குட்டி சேட்டை செய்து ஒட்டிக்கொண்டாய்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னை கொத்திச்சென்றாய்
தள்ளித்தள்ளிப் போனப் பின்னும் பக்கம் வந்தாய்
இன்னும் இன்னும் மேலே செல்ல இரக்கை தந்தாய்
எல்லாமே மாறிவிடும் சொன்னாலே மீண்டுவர
சொல்லாமல் மாற்றத்தைத் தந்தாயே நான் மலர
உன்னைவிட அதிசயம் உலகில் இல்லை
ஏய் அழகியே அவஸ்தையும் எதுவுமில்லை
என் தேவதை உன்னை எண்ணியே நான் நீங்கியதென்ன
என்னையே..
(கண்டேன்..)
படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: உதித் நாராயணன், கார்த்திக்
பதிந்தவர் MyFriend @ 3:45 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2009, உதித் நாராயண், கார்த்திக், வித்யாசாகர்
Wednesday, October 7, 2009
சின்னஞ்சிறு வயதில்
பதிந்தவர் Unknown @ 10:40 AM 5 பின்னூட்டங்கள்
வகை KJ ஜேசுதாஸ், SP சைலஜா, இளையராஜா
பட்டாளம் - திசையெட்டும் திரும்ப வைக்கும்
திசையெட்டும் திரும்ப வைக்கும்
இந்த அழகான வம்புக்கொரு அளவேயில்லை
கலை கட்டும் கலகலக்கும்
எங்க விளையாட்டு அத்தனைக்கும் அளவேயில்லை
(திசையெட்டும்..)
என் காலு சக்கரம்ங்க
தன்னை மறந்து சுத்துதுங்க
இத புரிஞ்சிக்காம ஏனோ எங்கள ஊரு திட்டுதுங்க
வேறு மொழியில வர படம் எடுப்போங்க
சிக்காமலே தப்புப்பண்ணி நாங்க
அத வகுப்பறையில சொல்லி சிரிப்போங்க
கள்ளம் இல்ல கபடம் இல்ல
ம்ம்.. அதனால..
உலகையே வெல்வோம் நாங்க
ஏதும் தப்பு இல்லை
இங்க எதுவும் தப்பு இல்ல
எங்க பறந்த மனசப் பழகிப்போகும் பாதை தப்பு இல்ல
எதுவும் தப்பு இல்ல
எங்க கனவும் தப்பு இல்ல
இந்த குறும்பு வயசு அறும்பும்போது
ஆசை தப்பு இல்ல
எங்க மேல தப்பு ஒன்னும் இல்ல
இளம் வயசு அப்படி கலங்கத் தேவையில்ல
சுத்தும் பூமியும் நின்னுப்போவதில்லை
பூமி ஈர்ப்பு அப்படி நிறுத்த யாருமில்ல
இல்லை இல்ல எதிரி இல்ல
அதனால அவதியும் படவே இல்ல
(திசையெட்டும்..)
படம்: பட்டாளம்
இசை: ஜாஸ்ஸி கிஃப்ட்
பாடியவர்கள்:
பதிந்தவர் MyFriend @ 7:38 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, ஜாஸ்ஸி கிஃப்ட்
Tuesday, October 6, 2009
பறந்து பறந்து எங்கும் திரியும்
துவக்கத்திலே அறிவிப்பாளர் திருமதி.சாராதா ஞானசேகரன் அவர்களின் தெளிவான உச்சரிப்பில் இனிமையான குரலில் தொகுத்து வழங்கிய திருவிளையாடல் காணீரோ >> பொன்னை விரும்பும் பூமியிலே >> வெற்றி மீது வெற்றி வந்து >> நிலவு மலரும் பாடுது >> எண்ணிரண்டு பதினாறு வயது >> எந்தன் பருவத்தின் கேள்விக்கு >> இன்பம் பொங்கும் வெண்ணிலா >> பறந்து பறந்து எங்கும் திரியும் >> நாளாம் நாளாம் திருநாளம் >> கண்களின் வார்த்தைகள் புரியாதோ >> அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் >> நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் >> போய்வா நதி அலையே. ஆகிய பாடல் தொகுப்பு தேன் கிண்ணத்திலே விழுந்த தேன் சொட்டுக்கள் எத்துனை ஆண்டு காலம் ஓடி மறைந்தாலும் நம் மனதின் அடித்தளத்தை விட்டு என்றும் விலகாத பாடல் தெரிவுகள். கேட்டு மகிழுங்கள் உங்கள் உணர்வுகளை எழுந்துங்கள்.
|
பதிவிறக்கம் இங்கே
பதிந்தவர் Anonymous @ 4:25 PM 0 பின்னூட்டங்கள்
வகை வானொலி
அந்திமயங்குதடி ஆசை பெருகதடி
வருகிறாள் உன்னை தேடி >> வண்ணத்தமிழ் செல்லக்கிளி >> கலையோடு கலந்தது >> யவ்வனமே யவ்வனமே >> கூவாமல் கூவும் கோகிலம் >> ஆனந்தம் இன்றே ஆரம்பம் >> அய்யாசாமி ஆவோஜி சாமி >> சின்னஞ்சிறு கிளியே கண்னம்மா >> கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் >> குயிலே குயிலே >> அந்திமயங்குதடி ஆசை பெருகதடி.
மேற்கண்ட 11 பாடல்களின் பல்லவிகளை கேளூங்கள் தலையை சுற்றுகிறதா? சுற்றும் சுற்றும் ஏன் சுற்றாது? இந்த பாடல்கள் தொகுப்பின் மூலாதாரமானவர் மதராஸி லலிதாங்கி வசந்த குமாரி அவர்கள் தான். இந்த பாடல்களெல்லாம் சிலவற்றை தவிர இப்போது தான் கேட்கிறேன். அறிவிப்பாளர் திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் சொல்லுவது போல வெல்வெட் குரலையுடைய எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் பாடல்களை தேன் கிண்ணத்தில் கேட்பதே நமக்கும் பெருமைதானே.அந்தகாலத்திலே ஆச்சரியப்படுத்தும் பாடல்களை இப்போது கேட்பதே அவருக்கு மரியாதை செய்வது போல் ஆகும். பாடல்களை மட்டுமல்லாது நீங்களூம் கேளூங்கள் எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் அபூர்வ தகவல்களூடன். மிக மிக அழகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களூக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி. அப்படியே உங்கள் உணர்வுகளையும் எழுதுங்கள்.
|
பதிவிறக்கம் இங்கே
பதிந்தவர் Anonymous @ 1:18 PM 0 பின்னூட்டங்கள்
வகை வானொலி
அமரன் - வசந்தமே அருகில் வா
பதிந்தவர் G3 @ 9:39 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், ஆதித்யன்
பட்டாளம் - எங்கோ பிறந்தோம்
எங்கோ பிறந்தோம்
இங்கே இணைந்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம்
உலகை உணர்ந்தோம்
எல்லாம் அறிந்தோம்
அன்பால் கலந்தோம்
(எங்கோ..)
கனவுகள் பழகிய நாட்களை
நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே
இனிவரும் அழகிய நாளிலும்
உன்னைப்பாடுவோம் பாடுவோம் பள்ளிகூடமே
(எங்கோ..)
குளிர்காலம் ஒன்று திரும்பும்போது வெயில்காலம்
வரும் வானம் போல வாழவேண்டும் விருந்து
கடல் நீரைச் சென்று சேரத்தானே நதி ஓடும்
அதைப்போல வாழ்வை ஏற்க வேண்டும் துணிந்து
வரும் காலம் நமைப்பேசும்
வருந்தாமல் வருவதை ஏற்போம்
இனிமேலும் தொடர்வோமே
வைத்த அன்புக்கேதும் சேதமில்லை
வாழும் நெஞ்சும் நெஞ்சிலே
(கனவுகள்..)
அவள் வாழ்ந்த அன்பில் ஆடிப்பாடி மகிழ்ந்தோமே
அதை ஆசைத்தீரப் பேசிப் பேசி சிரித்தோம்
மணி ஓசை வந்து காதில் சேர குளித்தோமே
அதை காதலோடு காலந்தோறும் நினைப்போம்
இணைந்தோமே இயல்பாக
இந்த பள்ளிக்கூடத் தோழமைக்கு
ஈடு இணை ஏதுமில்லை
படம்: பட்டாளம்
இசை: ஜாஸ்ஸி கிஃப்ட்
பதிந்தவர் MyFriend @ 7:44 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, ஜாஸ்ஸி கிஃப்ட்
Monday, October 5, 2009
கண்டேன் காதலை - ஓடோ ஓடோ ஓடோடி போறேன்
Get Your Own Hindi Songs Player at Music Plugin
ஓடோ ஓடோ ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி போறேன்
ஓடோ ஓடோ ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி போறேன்
கனவெல்லாம் விரலோடு
உலகெல்லாம் அழகோடு
இனி எல்லாம் அவனோடு
பூவாகும் தார் ரோடு
காற்றாகும் தார் ரோடு
மாற்றங்கள் வேரோடு
ஒ ஒ ஒ என் கூடு மாற போறேன்
ஒ ஒ ஒ என் வானம் மாற்ற போறேன்
(ஓடோ..)
ஹே என் பாத சிறகே
நீ என் முளைத்தாய் கேட்காமல் என்னை
ஹே என் மன சிறையே
நீ என் திறந்தாய் கேட்காமல் என்னை
ஒற்றை பின்னல் அவனுக்காக
நெற்றி போட்டும் அவனுக்காக
இன்னும் என்ன என்று என்னை கேட்காதே
இதழின் ஈரம் அவனுக்காக
மனதின் பாரம் அவனுக்காக
இன்னும் என்ன என்று என்னை கேட்காதே
ஒ ஒ ஒ என் கூடு மாற போறேன்
ஒ ஒ ஒ என் வானம் மாற்ற போறேன்
(ஓடோ...)
ஹே நீ சிரிப்பது ஏன் நீ நடிப்பது ஏன்
கேட்காதே என்னை
ஹே நீ கொதிப்பது ஏன் நீ மிதப்பது ஏன்
கேட்காதே என்னை
தானே பேசி நடக்கும் போதும்
(அவனுக்காக)
காற்றை முத்தம் கொடுக்கும் போதும்
(அவனுக்காக)
எனக்கு என்ன ஆச்சு என்னை கேட்காதே
கன்னம் சிவந்து நிற்கும் போதும்
(yeah yeah)
பற்றி கொண்டு கத்தும் போதும்
(oh yeah)
எனக்கு என்ன ஆச்சு என்னை கேட்காதே
ஒ ஒ ஒ என் கூடு மாற போறேன்
ஒ ஒ ஒ என் வானம் மாற்ற போறேன்
(ஓடோ...)
படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: லாவன்யா, ரேஷ்மி விஜயன்
வரிகள்: கார்க்கி span>
பதிந்தவர் MyFriend @ 2:37 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2009, கார்க்கி, ரேஷ்மி விஜயன், லாவன்யா, வித்யாசாகர்
Sunday, October 4, 2009
மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி - இருவிழி இரண்டும் கவிதைகள் படிக்க
இருவிழி இரண்டும் கவிதைகள் படிக்க
இதயத்தின் ஓசை இன்னும் அதிகரிர்க்க
கண்ணக்குழி சிரிப்பில் என்னை நானும் மறக்க
கால் கொலுசு சத்தத்தில் காய்ச்சல் அதிகரிக்க
என்னவளின் அழகை நான் சொல்ல
என்ன என்ன கவிதை நான் சொல்ல
என்னவளின் அழகை நான் சொல்ல
என்ன என்ன கவிதை நான் சொல்ல
சின்ன இதழ் சிரிப்பில் செந்தமிழும் பிறக்க
செம்பருத்திப் போல கன்னம் இரண்டும் சிவக்க
முத்துப் பற்கள் இரண்டும் மெல்ல நகம் கடிக்க
சிக்கிக் கொண்ட விரலில் என் மனதும் இருக்க
கால் குழலும் கணைந்து காற்றினிலே பறக்க
காயம் பட்டு மனதில் காதல் வலி எடுக்க
என்னவளின் அழகை நான் சொல்ல
என்ன என்ன கவிதை நான் சொல்ல
(என்னவளின்..)
செல்ல முகம் சினுங்க மெல்ல வளையல் குலுங்க
சொல்ல மொழி மறந்து என் மனது கிறங்க
மண்ணில் விழும் நிழலும் எந்தன் பிம்பம் மறக்க
உந்தன் பிம்பம் எழுந்து எண்ணில் வந்து கலக்க
ஜன்னல் வழித் தெரியும் உன் முகத்தைப் பார்த்து
தன் தலையைக் கவிழ்க்கும் யுத்தம் புது நாத்து
(என்னவளின்..)
படம்: மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி
இசை: செவி
பாடியவர்: ஹரிசரண்
Saturday, October 3, 2009
மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி - கலகலக்கும் எங்க காலேஜி
கலகலக்கும் எங்க காலேஜி
கலக்குவோமே நாங்க டினேஜி
ஹே கலகலக்கும் எங்க காலேஜி
ஹே கலக்குவோமே நாங்க டினேஜி
பொண்ணு ஒன்னு நடந்து போனா
எங்களைத்தானே கடந்துபோனா கானாப்பாடுவோம்
நாங்க சீனப்போடுவோம்
சும்மா சீனப்போடுவோம்
நட்புக்கில்லை ஆண்பால் பெண்பால்
என்று சொல்ல மறுக்கிறாங்க
பாய்ஸ்க்கூட பேசினாலே
லவ்வுன்னுதான் சொல்லிடுறாங்க
(நட்புக்கில்லை..)
ஆணுக்கு பெண்ணும் ஃப்ரண்ஷிப்பாக இருக்கக்கூடாதா
ஐயா இருக்கக்கூடாதா
நாங்க என்ன பசங்க கூட பேசக்கூடாதா
ஐயா பேசக்கூடாதா ஐயா பேசக்கூடாதா
பெரியவங்க செஒல்லக்கேட்டு
ஒழுக்கமாக நடந்தீங்கன்னா ஓகே ஓகே தான்
எல்லாம் ஓகே ஓகே தான்
எல்லாம் ஓகே ஓகே தான்
எல்லாம் ஓகே ஓகே தான்
காலேஜிதான் படிச்சு முடிச்சு
போகப்போறேன் ஃப்ளைட்டப்புடிச்சி
பத்துப்பாடம் எட்டு அரியர்
தூக்கப்போற நீயும் பொரியர்
(காலேஜிதான்..)
ஜெனிப்பர் லோபேஸ் போல ரொம்ப மினுக்குறியே
சும்மா பசப்புரியே வீணா அசத்துறியே
மைக்கல் ஜாக்சன் போல நல்லா நடக்குறியே
சும்மா குதிக்கிறியே ஆள மயக்குறியே
அண்ணன் தம்பி போல இருங்க
கெடுக்க வந்தா விரட்டி அடிங்க
உங்கள நம்பி இந்த உலகம் இருக்கு
வேணாம் வம்பு வழக்கு
(கலகலக்கும்..)
நீள கருணாகரனே நடராஜா நீலகண்டனே
ஐயா நீலகண்டனே அப்பா நீலகண்டனே
தீன் தீன் தீன் தீன் தீன் தீன் தீன் தீன் தீனகருணாகரனே
தீனக்கருணாகரனே நடராஜா நீலகண்டனே
நீலகண்டனே நீலகண்டனே
எப்படி..
படம்: மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி
இசை: செவி
பாடியவர்கள்: மகேஷ், சந்தானம்
Friday, October 2, 2009
மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி - புதுசா புதுசா புத்தம் புதுசா
மதுரை டூ தேனிக்கு போற வழியில
பஸ்ஸுக்குள்ள காதல் வந்துருச்சி
அந்த அம்பிகாவதி அமராவதி காதலைப்போல
இன்னும் ஒரு காதல் வந்துருச்சி
அய்லேசா அய்லேசா அய்லே அய்லே அய்லேசா
அய்லேசா அய்லேசா அய்லே அய்லே அய்லேசா
அய்லேசா அய்லேசா அய்லே அய்லே அய்லேசா
புதுசா புதுசா புத்தம் புதுசா
கதை சொல்லப் போறோம்
அதிலே அதிலே சிலுசிலுன்னு
காதல் சொல்லப்போறோம்
(புதுசா..)
ஓர் நாளில் காதல் பூக்குமா
ஓர் நாளில் காதல் பூக்குமா
ஓர் நாளில் காதல் பூக்குமா
ஓர் நாளில் காதல் பூக்குமா
சொல்லாமல் காதல் ஜெயிக்குமா
சொன்னாலும் காதல் கிடைக்குமா
பட்டாம் பட்டாம் பூச்சி
இது காதல் பட்டாம் பூச்சி
இதை எட்டி எட்டி தொட்டு
தொட்டு புடிச்சவன் நம்ம மச்சி
யாரு தச்ச சட்டை
எங்க தாத்தா தெச்ச சட்டை
யாரு சுட்ட தோசை
எங்க பாட்டி சுட்ட தோசை
(புதுசா..)
அய்லேசா அய்லேசா அய்லே அய்லே அய்லேசா
மதுரை டூ தேனி
படம்: மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி
இசை: செவி
பாடியவர்கள்: பாலாஜி, நவின், பிரியதர்ஷன்
பதிந்தவர் MyFriend @ 1:22 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2009, செவி, நவின், பாலாஜி, பிரியதர்ஷன்
Thursday, October 1, 2009
கூவாமல் கூவும் கோகிலம்
திருச்சி லோகநாதன்
வெள்ளிபனை மலை மீது உலாவுவோம் >> பேரின்பமே வாழ்விலே >> வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம் >> கூவாமல் கூவும் கோகிலம் >> புவிராஜன் உன் ஆருயிர் தோழியே >>
உலவும் தென்றல் காற்றினிலே >> அடிக்கிற கைதான் அணைக்கும் >> புருஷன் வீட்டில் வாழப்போகும் >> பொன்னான வாழ்வே மண்ணாகி >> கல்யாண சமையல் சாதம் >>
சின்ன அரும்பும் மலரும்.
மேற்கண்ட 12 பாடல் வரிசை எல்லாமே திரையிசை உலக ஜாம்பவான் திருச்சி லோகநாதன் அவர்களின் இனிமையான மனதை மயக்கும் பாடல்கள் அறிதான தகவல்களை நான் எழுதுவதை விட ஒலித்தொகுப்பு கேட்டு மகிழுங்கள். இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன். நல்ல முற்றல் தேங்காயை நறுக்குன்னு கடித்தார் போல் பேசும் இவரின் இனிமையான குரலில் தொகுப்பு மனதுக்கு பாடல்களை போன்று இதமாகவும் இருக்கிறது. அவருக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.
|
Click Here For Download
பதிந்தவர் Anonymous @ 9:43 AM 0 பின்னூட்டங்கள்
வகை வானொலி
குவிக் கன் முருகன் - ஹோ லிட்டில் ஃப்ளவர்
Get Your Own Hindi Songs Player at Music Plugin
ஹோ லிட்டில் ஃப்ளவர்
சீ யுவர் லவர்
சீ யுவர் சிட்டுக்கண்ணில்
பட்டு பட்டு சிக்கிக் கொண்டவள்
ஓ ஹோ ஹோ ஹோ
சீ யுவர் லவர்
சீ யுவர் சிட்டுக்கண்ணில்
பட்டு பட்டு சிக்கிக் கொண்டவள்
ஓஹோ சிவக்க சிவக்க சிரிக்கும் அழகிலே
தலுக்கி குலுக்கி மினுக்கும் நடையிலே
நடக்க நடக்க துடிக்கும் இடையிலே
ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா
(லிட்டில்..)
ஆஹா கனிய கனிய வளர்ந்தப்பருவமே
கருத்த விழியில் மிரட்டும் உருவமே
உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே
ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா
(லிட்டில்..)
ஆஹா அழகு சுகத்தை எடுத்து மடிக்கவா
அருகில் இருந்து விருந்து கொடுக்கவா
அடுத்துக் கதையை படித்து முடிக்கவா
ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா
(லிட்டில்..)
படம்: குவிக் கன் முருகன்
இசை: சாகர் டெசாய்
பாடியவர்: விஜய் பிரகாஷ்
பதிந்தவர் MyFriend @ 1:09 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2009, சாகர் டெசாய், விஜய் பிரகாஷ்