ஆண்: ரோஜா மலரே ராஜகுமாரிஆசைக் கிளியே அழகிய ராணிஅருகில் வரலாமோ... வருவதும் சரிதானோ...உறவும் முறைதானா...பெண்: வாராய் அருகில் மன்னவன் நீயே காதல் சமமன்றோவீரம் நிறையன்றோ காதல் நிலையன்றோஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோஎன்றும் நிலையன்றோஆண்: வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாதுகோட்டையின் மீதே நின்றாலும் ஏழையின் பெருமை உயராதுஓடியலைந்து காதலில் விழுந்து நாட்டை இழந்தவர் பலருண்டுபெண்: மன்னவர் நாடும் மணிமுடியும் மாளிகை வாழும் தோழியரும்பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும்ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோஆண்: பாடும் பறவை கூட்டங்களே பச்சை ஆடைத் தோட்டங்களேபெண்: விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களேஆண் & பெண்: ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம் வாழியப் பாடல் பாடுங்களேன்(ரோஜா மலரே ராஜகுமாரி)படம்: வீரத் திருமகன்இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
Post a Comment
0 Comments:
Post a Comment