’ஏன் இப்படி..!’ பதிவின் சொந்தக்காரர் தெகா/ தெக்கிக்காட்டான் பிறந்தநாளுக்காக் இங்க ஏன் என்ற கேள்வி பாடல் ... பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
ஏன் என்ற கேள்வி -இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் - கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்தததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே(2)
உரிமைகளைப் பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதினாலே (2)
ஓராயிரம் ஆண்டுகளாக ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே (ஓராயிரம்)
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே
(ஏன் என்ற கேள்வி)
நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழைக்காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும் (நீரோடைகள்)
நம் தோள்வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதினாலே
கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே
(ஏன் என்ற கேள்வி )
திரைப்படம் :ஆயிரத்தில் ஒருவன்
பாடியவர் : டி. எம். எஸ்
இசை : எம். எஸ் . வி
Wednesday, August 19, 2009
ஏன் என்ற கேள்வி
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 7:22 AM
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
தெகா அண்ணாச்சிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)
தெக்ஸுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். (எப்படிதான் இதையெல்லாம் இப்படி ஞாபகம் வச்சிருக்காங்களோ?!)
தெ.காட்டானுக்குப் பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
நல்லா இருங்கப்பா எல்லோரும்.
அண்ணன் தெ.காவின் பிறந்த நாளிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வாழ்த்துகள் தெகா
என்னோட பிறந்த நாள் எனக்கே மறந்து போனாலும் இப்படி அநியாத்திற்கு ஞாபகம் வைச்சு பாட்டு அதுவும் 'பொரட்சி பாட்டு"ம் போட்டு நெஞ்சசெல்லாம் சந்தோஷத்தை ஊத்தி நிரப்பிச்ச முத்துவுக்கும்.... மற்ற வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றிங்க.
____/|\____
Post a Comment