கண்ணா நீ என்னை ஆட்கொள்ளவா
கதறும் சலங்கைக்கு பதில் சொல்லவா
காதல் கொண்டவள் பாவி
கண்ணில் வழியுது ஆவி
காவல் கடந்திங்கு வா
(கண்ணா..)
இரு விழி எழுத துளி இருகடல் ஆகியதே
சலங்கை மணி தெறித்து இலங்கையில் விழுகிறதே
எனது பாடல் உன்னை மீட்கட்டும்
உனது கைகள் என்னை காக்கட்டும்
வான் செல்லும் பறவைக்கும் என் குரல் புரியுது உனக்கா தெரியாது
என் தோட்ட அரும்பெல்லாம் மலர் செய்த காற்றே
உனக்கென்ன உனக்கென்ன சிறையா
(என் தோட்ட..)
உனக்கில்லை ஒரு மரணம்
உன் அடி நான் சரணம்
சிறை விட்டு வெளி வரணும்
வழி விட்டு வரம் தரணும்
வான் உன்னை அழைக்குது வா
இதழ் வழியுது ரத்தம் வேதனை சொல்கிறதே
விழி வழி வழியும் துளி விடியல் கேட்கிறதே
உனது பாதம் தடையும் தாண்டும் வா
உனது பார்வை உயிரை தீண்டுமா
ஓளிவிட்டு வால் ஒன்னு உரை விட்டு வருவது போல்
சிறை விட்டு வருவாயா
உயிர் காம்பும் உடல் பூவும் உனக்காண பரிசு
பொருள் ஏற்று அருள் காண வருக
(உயிர்..)
எறிமலை வாய் அருகே இளங்கிளிபறக்கிறதே
மழை வந்து அணைத்துவிடில் கிளி இங்கு கூடு கட்டும்
(கண்ணா..)
படம்: இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, நவின் ஐயர், DA ஸ்ரீநிவாஸ்
Sunday, January 10, 2010
இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் - கண்ணா நீ என்னை ஆட்கொள்ளவா
பதிந்தவர் MyFriend @ 1:21 AM
வகை 2009, DA ஸ்ரீநிவாஸ், GV பிரகாஷ் குமார், நவின் ஐயர், பாம்பே ஜெயஸ்ரீ
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment