
ஓம்..ஓம்..ஓம்..ஆம் அன்பர்களே ஓம்காரமாய் விளங்கும் நாதம், தமிழுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை பல அறிஞர் பெருமக்கள் பலவித ஆராய்ச்சிகளில் தொகுத்து வழ்ங்கியிருக்கிறார்கள் என்பது உண்மை. இதோ அதே தமிழிசையை அக்குவேறு,ஆணிவேறாக பிரித்து மேய்ந்து ஒரு சாதாராண வானொலி நேயர் வான்வெளியில் வர்ணஜாலம் காட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், மிக மிக அறிதான வானொலிகளில் அதிகம் ஒலிப்பரப்பாத, ஏன் வானொலி நிலையங்கள் ஒலிப்பரப்பவே யோசிக்கும் சில பாடல்களை தேடி பிடித்து தொகுத்து வழங்கியிருப்பது அபாரம், என் இருபுருவங்களை வில்லென வளைத்தது என்றால் மிகையல்ல. தமிழுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை இந்த நேயரின் கைவணணத்தில் தனக்கே உரிய பாணியில் வழ்ங்கியிருக்கிறார். மேலும், அறிதான தகவல்களை பல நூல்களில் மூலம் படித்து சேகரித்து ஓரே நூலில் அற்புதமாக கோர்த்து வண்ணத்தோரணமாக கட்டி கோவையில் நடைபெறவிருக்கும் செந்தமிழ் மாநாட்டிற்காக வான்வெளி வரவேற்பு தோரண வாயிலை அமைத்துபோல் உள்ளது இந்த ஆக்கம். நமது வானொலி ஆதர்ஸ நேயர் திருப்பூர் அகிலா விஜயகுமார் அவர்களின் இந்த தொகுப்பில் ஒவ்வொரு வரிகளிலும் அவரின் கடின உழைப்பு தெரிகிறது. இந்த தொகுப்பை உருவாக்க இரவு பகல் பாராமல் எவ்வளவு உழைத்திருப்பார் என்று அவரின் ஒவ்வொரு ரசணை வரிகளிலும் என்னால் உணரமுடிகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த தொகுப்பை ஒட்டு மொத்தமாக கொடைக்கானல் வானவில் பண்பலைக்கு சர்வ சாதரணமாக அனுப்பிவிட்டார் அன்பர் அகிலா விஜயகுமார் அவர்கள், இந்த ஒலித்தொகுப்பை ஒரு மணி நேரத்திற்க்குள் எடிட் செய்து பதிவு செய்து ஒலிப்பரப்ப அறிவிப்பாளர் மிகவும் சிரமப்பட்டிருப்பார் என்றும் உணரமுடிகிறது. இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருப்பவருக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி. இந்த ஒலிக்கோப்பு எனக்கு அனுப்பிவைத்த அன்பர் சேலம் காசக்காரணூர் ராஜ்குமார் (இவரின் ஒலித்தொகுப்புக்கள் இந்த தளத்தில் முன்னமே வந்திருக்கின்றன) அவருக்கும் மிக ஆவலுடன் கேட்டு ரசித்த அன்பர்களூக்கும் நன்றி. இப்பேர்பட்ட ஆக்கங்களை உருவாக்குபவர்கள் இருக்கும் வரை வானொலி மற்றும் இணைய நேயர்க்ளுக்கு கொண்டாட்டம் தான் கேளூங்கள் இசையன்பர்களே உஙக்ளூடன் நானும் மறுமுறை சேர்ந்து கொண்டு கேட்டு மகிழ்கின்றேன்.
ஒலித்தொகுப்பை கேட்டு உங்கள் மனதில் தோன்றும் உணர்வுகள் எதுவாக இருந்தாலும் ஒருவரியில் தெரிவியுங்கள் ஆக்கத்தை உருவாக்கியவருக்கும், அறிவிப்பாளருக்கும் மிகவும் உற்சாகமாக இருக்கும்.
தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்
1.ஓதுவார் என் பெயர் ஓதுவார்
2.ஓம்காரமாய் விளங்கும் நாதம்
3.குயிலோசையை வெல்லும்
4.உலகின் முதலிசை தமிழிசையே
5.தமிழுக்கு அமுதம் என்று பேர்
6.ஆனா, டானா,
7.அகரமுதல எழுத்தெல்லாம்
8.பிறவாத வரம் வேண்டும்
9.ஏடுதந்தானடி தில்லையிலே
10.ஓசை கொடுத்த நாயகியே
11.பாட்டும் நானே பாவமும் நானே
1 Comment:
தமிழுக்கும் தமிழிசைக்கும் பெருமை சேர்க்கும் விதமாய் ஒரு நல்ல படைப்பு.! நண்பர் "அகிலா" விஜயகுமாருக்கு பாராட்டுக்கள்!
வாழ்த்துக்கள் ! இணையதளத்தில் பதித்த நண்பர் கோவை ரவி சாருக்கும்
நன்றிகள் !
வாழ்க தமிழ் !
ஜெகதீஷ் கோவை
Post a Comment