Wednesday, January 27, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - மன்னிப்பாயா



கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
(ஒரு நாள்..)

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
(ஒரு நாள்..)

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
பூவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
(ஒரு நாள்..)
(கண்ணே..)

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், ஷ்ரேயா கோஷல்
வரிகள்: தாமரை

6 Comments:

Sowmiya said...

FYI..

//வரம் கிடைத்தும் தவர விட்டேன்//

It should be வரம் கிடைத்தும் Naan தவர விட்டேன்

Anonymous said...

//ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல் tharum//

Unknown said...

திருக்குறள் தப்பா இருக்கே , பாடலே அப்படித்தானா ?

Madhav said...

Oru humble request ..
paadal varigal muxhumayaga theriyavillai endral thayavu seythu pathividatheergal. Ungalukku theriyavillai enbatharkaga padalai chithaikka vendam...

மைத்துஷன் said...

அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்...

Anonymous said...

//பூவாயா// காணல் நீர் போலே தோன்றி
//போவாயா// காணல் நீர் போலே தோன்றி

Last 25 songs posted in Thenkinnam