Wednesday, June 30, 2010
தமிழுக்கும் அமுதென்று பேர்
பதிந்தவர் MyFriend @ 1:49 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1970's, MS விஸ்வநாதன், P சுசீலா, பாரதிதாசன்
Tuesday, June 29, 2010
பாலக்காட்டு மச்சானுக்கு
பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுறு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுறு
பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுறு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுறு
பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுறு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுறு
செலவுக்கு நோட் இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்ஸாதான்
சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பெட்டை குருவி
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்கம்
(பாலக்காட்டு..)
கவலைகள் வேண்டாம் கனவுகள் வாங்கு
வா சந்தோஷம் நமக்கு
திருமணம் வேண்டாம் காதலை வாங்கு
தா ரரார தராரா
கதவுகள் வேண்டாம் சாவிகள் வாங்கு
வா போர்க்களம் நமக்கு
செல்வங்கள் வேண்டாம் சிறகுகள் வாங்கு
வா வானம் நமக்கு
வானமும் பூமியும் வாழ்ந்தால் இனிமையே
பாடகன் வாழ்விலே நித்தம் நித்தம்
பரவசம் நவரசம்
(பாலக்காட்டு..)
வானத்தை எவனும் அளக்கவும் இல்லை
வா இப்போதே அளப்போம்
வாழ்க்கையை எவனும் ரசிக்கவும் இல்லை
தா தரதா தரத்தா
பூக்களை எவனும் திறங்கவும் இல்லை இல்லை
வா இப்போதே திறப்போம்
பூமியில் புதையலாய் எடுக்கவும் இல்லை
வா இப்போதே எடுப்போம்
வாலிபம் ஒன்று தான் வாழ்வின் இன்பமே
புன்னகை ஒன்று தான் என்றும் என்றும்
இளமையின் ரகசியம்
(பாலக்காட்டு..)
படம்: மே மாதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: GV பிரகாஷ், நோயல் ஜேஸ்
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 1:03 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், GV பிரகாஷ் குமார், நோயல் ஜேஸ், வைரமுத்து
Monday, June 28, 2010
அக்கடான்னு நாங்க உடை
அக்கடான்னு நாங்க உடை போட்டா
துக்கடான்னு நீங்க எடை போட்டா
தடா உனக்குத் தடா
அடமெண்டா நாங்க நடை போட்டா
தடைப்போட நீங்க கவர்மெண்டா
தடா உனக்குத் தடா
மேடை ஏறிடும் பெந்தானே நாட்டின் சென்ஷேஷன்
ஜாடை பேசிடும் கந்தானே யார்க்கும் டெம்டேஷன்
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஓஹோஹோ
ஓல்டையெல்லாம் ஓரங்கட்டுவோம்
தையத் தக்க தையத்தக்க தோம் ஓஹோஹோ
தையனுக்குக் கையத் தூக்குவோம்
(அக்கடான்னு..)
திரும்பிய திசையிலே எங்கேயும் க்ளாமர்தான்
அரும்பிய வயசுல எல்லாமே ஹியூமர்தான்
நான் கேட்ட ஜோக்குகளை சென்சாரும் கேட்டதில்ல
நான் போட்ட ட்ரெஸ்ஸுகள ஃபில்ம் ஸ்டாரும் போட்டதில்ல
மடிசாரும் சுடிதாரும் போயாச்சு
ஹாலிவூட்டும் பாலிவூட்டும் போயே போச்சே
அதப்போட்டு இதை போட்டு ஓஞ்சாச்சே
ஆகமொத்தம் பஞ்சக்கச்சம் ஓஞ்சே போச்சே
(ஓரங்கட்டு..)
(அக்கடான்னு..)
இடுப்பிலே டயர் இல்ல சின்ன இடை நூடல்தான்
நெஞ்சையே பங்சரே செய்யும்வழி நீடல்தான்
இதுப்போன்ற செய்திகளை பிபிசி சொன்னதில்ல
என் போன்ற அழகிகளை எம்டிவியும் பார்த்ததில்ல
முக்கி முக்கி முத்தெடுத்தேன் முக்காலா
முக்கு மூலை முடுக்கெல்லாம் முக்காப்புலா
சொன்னதில்ல குத்தமுண்டா கோபாலா
குத்தமின்னா ஊத்திடுறேன் கோக்க கோலா
(ஓரங்கட்டு..)
(அக்கடான்னு..)
படம்: இந்தியன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஸ்வர்ணலதா
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 1:42 AM 3 பின்னூட்டங்கள்
வகை AR ரஹ்மான், வைரமுத்து, ஸ்வர்ணலதா
Sunday, June 27, 2010
ஓடக்கார மாரிமுத்து ஓட்டைவாயி மாரிமுத்து
ஏ ஓடக்கார மாரிமுத்து ஓட்டைவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா
ஏ அரிசிக்கடை ஐயாவுப் பொண்ணு ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா
பழைய பாக்கி இருக்குதா பையன் மனசு துடிக்குதா
பழைய பாக்கி இருக்குதா பையன் மனசு துடிக்குதா
பட்டணத்து ஸ்டைலக்கண்டா பட்டிக்காடு கசந்திடுமா
பள்ளிக்கூட நெனப்பிருக்கே பாவி மனம் மறந்திடுமா
பட்டுப்பாவடைக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்டை ஜடை கண்ணில் மிதக்குது
(ஓடக்கார..)
குண்டுப் பொண்ணு கோமளவள்ளி என்னானா என்னானா
ரெட்டைப்புள்ள பொறந்ததுமே நூலானா நூலானா
குள்ள வாத்து டீச்சர் கனகா
ஐயோ பார்வையில பச்ச மொளகா
மேற்படிப்பு படிக்கப் போனா மேர்க்கொண்டு என்ன ஆனா
மொத்தத்துல மூனு மார்க்கில் ஃபெயிலானா ஃபெயிலானா
ஒள்ளிக்குச்சி ராஜமீனா ஓடிப்போனா என்ன ஆனா
பூசணிக்கா வயு வாங்கித் திரும்பி வந்தாளே
(ஏ ஓடக்கார...)
அம்மன் கோயில் வேப்பமரம் என்னாச்சு என்னாச்சு
சாதிச் சண்ட கலவரத்துல ரெண்டாச்சு ரெண்டாச்சு
மேளத்தெரு கருப்பையாவும் கீழத்தெரு செவத்தம்மாளும்
சோளக்காட்டு மூளையில ஜோடி சேர்ந்த கதை என்னாச்சு
மூத்த பொண்ணு வயசுக்குத்தான் வந்தாச்சு வந்தாச்சு
மத்த கதை எனக்கெதுக்கு எங்குருவி எப்படி இருக்கு
தாவிச்செல்லும் குருவி இன்னிக்கு தாவணி போட்டிருக்கு
(ஏ ஓடக்கார..)
படம்: இந்திரா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், S சிவா
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 1:53 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், S சிவா, SP பாலசுப்ரமணியம், வைரமுத்து
Saturday, June 26, 2010
மாயா மச்சிந்திரா மச்சம் பார்க்க வந்தீரா
மாயா மச்சிந்திரா மச்சம் பார்க்க வந்தீரா
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா
மாரன் கலைக்கூடம் மஞ்சத்தில் உருவாக்கும்
மேஸ்திரி காதல் சாஸ்திரி
மார்பில் விளையாட மன்னன் கை விசைப்போட
ராத்திரி அடச்சீ போக்கிரி
உருமாறி உருமாறி ஓவியப் பெண் உனைத்தேடி
வருவேனே வாரித் தருவேனே
தடை தாண்டும் படைவீரா உடையாக அணிவீரா
தம்புரா மீட்டும் கிங்கரா
உனை நாணும் அடையாது விழிவாசல் அடையாது
கஞ்சிரா தட்டக் கொஞ்சிரா
(மாயா..)
உன்னை நான் சந்த்தித்தால் உள்ளத்தில் தித்த்தித்தாய்
தக்கதிம்மித் தக்கத்திம்மி தாளம்
உன்னை நான் சிந்தித்தால் உண்டாகும் தித்திப்பை
உதடுக்குள் பொத்தி வைத்தேன் நாளும்
பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன
முத்தமிட்டு சக்கை நோய் வந்தாலென்ன
தினமும் தினமும் வரலாமா
தவணை முறையில் தரலாமா
சொல்லசி சோன்பப்படி
செயலில் இறங்கு சீக்கிரமா
மீனம் மேஷம் பார்க்கணுமா
மென்னுடா என்னைத் தின்னுடா
(மாயா..)
அன்பே என் பேரென்ன
நான் வாழும் ஊரென்ன
அறீயாமல் உன்னைக் கேட்டேன் நானே
பெண்ணே என் பேச்செங்கே
நான் வேண்டும் மூச்செங்கே
புரியாமல் தவிக்கின்றேன் மானே
காதலுக்குக் கேள்வி கேட்டு மாளாதையா
காமனுக்குத் தாமதங்கள் ஆகாதையா
கனவில் பனியாய் கரைவோமா
கரைந்தே கவிதை வரைவோமா
சுட்டியே கன்னுக் குட்டியே
(மாயா..)
படம்: இந்தியன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 1:41 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், SP பாலசுப்ரமணியம், வைரமுத்து, ஸ்வர்ணலதா
Friday, June 25, 2010
விடை கொடு எங்கள் நாடே
விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
(விடை கொடு..)
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா வருமா
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா வருமா
சொர்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா வருமா
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே
பிரிவோம் நதிகலே பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்
(விடை கொடு..)
எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் இல்லம் திங்கள் வெடிகுண்டு புதையிலே புதைத்தோம்
முன் நிலவில் மலரில் கிடந்தோம்
பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்
கடல் நீர் பறவை தான் இருந்தால் சந்திப்போம்
வானமே மலைகளே வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்
(விடை கொடு..)
படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரெஹனா, பால்ராம், ஃபெபி மணி, MS விஸ்வநாதன்
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 1:44 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், AR ரெஹனா, MS விஸ்வநாதன், ஃபெபி மணி, பால்ராம்
Thursday, June 24, 2010
நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் கேட்ட புதுப்பாடல் எங்கே
பொன்மாலை சூட நான் வந்த நேரம்
பெண்ணே நீ சிலையானதேன்
என் கண்ணே நீ கதையானதேன்
நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் கேட்ட புதுப்பாடல் எங்கே
பூமலர் சேலையை நான் கொடுத்தேன்
பூவுடல் போர்த்தவா நீ நினைத்தாய்
பூமலர் சேலையை நான் கொடுத்தேன்
பூவுடல் போர்த்தவா நீ நினைத்தாய்
மூடிய உன் இமை பாடுமோ
உன் கண் என்னுடன் பேசுமோ
நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் கேட்ட புதுப்பாடல் எங்கே
என்னையும் உன்னையும் ஏன் பிரித்தார்
இடையினில் கோடுகள் ஏன் கிழித்தார்
கனவுகள் புகையென ஆனதேன்
காற்றில் சேர்ந்தே போனதேன்
நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் கேட்ட புதுப்பாடல் எங்கே
மரங்களும் இலைகளும் வாடுவதேன்
மலர்களும் நிறங்களை இழந்தது ஏன்
தாளமும் ராகமும் ஏங்கவே
ஜல் ஜல் ஜல் ஒலி நின்றதே
நான் பார்த்த ரதிதேவி எங்கே
நான் கேட்ட புதுப்பாடல் எங்கே
பொன்மாலை சூட நான் வந்த நேரம்
பெண்ணே நீ சிலையானதேன்
என் கண்ணே நீ கதையானதேன்
படம்: கண்ணில் தெரியும் கதைகள்
இசை: ஜி.கே.வெங்கடேஷ்
பாடியவர்: ஏ.எல்.ராகவன்
விரும்பி கேட்டவர்: மணி வேலன்
பதிந்தவர் MyFriend @ 1:57 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1980's, AL ராகவன், GK வெங்கடேஷ்
Wednesday, June 23, 2010
செம்மொழியான தமிழ் மொழியாம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்,
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்... உழைத்து வாழ்வோம்....
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்...
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்...
ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே
வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி
ஓதி வளரும் உயிரான உலக மொழி...
ஓதி வளரும் உயிரான உலக மொழி...
நம்மொழி நம் மொழி... அதுவே
செம்மொழியான தமிழ் மொழியாம்...
தமிழ் மொழி... தமிழ் மொழி... தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்...
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்...
வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே...
வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே...
ஆல்பம்: தமிழ் செம்மொழி மாநாடு 2010
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், TM சௌந்தர்ராஜன், கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிஹரன், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஜேசுதாஸ், நரேஷ் ஐயர், P சுசீலா, GV பிரகாஷ்குமார், TL மஹாராஜன், பிளாஸே, சுருதி ஹாசன், TM கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், சின்ன பொண்ணு, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, நித்யாஸ்ரீ, சௌம்யா, MY அப்துல் கானி, காஜாமொஹிதின், சபுமொய்தீன், AR ரெஹனா, பென்னி தயால், தேவன் ஏகாம்பரம், ஷ்வேதா மோகன், அனுராதா ஸ்ரீராம், உன்னி மேனன்
பதிந்தவர் MyFriend @ 1:37 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2010, AR ரஹ்மான், TM சௌந்தர்ராஜன், கார்த்திக், சின்மயி, ஹரிணி, ஹரிஹரன்
Tuesday, June 22, 2010
உதட்டுக்கும் கன்னத்துக்கும்
பதிந்தவர் MyFriend @ 1:56 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, SA ராஜ்குமார், தேவன்
Monday, June 21, 2010
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது ஐயோ
துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது ஐயோ
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம்
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ
கல்யாணம் முடிந்ததே அப்போ
(செப்டம்பர்..)
ஏ பெண்ணே
காதல் என்பது இனிக்கும் விருந்து
கல்யாணம் என்பது வேப்பங்கொழுது ஏ கண்ணே
ஓ நிறையில் மட்டுமே காதல் பார்க்கும்
குறையில் மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏ கண்ணா
காதல் பார்ப்பது பாதி கண்ணில்
காதல் பார்ப்பது பாதி கண்ணில்
கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே
கிளி மூக்கின் நுன் மூக்கில் கோபங்கள்
அலைகின்ற ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்
பெண்கள் இல்லாமல் ஆண்களுக்கு ஆறுதல் கிடையாது
பெண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவையிருக்காது
(செப்டம்பர்..)
நான் கண்டேன்
காதல் என்பது கழுத்தில் சங்கிலி
கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்
கல்யாணம் என்பதைத் தள்ளிப்போடு
தொண்ணூறு வரைக்கும் பூவைத் தா வா அன்பே
காதல் பொழுதில் விரும்பும் குறும்பு
கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லை என் நண்பா
பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா வா
ஆண்கள் இல்லாமல் பெண்களுக்கு ஆறுதல் கிடையாது
ஆண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவையிருக்காது
(செப்டம்பர்..)
படம்: அலைபாயுதே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஆஷா போஸ்லே, ஷங்கர் மகாதேவன்
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 1:27 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், ஆஷா போஸ்லே, சங்கர் மகாதேவன், வைரமுத்து
Sunday, June 20, 2010
தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
தத்தியாடுதே தாவியாடுதே
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
சில்லல்லவா சில்லல்லவா காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்
தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இது
தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இது
இட ஒதுக்கீடு உனக்காக இடை செய்வது
எந்தன் ஆடை நீயல்லவா
இட ஒதுக்கீடு எனக்காக இணை செய்வது
அந்த ராத்திரிப் பொழுதல்லவா
உன்னி உருவான ஆசைகள் என் அன்பே
அந்த வெங்காய விலைப் போல இறங்காது
(சில்லல்லவா..)
புதிய ரத்தம் உதடு மொத்தம் பரவிட
இச் இச் என்றும் பழகவா
சொல் சொல் நீ சொல் அன்பே
விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே
கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே
பதில் நான் வாங்க நாளாகுமா
அடி அம்மாடி அரசாங்கமா
என் ஆசைகள் எப்போது கை கூடும்
யார் சொல்லக் காவேரி நீராகுமா
(சில்லல்லவா..)
(தத்தியாடுதோ..)
படம்: என் ஸ்வாச காற்றே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: அனுபாமா, ஸ்ரீராம்
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 1:38 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், அனுபமா, வைரமுத்து, ஸ்ரீராம்
Saturday, June 19, 2010
மதுரைக்கு போகாதடி
கற்பூர கன்னிகையே வாராய்
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராஇ
நீ மங்கள மஹராணியே
வலது கால் எடுத்து வாராய் நீயே
நீ வந்த இடம் வளமாக
சென்ற இடம் வளமாக
சேர்ந்த இடம் சுகமாக
வாழ போற
மதுரைக்கு போகாதடி
அங்க மல்லி பூ கண்ணை வைக்கும்
தஞ்சாவூர் போகாதடி
தல ஆட்டாம பொம்மை நிக்கும்
தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா அங்க மேகம் உன்னை சுத்தும்
அசருதே அசருதே ஊர் மொத்தமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அசருதே அசருதே ஊர் மொத்தமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
(கற்பூர..)
அடி ஒத்தயிலே தனியாக
மெத்தையிலே தூங்காத
அத்த மகன் வாராண்டி
வலைச்சுப்போட
(மதுரைக்கு..)
சித்திரைன்னா வெயிலடிக்கும்
கார்த்திகைன்னா மழையடிக்கும்
அடால் குடால் தடால் புடால்
மாப்பிள்ளைதான் தங்கம்
ஆடியினா காத்தடிக்கும்
மாழ்கழின்னா ஹஹஹஹா
டமால் டமால் கபால் கபால்
மாப்பிள்ளை தான் சிங்கம்
மறுதாணி தோட்டத்துக்கே
அட மறுதாணி யாரு வச்சா
ஓ தேரா தேரா
இவ வாரா வாரா
காட்டு குயிலும் கட்டிக்க தான்
தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே
ஜோய் ஜோரா ஜோரா
வரும் வீரா வீரா
நான் அக்கரையில் இருந்தாலும்
இக்கரையில் இருந்தாலும்
சக்கரையா இருப்பாளே ஆசையாலே
(மதுரைக்கு..)
மருமக மருமக வந்தாச்சம்மா
இனி மாமியார் பதவி தான் உனக்காச்சம்மா
தமிழ்நாட்டு மன்மதனே வாராய்
பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய்
நீ இந்திர மஹராஜனே
வெற்றி வாலுக்கென பிறந்தவனே
நீ தொட்டதெல்லாம் ஜெயமாஅ
சொன்னதெல்லாம் நிஜமாக
கன்னி நிலா வந்துடுச்சு கனவு காண
கெட்டி மேளம் நாதஸ்வரம்
அட சேர்ந்து கேட்கும் நேரம் சுகம்
டும் டும் டும் டும்
டு டு டு டு டு
டும் டும் டும் டும்
மஞ்சள் குங்கும தாலியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறுப்பு
டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும்
சந்திரனில் ஒரு பாதி
இந்திரனில் ஒரு பாதி
சுந்தரனே என் ஜோடி ஆனதென்ன
(மதுரைக்கு..)
படம்: அழகிய தமிழ் மகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: அர்ஜித், பென்னி தயால், தர்ஷனா
வரிகள்: பா. விஜய்
பதிந்தவர் MyFriend @ 2:07 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, AR ரஹ்மான், அர்ஜித், தர்ஷனா, பா. விஜய், பென்னி தயால்
Friday, June 18, 2010
உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
உண்மை கண்டார் யார் யாரு கூறாய்
உள்ள கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகுமே சீராய்
ஏ சாலையே ஏ சாலையே எங்கே போகிறாய்
என்னோடு தான் என்னென்னத்தான் நீ சொல்கிறாய்
ஏ சாலையே ஏ சாலையே எங்கே போகிறாய்
என்னோடு தான் என்னென்னத்தான் நீ சொல்கிறாய்
எத்தனை இனிய செய்திகளோ
எல்லாம் நிலைக்கும் நீதிகளோ
எத்தனை கால்கள் சென்றனவோ
எத்தனை கதைகள் வென்றனவோ
(உன்னை கேளாய்..)
அங்கங்கே மேடும் உண்டு
அங்கங்கே பள்ளம் உண்டு
அதை வெல்லும் உள்ளும் செல்லும் நேராய்
(உன்னை கேளாய்..)
கல் என்ன காலம் என்ன எல்லாமே
கண்டேனே கண்ணீரே எல்லாமே
ஆகாயம் சொல்லும் இதை கேளாயோ
பூவுக்குள் சோடிக்கிளி பாராயோ
மேகத்தை கேளு சொல்லும்
என் ராகத்தை அதுவும் சொல்லும்
அம்மம்மா இயற்கை எழுதும் புது புதுதாய்
சோகங்கள் பொய்யடா
சுமை நீக்கி வெல்லடா
மனம் என்ற வீட்டை நீ
தினம் சுத்தம் செய்யடா
நம் கைக்குள் முத்து போல்
மரத்துக்குள் விட்டு போல்
உன் வாழ்க்கை என்பதும்
உள்ளத்தில் உள்ளதடா
(உன்னை கேளாய்..)
மழை மேகத் தூரலை எல்லாம் மலைகள் வாங்க
அது தந்த குளிர் நீரை தான் ஓடைகள் தாங்க
நதியை போல் அது தான் மன்னே பெருகுது இங்கே
நெடுகடலை தேடி செல்லும் கங்கை அங்கே
கங்கையில் நீராடினால் பாவங்கள் போகலாம்
அசல்கள் போகுமா
(சோகங்கள்..)
(உன்னை கேளாய்..)
படம்: தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன்
வரிகள்: வாலி
பதிந்தவர் MyFriend @ 2:27 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், வாலி, ஹரிஹரன்
Thursday, June 17, 2010
பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
பதிந்தவர் MyFriend @ 2:08 AM 3 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், மின்மினி, வைரமுத்து
Wednesday, June 16, 2010
நான் பாடும் சந்தம்
நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம்
குரல் வேறு ஆனாலும் பொருள் ஒன்று அல்லவா
எல்லாமே நம் வாழ்வில் இரண்டாக உள்ளது
காலம் ஒரு டூயட் அதிலே இரவு பகல் ரெண்டும் உண்டு
நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம்
குரள் வேறு ஆனாலும் பொருள் ஒன்று அல்லவா
நதி ஒன்று கரை ரெண்டு நதியின் ஜாதி ஒன்று
வாழ்க்கை ஒரு டூயட் அதிலே இன்பம் துன்பம் ரெண்டும் உண்டு
தாய் ஒன்று மகன் ரெண்டு தமிழின் குரள் ஒன்று
அன்பு ஒரு டூயட் அதிலே அண்ணன் தம்பி இருவரும் உண்டு
படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 2:39 AM 0 பின்னூட்டங்கள்
Tuesday, June 15, 2010
திறக்காத காட்டுக்குள்ளே
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்
பட்டாம் பூச்சிச் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு
ஓடியோடி ஆளம் விழுதில் ஊஞ்சாலும் ஒற்றை கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்
அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலாவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்
(திறக்காத.)
காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ
அது தன்னைச் சொல்லுதோ இல்லை உன்னைச் சொல்லுதோ
அட புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது அதோ அதோ அதோ அங்கே
ஐயய்யோ வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ அவை வண்ணச் சிறகுகளோ
வானவில் பறக்கின்றதோ
அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது
புதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றது
மேகம்போல் காட்டை நேசி மீண்டும் நாம் ஆதிவாசி
உன் கண்கள் மூடும் காதல் காதல் காதல் காதல் யோசி
(திறக்காத..)
கை தொட்டுத் தட்டி தட்டி பூவை எழுப்பு
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு
அட என்ன நினைப்பு அதைச் சொல்லியனுப்பு
என் காலடியில் சில வீடுகள் நகருது இதோ இதோ இதோ இங்கே
ஆஹாஹா வீடுகள் இல்லை நத்தை கூடுகளோ அவை நத்தை கூடுகளோ
வீடுகள் இடம் மாறுமோ
புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது
நாட்டுக்குப் பூட்டு போடு காட்டுக்குள் ஓடியாடு
பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு
(திறக்காத..)
படம்: என் ஸ்வாச காற்றே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சித்ரா
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 2:49 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், உன்னி கிருஷ்ணன், சித்ரா, வைரமுத்து
Monday, June 14, 2010
இயற்கை தாயே தாயே
இயற்கை தாயே தாயே
உன் குழந்தைகள் பாடுகின்றோம்
தண்ணீர் திடலின் மேலே
தினம் சடுகுடு ஆடுகிறோம்
விரையும் படகே விரைக
விண்மீன் நுணியை தொடுக
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
(இயற்கை..)
வானம் பக்கம்தான் நம் வாழ்க்கை பக்கம்தான்
தோளில் சக்தி உள்ளவனுக்கு சொர்கம் பக்கம்தான்
வாழ்வே யுத்தம்தான் அதில் வலிமை தர்மம்தான்
நீதி இருதியில் வெல்லும் என்பது சான்றோர் சட்டம்தான்
ஆழ கடலை அஞ்சாத மனிதன் மட்டையை ஜெயிக்கிறான்
போலி புகலில் வீழாத மனிதன் தன்னையே ஜெயிக்கிறான்
ஹேய் வண்ண வண்ண சிறகுகள் வானத்தையே ஜெயிக்குமே
சின்ன சின்ன துடுப்புகள் கடலையே ஜெயிக்குமே
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
(இயற்கை..)
உப்புத்தண்ணீரா இது உப்புத் தண்ணீரா
காலம் எல்லாம் ஏழை சிந்தியா
கருப்பு தண்ணீரா மழையும் தீர்ந்துவிடும்
அட மண்ணும் கலந்துவிடும்
அன்று கடல் நீர் கொண்டு மனிதன் வாழ
கற்றுத்தருவீரா துள்ளி நீர் கூட்டம்
ஒன்றாகித்தானே கடலென்று ஆனது
மனிதர் கூட்டம் ஒம்றாகும் போது
பலம் வந்து வண்ணம் சிறகுகள் வானத்தையே ஜெயிக்குமே
சின்ன சின்ன துடுப்புகள் கடலையே ஜெயிக்குமே
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
(இயற்கை..)
படம்: இயற்கை
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக், சைந்தவி
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 1:48 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, கார்த்திக், சைந்தவி, வித்யாசாகர், வைரமுத்து
Sunday, June 13, 2010
Saturday, June 12, 2010
Friday, June 11, 2010
Thursday, June 10, 2010
திலோத்தம்மா
பதிந்தவர் MyFriend @ 1:45 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், தேவா, வைரமுத்து, ஸ்வர்ணலதா
Wednesday, June 9, 2010
Tuesday, June 8, 2010
பனி விழும் காலமா
பதிந்தவர் MyFriend @ 1:58 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, சயந்திரா, வில்லியம் இசாக், ஜேஸ்ஸி கிஃப்ட், ஹிஷாம்
Monday, June 7, 2010
ராவணன் - கோடு போட்டா
கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
வில்லப் போல வளஞ்ச கூட்டம்
வேலப் போல நிமிர்ந்து விட்டோம்
சோத்துல பங்கு கேட்டா அட எலையப்போடு எலைய
சொத்துல பங்கு கேட்டா அவன் தலைய போடு தலைய
ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது
மேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம்தான் கேக்காது
பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது
பாம்பக் கூடப் பழகி பசும் பால ஊத்தும் சாதி
தப்பு தண்டா செஞ்சா அட அப்ப தெரியும் சேதி
கள்ளிக் காட்டுப் புள்ளத்தாச்சி கல்ல பெத்த வீரனடா
ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா
செத்த கெழவன் எழுதிவெச்ச ஒத்த சொத்து வீரமடா
கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
எங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும்
எங்க தண்ணி எரி சாராயம் போல் ஒரைக்கும்
வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி
ஒரு சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி
எட்டுக்காணி போனா அட எவனும் ஏழை இல்ல
மானம் மட்டும் போனா நீ மய்க்கா நாளே ஏழ
மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்
சீயான் காட்டத் தோண்டிப் பாத்தா செம்மண் ஊத்து ரத்தம்தான்
கோ கோ கோ கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்
கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்
படம் : ராவணன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல் வரிகள் : வைரமுத்து
பாடியவர் : பென்னி தயால்
பதிந்தவர் G3 @ 7:48 AM 0 பின்னூட்டங்கள்
வகை AR ரஹ்மான், பென்னி தயால், வைரமுத்து
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
சின்ன முள்ளு காதலியல்லோ பெரிய முள்ளு காதலனல்லோ
ரெண்டு முள்ளும் சுத்துற சுத்தில் காதலிங்கு நடகுதல்லோ
சின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்
பெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம்
சின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்
பெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம்
ஊடலில் சின்ன முள் ஓடலாம்
ஒவ்வொரு மணியிலும் கூடலாம்
(ஜும்பலக்கா..)
முன் கோபத்தில் காதல் நெஞ்சை மூடாதே முத்துக் கண்ணே
ஆப்பிள் என்று தொட்டுப் பார்த்தால் பைனாப்பிள் ஆனாய் பெண்ணே
உண்டுன்ன்னா உண்டுன்னு ஒத்தை சொல்லு சொல்லுங்க
இல்லைன்னா இல்லைன்னு ரெண்டில் ஒன்னு சொல்லுங்க
என் காதல் கதவை தட்டும் தடுக்காதே
பின்னாளில் கண்ணீர் ஊற்றி தவிக்காதே
நெஞ்சோடு ஒரு காதல் வைத்து கண்ணோடு சிறு கோபம் என்ன
ஆண் இதயத்தின் கரைத்தேடி அலைகின்ற பெண்ணுக்கு
ஈபிகோ செக்ஷன் என்ன?
(ஜும்பலக்கா..)
பேசிப்பேசி அர்த்தம் என்ன பேசாமல் முன்னேறலாம்
காதல் எல்லாம் மேகம் போல தன்னாலே உண்டாகலாம்
எப்போதும் பெண்ணோடு எல்லை கட்டி நில்லுங்க
ஐ லவ் யூ சொன்னாலும் தள்ளி நின்னு சொல்லுங்க
மெல்லப்பேசு பெண்மை உன்னை வெறுக்குது
பெண்ணுள்ளம் ஒரு மூங்கில் காடு
தீக்குச்சி ஒன்றைப் போட்டுப்பாரு
அவள் பாதத்தில் தலை வைத்து
அன்னாந்து முகம் பார்த்து லவ் பிச்சை கேட்டுப்பாரு
(ஜும்பலக்கா..)
(சின்ன முள்ளு..)
(ஜும்பலக்கா..)
படம்: என் ஸ்வாச காற்றே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ரஃபி
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 1:47 AM 3 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், ரஃபி, வைரமுத்து
Sunday, June 6, 2010
ஒரு நொடி இரு நொடி சில நொடி பல நொடி
அழகிய அதிசய ஸ்வரமே
உன்னை லயக்குது ரசிக்குது மனமே
ஹே பரப்பா
ஒரு நொடி இரு நொடி சில நொடி பல நொடி
ஜகத்தினில் சகலமும் மறக்க
வாயோடு முத்தம் இட்டு தீ மூட்டினாய்
பார் என் இருதயம் பாதி ஆச்சு
கேள் என் மனதுக்குள் காச்சு மூச்சு
ஆரம்பம் என்பது சைவ சேட்டைதான்
ஆடைகள் கலைந்ததும் வேறு வேட்டைதான்
உயிருக்குள் புகுந்து விட்டாய்
(ஒரு நொடி..)
போர்க்களம் உருவாகும் என் போர்க்குலம் உனதாகும்
பூவில் பெண் பூவில் தேன் நீ வார்த்திடு
ஐவிரல் உளி என்றே என் தேகத்தில் பதியவிட்டு
அங்கத்தில் எங்கும் சிற்பம் செய்திடு
ஹேய் முதல் முதல் உந்தன் முழு பௌர்ணமி
உடல் பார்த்து வேர்த்தேன்
தணுவரை ஏதோ அசைந்தோடவே அதில் காயம் ஆனேன்
சின்ன சின்ன சீண்டள்கள் செய்தால்தான் ஆனந்தம்
டோலிரி டோலிரி டோலி டோலி டோலி
எல்லை மீரல் என்றாலும் இன்பங்கள் ஏறலாம்
வாழ்நாட்கள் போதாது போதாது போதாது
பார் என் இருதயம் பாதி ஆச்சு
கேள் என் மனதுக்குள் காச்சு மூச்சு ஹேய் ஹேய்
ஹேய் சுட சுட என்னை சுகம் செய்திட முகம் சேர்த்திட வா
தொட தொட எந்தன் உடல் நாணமும் உடைக்கின்றது வா
அன்பே உன்னை நான் அள்ளி ஆடைக்குள் சேர்த்தேனே
டோலிரி டோலிரி டோலி
போதும் போதும் என்றாலும் கொஞ்சித்தான் கொல்வேனே
நீ என்னில் உள்வாங்க உள்வாங்க
பார் என் இருதயம் பாதி ஆச்சு
கேள் என் மனதுக்குள் காச்சு மூச்சு
ஆரம்பம் என்பது சைவ சேட்டைதான்
ஆடைகள் கலைந்ததும் வேறு வேட்டைதான்
உயிருக்குள் புகுந்து விட்டாய்
(ஒரு நொடி..)
படம்: பாரிஜாதம்
இசை: தரன்
பாடியவர்கள்: ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஸ்வேதா, கார்த்திக்
பதிந்தவர் MyFriend @ 1:10 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2010, கார்த்திக், தரண், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஸ்வேதா
Saturday, June 5, 2010
அண்ணக்கிளி நீ வாடி
அண்ணக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க
மஞ்ச மயிலே உன் தோகையில் ஒளிஞ்சு
கண்ணாமூச்சி நான் ஆட
கொஞ்சி விளையாடி கும்மாளம் போட்டு
என்னை உனக்குள்ள தேட
(அண்ணக்கிளி..)
விழியில் விழியில் தங்க ஜரிகை ஜொலிக்கும்
அழகில் அழகில் ஒரு நிமிஷம்
மனதில் மனதில் அடி பம்பரங்கள் ஆடும்
சரியும் உடையில் ஒரு நிமிஷம்
முத்துமல்லி சரமே பக்கம் கொஞ்சம் வாடி
மூச்சாலே உன்னை நான் முழம் போட
அழகே உன்னை தரணும் நீ ஒரு நிமிஷம்
குலுங்கும் குலுங்கும் உன் வளையல்களாயிருந்து
சிணுங்க வேணும் ஒரு நிமிஷம்
வளையும் விழியும் குட்டி குறும்புகளை பண்ணும்
இடையில் வேண்டும் ஒரு நிமிஷம்
முத்தாடும் கால் விட்டு தர வேனும்
நீராகி உன்னை நான் அள்ளி குடிக்க
அழகே நீ உன்னை தரணும் ஒரு நிமிஷம்
(அண்ணக்கிளி..)
படம்: 4 ஸ்டூடண்ஸ்
இசை: ஜேஸ்ஸி கிஃப்ட்
பாடியவர்: ஜேஸ்ஸி கிஃப்ட்
வரிகள்: நா. முத்துக்குமார்
பதிந்தவர் MyFriend @ 1:27 AM 0 பின்னூட்டங்கள்
Friday, June 4, 2010
ராவணன் - காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
பதிந்தவர் நாகை சிவா @ 4:37 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2010, AR ரஹ்மான், அனுராதா ஸ்ரீராம், சங்கர் மகாதேவன், மணிரத்னம், வைரமுத்து
சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடி சொல்லுதே நம் காதல் வாழ்கவே
சொல்லாது சோலைக்கிளி சொல்லி கடந்த காதல் இது
கண்ணோட்டம் காதல் பேசுதே
பச்சைக்கிளி இலைகளுக்குள்ளே
பச்சைக்கிளி ஒளித்தல் போல
இச்சை காதல் நானும் மறந்தேன்
பச்சைக்கிளி மூட்டை போல
வெட்கம் உன்னை காட்டிகொடுக்க
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்
பூவில்லாமல் சோலை இல்லை
பொய் இல்லாமல் காதல் இல்லை
பொய்யை சொல்லி காதல் வளர்த்தேன்
பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு
மெய்யின் கையில் ஒற்றை சாவி
எல்லா பூட்டும் இன்றே திறந்தேன்
சேராத காதலுக்கெல்லாம்
சேர்த்து நாம் காதல் செய்வோம்
காதல் கொண்டு வானை அளப்போம்
புதிய கம்பன் தேடி பிடித்து
லவ்வாயணம் எழுதிட செய்வோம்
நிலவில் கூடி கவிதை படிப்போம்
கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்
மிஞ்சும் மிஞ்சும் மோதிக்கொள்வோம்
சண்டை போட்டு இன்பம் வளர்ப்போம்
பூவும் பூவும் மோதிக்கொண்டால்
தேனை தானே சிந்தி சிதறும்
கையில் அள்ளி காதல் குடிப்போம்
(சொல்லாயோ..)
படம்: அல்லி அர்ஜுனா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா
பதிந்தவர் MyFriend @ 1:54 AM 3 பின்னூட்டங்கள்
Thursday, June 3, 2010
பத்து விரல் உனக்கு
பத்து விரல் உனக்கு பத்து விரல் எனக்கு
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு
ஒன்ன தொட்ட விரல் தான் தித்திக்குது எனக்கு
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு
மூங்கில் காட்டு வண்டி என் மூலை கொடையும் அண்டி
உன் பத்து விரலின் பசியை போக்கும் பந்தி நாந்தானா?
அடி கொல்லைக்கார கண்ணே
சிறு கொலைகள் செய்யும் பெண்ணே
அட எட்டி போனா என்ன பண்ண விட்டு செல்வேனே ஓ
திமிர் கொண்ட அழகை மறப்பது கடமை
திரை விளக்காமல் பறிப்பது உன் திறமை
அழகை மறைச்சா அது கொடுமை
(பத்து...)
மனச கிள்ளு மனுஷா
அட மன்மத பாஷை பெருசா
உடைக்கையில் துளைக்கும் பார்வைகலாலே
உள்ளுயிர் வரைக்கும் தடவுகின்றாய்
விரல்கள் செய்யும் வேலைகள் எல்லாம்
விழிகளிலாலே நடத்துகிறாய்
உன் வயச பார்த்தா கொஞ்சம் தானே
ஆனா உன் வயச மீறி நெஞ்சம் தானே
(பத்து..)
வெட்கம் காணோம் ஐயா
அதை திருடி போனவன் நீயா
எதுவும் ஒட்டாதே பாதரசம் போலே
இதுவரை இருந்தேன் தனிமையிலே
ஓசையில்லாத பிம்பத்தை போலே
விழுந்து விட்டாயே மனசுக்குள்ளே
இன்னும் இன்னும் ஆளம் போறேன்
உன் இதயத்துக்குள் புதயல் எடுப்பேன்
(பத்து..)
படம்: அருள்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 1:01 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, SP பாலசுப்ரமணியம், வைரமுத்து, ஸ்வர்ணலதா, ஹாரிஸ் ஜெயராஜ்
Wednesday, June 2, 2010
குச்சி குச்சி ராக்கம்மா
குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்
சாதிசனம் தூங்கையில சாமக்கோழி கூவையில
குச்சி குச்சி ராக்கம்மா கூடசாலி ராக்கம்மா
(குச்சி..)
குச்சி குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சி பேச பொன்னு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே
குச்சி குச்சி ராக்கம்மா கூடசாலி ராக்கம்மா
காட்டு முயலுக்கு பனி பிடிக்கும்
கானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும்
ஆணிவேருக்கு மண் பிடிக்கும்
ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்
அரசன் மகனுக்கு வால் பிடிக்கும்
அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே
பொம்பலைக்கு கிளி பிடிக்கும்
அல்லும் பகலுமே நனைந்தாலும்
ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும்
ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்
ஏ பொட்டப்புள்ள பெத்துக்கொடு
போதும் என்னை விட்டு விடு
அ அ அ பொட்டப்புள்ள பெத்துக்கொடு
போதும் என்னை விட்டுவிடு
வெளிச்சம் எறியவிட்டு வெட்கத்தை அணைத்துவிடு
(குச்சி..)
சிறகு நீங்கினால் பறவையில்லை
திரியை நீங்கினால் தீபமில்லை
உன்னை நீங்கினால் நானில்ல
உனக்கிது புரியவில்லை
உடலை நீங்கினால் உயிருமில்லை
ஒளியை நீங்கினால் ஒளியுமில்லை
உன்னை நீங்கினால் நான் இல்லை
உனக்கிது தெரியவில்லை
பூமி சுற்றுவது நின்றூவிட்டால்
புவியில் என்றுமே மாற்றமில்லை
புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால்
என்னாளும் பெண் வாழ்வில் ஏற்றங்கள் இல்லை
பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
தொட்ட இடம் பத்திக்கொள்ளும் தூரத்தினில் ஒதுங்கி நில்லு
(குச்சி..)
படம்: பாம்பே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஸ்வர்ணலதா
பதிந்தவர் MyFriend @ 1:17 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், ஸ்வர்ணலதா, ஹரிஹரன்
Tuesday, June 1, 2010
கப்பேலேறி போயாச்சு
கப்பேலேறி போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்ட நடு ராவாச்சு
நட்டை விதை பூவாச்சு பொன்னம்மா
விடியும் வரையும் போராடினோம்
உதிரம் நதியாய் நீராடினோம்
வெட்கமெல்லாம் வாலாச்சு
துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா கண்ணம்மா
நம்ம வாசல் தேடி சாரல் வரும்
எதிர் வானம் தூவும் தூரல் வரும்
வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும் இப்ப
(கப்பலேறி..)
வண்ண மான் வஞ்சை மான் நேர்க்கோலம்
கண்களை கன்னத்தில் போட
இன்னுமா இன்னுமா போர்க்கோலம்
இன்று நீ அங்குதான் போராட
உனை கேட்டா என் நெஞ்சை அள்ளிக்கொடுத்தேன்
தினம் நாந்தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்
நானோ தீவா
ஆனேன் வா வா அம்மம்மா நாளெல்லாம்
காணல் நீரை குடித்தேன் இப்ப
(கப்பேலேறி..)
அன்னமே அன்னமே நான் சொல்லி
வந்ததா தென்றலும் நேற்று
உன்னையே உன்னையே நான் எண்ணி
வெந்ததை சொன்னதா பூங்காற்று
உந்தல் காலில் மெட்டி போல் கூட இருப்பேன்
உந்தன் கண்ணுக்கு கண்ணீர் போல் காவல் இருப்பேன்
மாலை சூடி தோழி ஆடி
கை தொட்டு மெய் தொட்டு
உன்னி என்னை கரைப்பேன்
(கப்பேலேறி..)
படம்: இந்தியன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா
வரிகள்: வாலி
பதிந்தவர் MyFriend @ 2:20 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், P சுசீலா, SP பாலசுப்ரமணியம், வாலி