Monday, September 13, 2010

துள்ளி திரிந்ததொரு காலம்



துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே
(துள்ளி...)

அன்னை மடி தனில் சில நாள்
அதை வி..
அன்னை மடி தனில் சில நாள்
அதை விடுத்தொரு சில நாள்
திண்ணை வெளியினில் சில நாள்
உண்ண வழியின்றி சில நாள்
நட்பின் அரட்டைகள் சில நாள்
நம்பி திரிந்ததும் பல நாள்
காணல் நீரினில் சில நாள்
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்
கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள் பூங்கொடியே
(துள்ளி..)

துள்ளும் அலையென அலைந்தேன்
நெஞ்சில் கனவினை சுமந்தேன்
வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தேன்
வானம் எல்லை என நடந்தேன்
காதல் வேள்வி தனில் விழுந்தேன்
கேள்விக்குறி என வளைந்தேன்
உன்னை நினைத்து இங்கு சிரித்தேன்
உணமை கதையினை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழியின்றி தவித்தேன்
வாழ்கின்ற வாழ்வெல்லாம்
நீர்குமிழ் போன்றது பூங்கொடியே
(துள்ளி..)

படம்: என்றும் அன்புடன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ

2 Comments:

Krishnamurthi Balaji said...

பாடல் புனைந்தவருக்கு ஒரு 'ஓ' போடுறேன் ! அன்னாரின் பெயர் என்ன? அருமையான வரிகள் ! வாழ்த்த "சொல்ல மொழியின்றித் தவித்தேன்"

Unknown said...

அசத்தும் வரிகள்.பாடல் மிகவும் ரம்மியமானது.மொத்தத்தில் மிகவும் அருமை .

Last 25 songs posted in Thenkinnam