ஒரு நிலா தொடும் தூரத்தில்
இருந்தும் முடியவில்லை தீண்ட
திருவிழா இந்த நேரத்தில்
தயக்கம் வரம்புகளை தாண்ட
உனை பார்த்தேன் நான் எனை தோற்றேனே
உயிர் காற்றாய் நான் உனை ஏற்றேனே
உடன் நடக்கும் நிழல் நானே
(ஒரு நிலா..)
நான் வாழும் நாள் வரை
என் வீரன் கை சிறை
கல்யாண நலுங்கு தான்
கண்ணே ஒரே விலங்கு தான்
ஓடை பூவை பனி
ஓசை இன்றே தொடும்
ஓ காவல் மீறி வரும்
காற்றுக்கேது தடம்
அடடா எனக்கோர் அவஸ்தை நீ
(திருவிழா..)
கால் கொலுசு இசை பாடும்
கை வளையல்கள் அசைந்தாடும்
கண் விழியில் ஒரு நாளும்
காமன் அவன் தரும் பாடம்
மேளம் தாளம் வேஹம் கோஷம் கேட்கும்
மாலை சூடிடும் வைபோகம்
சொந்தம் பந்தம் பேரன் பேத்தி யாவரும்
வாழ்த்து பாடிடும் கல்யாணம்
ஓ தென்காசி தூரல் போல்
ஏன் கண்ணே வேர்க்கிறாய்
பூ வைத்த பூவைக்குள்
தீ வைத்து பார்க்கிறாய்
கண்ணில் நூறு கனா
நெஞ்சில் நூறு வினா
காதல் யாரை விடும்
தேதி பார்த்தா தொடும்
வலிக்கும் காதல் வலியது
(ஒரு நிலா..)
படம்: சிக்கு புக்கு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், உமா பத்மநாபன், சந்திராயி பத்தசர்யா
வரிகள்: வாலி
Friday, September 24, 2010
சிக்கு புக்கு - ஒரு நிலா
பதிந்தவர் MyFriend @ 1:42 AM
வகை 2010, உமா பத்மநாபன், சங்கர் மகாதேவன், வாலி, ஹரிஹரன் - லெஸ்லி
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
'மிகச்சிறந்த sharing button'- tell a friend sharing button for every posts in your blog
http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html
5 important blogs for bloggers
http://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html
Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு
http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html
add subscribe via email gadget
http://ramasamydemo.blogspot.com/2010/09/add-subscribe-via-email-gadget-for-your.html
Post a Comment