Tuesday, September 28, 2010

என்ன சொல்லி நான் எழுத



பதிவர் யாழினியின் விருப்பப்பாடல் இன்றைய அவரின் பிறந்தநாளுக்காக ஒலிக்கிறது. வாழ்த்துக்கள் யாழினி.


என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
மேலாடைக்குள் நான் போராடினேன்
நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்
பேதை என்னை வாதை செய்யும் வெட்கம் விடுமோ ஹோய்... (என்ன சொல்லி)

அறியாதவள் நான் தெரியாதவள்
உன் அனுபவம் ஏதும் புரியாதவள்
எத்தனையோ தோணுது மனசினிலே
அது அத்தனையும் எழுதத் தெரியாதவள்
என்ன சொல்ல... எப்படி எழுத... ம்ம்ம்ஹூஹூம்...
மஹாராஜ ராஜஸ்ரீ...

காற்றாகப் போனாலும் அவர் கன்னங்களை நான் தொடுவேன்
காற்றாகப் போனாலும் அவர் கன்னங்களை நான் தொடுவேன்
பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம்
கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம்
கொல்லாதே கொண்டாலும் சொல்லாலே கொல்லாதே
கண்ணான கண்ணா... கண்ணா... கண்ணா... (என்ன சொல்லி)

இதயம் துடிக்குது என் செவிக்கே கேட்குதம்மா... கேட்குதம்மா
வளையல் நடுங்குது வாய் வார்த்தை குளறுதம்மா... குளறுதம்மா...
என்ன செய்ய.. என்ன செய்ய... ம்ம்ம்ஹூஹூம்...

காத்தாடி போலானேன்
என் கண்ணுக்குள்ளே நோயானேன்
காத்தாடி போலானேன்
என் கண்ணுக்குள்ளே நோயானேன்
பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும்
கல்யாண காலம் வந்தபின்பு மாறும்
நெஞ்சோடு நெஞ்சாக கொஞ்சாமல் போவேனோ
கண்ணான கண்ணா... கண்ணா.. கண்ணா... (என்ன சொல்லி)

படம் : ராணித்தேனீ
இசை : இளையராஜா
பாடியவர் : பி. சுசீலா

4 Comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்ப நல்லா இருக்கு!

சொல்லுவதெல்லாம்... said...

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
படம் ராணித்தேனி; பாடகர் பீ.சுசிலா என்பது
எனக்கு மிக நன்றாக ஞாபகமுள்ளது.
பகிர்விற்கு மிக நன்றி!

உதயகுமார் said...

நல்ல இனிமையான பாடல்.

உதயகுமார் said...

அருமைமான பாடல்.

Last 25 songs posted in Thenkinnam