Tuesday, September 14, 2010

என் கனவினை கேள் நண்பா



என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும்

என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால் உதிரம் கொதிக்கும்
ஒரு புறம் வறுமையும்
மறுப்புறம் கொடுமையும்
ஏழையை வெறுத்தது தெரியுமா
இந்த மண் குடில் ஆசையை
மாளிகை அறிந்திடுமா

நண்பனே..
இது மாற வேண்டும்
பசியாற வேண்டும்
இந்த இலைஞர் கையில்
இந்த தேசம் மாற வேண்டும்
(என் கனவினை..)

மகராசன் சீமையில
மழை இல்லாமல் இருந்தது ஒரு காலம்
அட காந்தி போர்கள்
நீங்க வந்ததினால் நாடு
இப்ப செழிச்சு வளம் கொளிச்சி
பஞ்சம் பசி தீர்ந்ததடி
எப்பை எப்பை ஹே ஹையோ
எப்பை எப்பை ஹே ஹையோ

பாட்டி பால் விற்ற கணக்கை
கம்பியூட்டர் பதிய வேண்டும்
நாத்து நடுகின்ற பெண்ணும்
செல் போனில் பேச வேண்டும்
உழவன் ஏர் ஓட்ட
பென்ஸ் கார் ஓட்டி போக வேண்டும்
விளையும் பயிருக்கு
நாங்கள் சொல்கின்ற விலைகள் வேண்டும்
நாங்கள் சொல்கின்ற விலைகள் வேண்டும்
ஒலிம்பிக் கேமில் சிலம்பம் ஆடி
ஜெயித்திட வேண்டும் வேண்டும்
வேற்று நாட்டோர் நமது நாட்டில்
வேலைக்கு அலைய வேண்டும்
ஏழை நெஞ்சில் கோடி ஆசைகள்
செய்தது என்ன உங்கள் அரசுகள்
சுதந்திர வேள்வியை நடத்தும் படை இருக்கு
சுரண்டலை எதிர்த்திட இனியும் பயம் எதுக்கு
தோழனே..
(என் கனவினை..)

பட்டி தொட்டிக்கும் பளிங்கு கல்லாலே
ரோடு வேண்டும்
நடை பாதையில் தூங்கும்
ஏழைக்கும் சொந்த வீடு வேண்டும்
இருக்கும் பல கட்சி மாறி
ஒரு அக்ட்சி ஆக வேண்டும்
மக்கள் நம் மக்கள்
என்ற உணர்வுள்ள தலைவன் வேண்டும்
உண்மை உணர்வுள்ள தலைவன் வேண்டும்
ஏவு கணையாய் இருக்கும் மக்கள்
வெடித்திட வேண்டும் வேண்டும்
உலக அரங்கில் நமது நாடு
முதல் இடம் வாங்க வேண்டும்
இந்தியாவின் இளைஞர் கூட்டமோ
இளைத்தது அல்ல எந்த நாட்டுக்கும்
சுதந்திர வேள்வியை நடத்தும் படை இருக்கு
சுரண்டலை எதிர்த்திட இனியும் பயம் எதற்கு
தோழனே..
(என் கனவினை..)

படம்: தேசிய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam