Saturday, August 30, 2008
Friday, August 29, 2008
666. நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
பதிந்தவர் MyFriend @ 8:16 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1960's, P சுசீலா, TM சௌந்தர்ராஜன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி
664. குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
பதிந்தவர் MyFriend @ 12:05 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1960's, P சுசீலா, TM சௌந்தர்ராஜன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி
Wednesday, August 27, 2008
663. பேசுவது கிளியா
பதிந்தவர் கப்பி | Kappi @ 6:41 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1960's, P சுசீலா, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி
Tuesday, August 26, 2008
662.பனி இல்லாத மார்கழியா?
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா
அழகில்லாத ஓவியமா
ஆசையில்லாத பெண் மனமா
அழகில்லாத ஓவியமா
ஆசையில்லாத பெண் மனமா
மழையில்லாத மானிலமா
மலர் இல்லாத பூங்கொடியா(2)
(பனி இல்லாத )
தலைவனில்லாத காவியமா
தலைவி இல்லாத காரியமா
கலை இல்லாத நாடகமா
காதல் இல்லாத வாலிபமா(2)
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
நிலையில்லாமல் ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும்
பருவம் செய்யும் கதையல்லவா(2)
(பனி இல்லாத)
விரும்பிக்கேட்டவர் : ஒற்றை அன்றில் ஸ்ரீ
திரைப் படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்கள்: பி.சுசீலா, டி.எம்.எஸ்
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
வரிகள்: கண்ணதாசன்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 11:03 AM 3 பின்னூட்டங்கள்
661. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கை தேடுதே சொர்க்கம் கண் மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்
(ராஜாவின்)
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தைக் குடித்தேன்
அணைக்கத் துடித்தேன்
(ராஜாவின்)
ஆசையில் விளைந்த மாதுளன்க்கனியோ
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ
உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
உறவினில் மலர்ந்தேன்
(ராஜாவின்)
பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையைச் சொன்னேன்
தழுவிடக் குளிர்ந்தேன்
(ராஜாவின்)
படம் : அன்பே வா
பாடல் : டி.எம்.எஸ்
தொகுதி : எம்.ஜி.யாரின் காதல் கீதங்கள்
பதிந்தவர் Iyappan Krishnan @ 12:45 AM 1 பின்னூட்டங்கள்
Monday, August 25, 2008
660.ஆகா நம் ஆசை நிறைவேறுமா.....
ஆகா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையைப்போல மறைந்து போக நேருமா
அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தலின்றிப் போகுமா
ஈடில்லா இருபறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போது பகை வல்லூறாகத் தோன்றுமோ(ஈடில்லா)
வல்லூறானதை வனத்தில் வாழும் வேடன்
ஆகி நான் (வல்லூறானதை)
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால் -
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்
ஆஆ
(ஆகா நம் ஆசை )
அருமை மொழி காதில் அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்ந்தேன் அத்தானே
(உன்)அழகே நீரோடை அதில் நீந்தும் மீனைப்போல
ஆனந்தமானேன் என் கண்ணே (அருமை மொழி)
ஆஆஆஆ
உமது ஆனந்தமே அழியாச்செல்வமே(2)
ஆருயிரே நானுனக்கே சொந்தமே(2)-என்
ஆஆஆஆஆ
ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை
ஆளுவோம்- நாம் (ஈருடல் )
திரைப்படம் : தாய்க்குப்பின் தாரம்
பாடலைப்பாடியவர்கள்: டி.எம். எஸ். P.பானுமதி
இசையமைத்தவர்: கே.வி .மகாதேவன்
பாடல்வரிகள் : சி.ஏ.லக்ஷ்மணதாஸ்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 6:15 PM 0 பின்னூட்டங்கள்
வகை C.A.லக்ஷ்மணதாஸ், KV மகாதேவன், P.பானுமதி, TM சௌந்தர்ராஜன்
659 - அன்பே வா... அன்பே வா..
அன்பே வா அன்பே வா வா வா வா
உள்ளம் என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா
அன்பே வா அன்பே வா வா வா வா
நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்
நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்
பாதையிலே வெளிச்சமில்லை பகல் இரவு புரியவில்லை
பார்வையும் தெரியவில்லை
ஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை
(உள்ளம் என்றொரு)
வான்பறவை தன் சிறகினை எனக்குத்தந்தால்
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்துவந்தே
காதலை வாழவைப்பேன்
அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்
(உள்ளம் என்றொரு)
பதிந்தவர் Iyappan Krishnan @ 2:02 PM 0 பின்னூட்டங்கள்
Sunday, August 24, 2008
658. சின்னம்மா சிலகம்மா - சக்கரக்கட்டி
பதிந்தவர் கப்பி | Kappi @ 8:33 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, 2008, AR ரஹ்மான், சின்மயி, பா. விஜய், பென்னி தயால்
Saturday, August 23, 2008
657. மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! போ!
பெண்:
மயக்கும் மாலைப்பொழுதே நீ போ!போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா!வா!
இன்னலைத் தீர்க்கவா!( மயக்கும்மாலை)
ஆண்: பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்க பாய்போடுமே (பன்னீர்)
(மயக்கும் மாலை)
பெண் :பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாட்டுமே(பாலூட்டும்
கொன்றை மலர்கள் அன்பினாலே
போடும் பூவைத் தன்னாலே (மயக்கும் மாலை)
ஆண்: கனியிதழ் காதல் பசிதீர்க்குமே
பெண்:காண்போம் பேரின்பமே
ஆண்:வானிலும் ஏது வாழ்விதுபோலே
பெண்:வசந்தமே இனி எந்நாளும்
இருவரும்: மயக்குமாலை.....
விரும்பிக்கேட்டவர்: தம்பி கதிர்
திரைப்படம்: குலேபகாவலி
பாடியவர்கள்: ஜிக்கி ,ஏ.எம் ராஜா
பாடலை இயற்றியவர்:டி.எம்.ராமைய்யா தாஸ்
இசையமைத்தவர்கள்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 3:32 PM 4 பின்னூட்டங்கள்
வகை AM ராஜா, TN ராமய்யா தாஸ், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, ஜிக்கி
Thursday, August 21, 2008
656.பாரிஜாதப்பூவே! அந்த தேவலோகத்தேனே!
பாரிஜாதப்பூவே அந்த தேவலோகத்தேனே
வசந்தகாலம் தேடிவந்தது ஓஓ
மதனராகம் பாடவந்திடு (பாரிஜாதப்பூவே)
ஓர்ரதம் ஏறி
ஊர்வலம் போவோம்- நாம்
ஊர்வலம் போவோம்
வானவில் ஊஞ்சல் ஆடிடோவோமே- நாம்
ஆடிடுவோமே
வீணையை மீட்டுகின்ற வாணியும் நீ
நாரதர் பாடுகின்ற கானமும் நீ (வீணையை)
நீலமேகமே ஒரு வானம் பாடியே (2)
சோலைக்குயில்கள் ஜோடிசேர்ந்ததே ஓ ஓ (பாரிஜாதப்பூவே)
ஆயிரம் காலம் வாழ்ந்திடவேணும்-நாம்
வாழ்ந்திடவேணும்
தாயாய் நீயும் தாங்கிட வேணும்-நீ
தாவியே ஓடிவரும் காவிரியே
ஓவியமே அழகு மேனகையே (தாவியே)
கோயில் தீபமே ஒரு தீவஜோதியே (2)
மேளதாளம் கேக்கவேணுமே (பாரிஜாதப்பூவே)
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 10:48 AM 4 பின்னூட்டங்கள்
வகை SN சுரேந்தர், இளையராஜா, சித்ரா
Wednesday, August 20, 2008
655.தேவன் கோயில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று
ஆண்:தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
பெண்:தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் என்று
ஆண்: கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
பெண்: உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது ( தேவன் கோயில்)
ஆண்: நானும் நின்றேன் சோலை ஓரம்
பெண்: நீயும் வந்தாய் மாலை நேரம்
ஆண்:பார்வை நான்கும் பேசும் ஜாலம்
பெண்:பார்த்தால் போதும் வெள்ளம் மோதும்
ஆண்: காதல் தேவியே நீ என் ஜோதியே
பெண்: ஊஞ்சல் போலே என்ணம் கோடி
நெஞ்சில் ஆடும் உன்னை நாடி
ஆண்: கண்ணே நீயும் கேளாயே
பெண்: அன்பே நீயும் எங்கே வந்தாய்
யாரைக்கண்டு இங்கே நின்றாய்
ஆண்: உள்ளம் என்ற மேடை உண்டு ஆடவா
பெண்: கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா
ஆண்: தேவன் கோயில் தீபம் ஒன்று
பெண்:ராகம் பாடும் நேரம் என்று
பெண்:வானும் காற்றும் உந்தன் தேவை
ஆண்:எந்தன் வாழ்வில் வந்தாய் நீயே
பெண்:உன்னை எண்ணி ஏங்கும் பூவை
ஆண்: உந்தன் அன்பே என்றும் தேவை
பெண்:நாளை ஊர்வலம் நாமும் காணுவோம்
ஆண்:காலம் கோடி ஆகும் போதும்
காதல் கீதம் என்றும் வாழும்
பெண்: கண்ணா நீயும் கேளாயோ
ஆண்: தேவன் கோயில் தீபம் ஒன்று
பெண்: கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
ஆண்: உள்ளம் உந்தன்வாசல் தேடி வந்தது
பெண்: தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 9:31 AM 4 பின்னூட்டங்கள்
வகை S ஜானகி, SN சுரேந்தர், இளையராஜா
Tuesday, August 19, 2008
654.மாமரத்து பூவெடுத்து ...
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 10:17 AM 3 பின்னூட்டங்கள்
வகை 1980's, SN சுரேந்தர், ஆபாவாணன், சசிரேகா, மனோஜ் க்யான்
653.தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளைமையின் நினைவுகள் பறந்தது
ஹோ நெஞ்சமே உன்னிடம் இன்று தான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட இளம் பெண்ணாலே பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள்
ஆறு போல ஓடவேண்டும்(தனிமையிலே )
என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே(2)
என் உள்ளப் பொன்வாசல் தேடி
இசை காற்றாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள்
ஊர வேண்டும் சேரவேண்டும்(தனிமையிலே )
ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே (2)
எண்ணாத இன்பங்கள் யாவும் இனி என்னாளும் உன்னோடு வாழும்
பனி நீராட்டும் இந்நேரம்
பாடவேண்டும் கூட வேண்டும்(தனிமையிலே)
பாடலைப்பாடியவர்கள் : SNசுரேந்தர் , ஜானகி
திரைப்படம்: சட்டம் ஒரு இருட்டறை
இசையமைத்தவர்கள் : சங்கர் கணேஷ்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 7:05 AM 0 பின்னூட்டங்கள்
வகை SN சுரேந்தர், சங்கர் கணேஷ், ஜானகி
Sunday, August 17, 2008
652.மலர்களே மலர்களே மலரவேண்டாம்
மலர்களே மலர்களே மலரவேண்டாம்
உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை
ஓய்வெடுங்கள்
இன்று தோழனை அழைத்துவந்து
தேனை விருந்து கொடுத்துவிட்டு
வம்பு செய்திகள் சுவைத்துக்கொண்டு
சிரித்து முறைத்து
விருப்பம்போல வாழும் (மலர்களே)
ஆடைகள் சுமைதானே
அதை முழுதும் நீக்கிவிட்டு குளிப்பேன்
யாவரேனும் பார்ப்பார்கள் என்ற
கவலையேதுமின்றி களிப்பேன்
குழந்தையென மீண்டுமாறும் ஆசை
எல்லோர்க்கும் இருக்கிறதே
சிறந்த சில நொடிகள் - வாழ்ந்துவிட்டேன்
என்னுள்ளம் சொல்கிறதே
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே
அட இங்கு பணிப்பெண்கள் யாருமில்லையே
இந்த விடுதலைக்கிணையின்று ஏதுமில்லையே
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி ( மலர்களே)
நீரோடு ஒரு காதல்
கடலையில் கால் நனைய நடப்பேன்
ஆகாயம் என்னைப்பார்க்க
மணல் வெளியில் நாள்முழுதும் கிடப்பேன்
புதியபல பறவைக்கூட்டம் வானில்
பறந்து போகிறதே
சிறகு சில உதிர்த்து நீயுமாவாய்
என்றே தான் அழைக்கிறதே
முகத்துக்கு ஒப்பனைகள் தேவையில்லயே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே
அசடுகள் வழிந்தி்ட ஆண்கள் இல்லையே
காலம் நேரம் கடந்த
ஞான நிலை.. (மலர்களே)
பாடலை விரும்பிக்கேட்டவர் ரம்யாரமணி
பாடலைப்பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
பாடலுக்கு இசையமைத்தவர்: யுவன்சங்கர்
திரைப்படம் : புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
பாடல் வரிகள் : தாமரை
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 10:47 AM 2 பின்னூட்டங்கள்
651.மாலைப்பொழுதின் மயக்கத்திலே...
நான் கனவு கண்டேன் தோழி (மாலைப்பொழுதின்)
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி (2)
ஆஆஆஆஆ(மாலைப் பொழுதின்)
இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி (2)
ஆஆஆஆஆ(மாலைப் பொழுதின் )
மணம் முடித்தவர் போல் அருகினிலே-ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் - அவர்
கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாமல் முடிவும் தெரியாமல்
மயங்குது எதிர் காலம்
மயங்குது எதிர் காலம் ஆஆஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
ஆஆஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
திரைப் படம்: பாக்யலஷ்மி
பாடியவர்: பீ.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி
விரும்பிக்கேட்டவர்கள் : தம்பி
அனு
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 10:28 AM 22 பின்னூட்டங்கள்
Friday, August 15, 2008
Thursday, August 14, 2008
649. புத்தம் புது பூமி வேண்டும்
பதிந்தவர் கப்பி | Kappi @ 7:29 AM 2 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், சித்ரா, மனோ, வைரமுத்து
Wednesday, August 13, 2008
647. தேன்மொழி எந்தன் தேன்மொழி
தேன் மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்பு தேன் மொழி எந்தன் தேன்மொழி
இன்னும் ஏன் என்னை வாட்டுது
அழகே நீ தான் எங்கே? எங்கே?
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது
தேவலோகத் தேரில் இவள் பாரிஜாதப் பூவா
பாச தீபம் ஏந்தும் ஒரு ஆசை கோவில் தானா
பாதம் முகம் போதும் ஒரு போதை வலை வீசும்
கூந்தல் ஒரு பாரம் அது கோடை மழை மேகம்
யாரடி நீ.... யாரடி நீ தேவதையா
கனவு உனது உடல் ஆனதே
காற்றினிலே பார்வைகளால்
கவிதை எழுதி வரும் பாவையே
வாய்மையின் வானம் ஆயிரம் காலம்
வளர வளரும் நிலவே (தேன்மொழி)
மதன விழிகள் மயங்க மயங்க ஆடட்டும் டும் டும்
இன்பக் கனவு இங்கு வந்து வந்து போகட்டும் டும் டும்
உனது வதனம் அமுதை பொழியட்டும்
எனது நினைவு முழுதும் அழியட்டும் (உனது வதனம்)
கம்பன் உன்னை பார்த்த போது வார்த்தை இன்றி ஓடுவான்
கலங்கி கலங்கி பாடுவான் கன்னித் தமிழை சாடுவான்
கவியரசன் தோற்றானே குடி முழுதும் உனதடிமை (தேன்மொழி)
திரைப்படம் : சொல்லத்துடிக்குது மனசு
இசையமைத்தவர்: இளையராஜா
பாடலைப்பாடியவர்: மனோ
விரும்பி கேட்டவர்: மஜா
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 5:47 AM 6 பின்னூட்டங்கள்
Tuesday, August 12, 2008
Monday, August 11, 2008
643.கண்ணே என் கண்மணியே!
கண்ணே என் கண்மணியே
என் கையில் வந்த பூந்தோட்டமே
பொன்னே என் பொன்மணியே
தினம் பொங்கிவரும் நீரோட்டமே
நீ கேட்கத்தானே நான் பாடினேன்
நீ இல்லாத நேரம் நான் தேடினேன்
வாடி வாடி மானே
ராசா என் ராசாக்கண்ணு
ஒன்ன நம்பி வந்த ரோசாக்கண்ணு
ஒன்னோட ஒன்னா நின்னு
தினம் உன்னை எண்ணும் சின்னப்பொண்ணு
மாலைக்கும் மாலை என்மாமன்பொண்ணு சேல
அழைக்கும் வேள அசத்தும் ஆள
சேலைக்கும் மேல நான் சேர்ந்திருக்கும் சோல
கட்டுங்க வாழ கொட்டுங்க பூவ
நீ கூறும் வேள இனிவேறென்ன வேல
ஏ மாமந்தோள தெனம் நான் சேரும் மால
ஒன்னு தாங்க கூரச்சேல
காலம் சேர்ந்ததும் மால மாத்தனும்
காதல் கத சொல்லி போத ஏத்தனும்
வாடி வாடி மானே
ராசா என் ராசாக்கண்ணு
உன்ன நம்பி வந்த ரோசாப்பொண்ணு
ஒன்னோட ஒன்னாநின்னு தினம் ஒன்ன எண்ணும் சின்னப்பொண்ணு
உள்ளத்துக்குள்ள நீ சொன்ன கத நூறு
நெனச்சுப்பார்த்தா இனிக்கும் பாரு
கண்ணுக்குள் உன்ன நாகட்டி வச்சேன் பாரு
கலைப்பதாரு பிரிப்பதாரு
தேனோட பாலும் தினம் நான் ஊட்ட வேணும்
பூவான வானம் அதில் போய் ஆட வேணும்
இனி மேலே என்ன வேணும்
நாளும் பொழுதெல்லாம் உன்ன நினைக்கிறேன்
தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன்
ராஜா ராணி போலே
(கண்ணே என் கண்மணியே)
திரைப்படம் : கவிதை பாடும் அலைகள்
இசை : இளையராஜா
பாடிவர்கள் : சித்ரா மனோ
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 7:16 AM 0 பின்னூட்டங்கள்
642. தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பதிந்தவர் MyFriend @ 12:01 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், உன்னி கிருஷ்ணன், மனோ
Friday, August 8, 2008
641நாதஸ்வர ஓசையிலே...>> வானொலித் தொகுப்பு
ஸ்ரீ.காரைக்குறிச்சி அருணாசலம்
நாதஸ்வர ஓசையிலே...>> வானொலித் தொகுப்பு
திரு. அகிலா என்.விஜயகுமார், திருப்பூர் எனது நண்பர் அவரின் வானொலி படைப்பாக நாதஸ்வரம் இசைக்கருவி சினிமா பாடல்களில் எவ்வாறு உபயோகப்பட்டிருக்கிறது என்பதை தன் என்னங்களை ஆக்கமாக ஒலிவடிவாக இனிமையான பாடல்களூடன் வானொலி பதிப்பாக எனக்கு அனுப்பினார். இந்த ஒலித்தொகுப்பு கோவை சூரியன் பண்பலையில் இனிய இரவு நிகழ்ச்சியில் ஒலிப்பரப்ப பட்டது.
இதேபோல் சென்ற மாதம் இதே தேன்கிண்ணத்தில் காலதேவனும் கலைரசிகனும் என்ற ஒலித்தொகுப்பை எனது நண்பர் சேலம் திரு. ராஜ்குமார் படைப்பை அவரின் சார்பாக வழங்கினேன் அதை அனைவரும் கேட்டு இன்புற்றிருப்பீர்கள்.
மேற்கண்ட இரு நண்பர்களூம் எனக்கு சமீபத்தில் வானொலியின் மூலம் நண்பர்களானவர்கள். சரியாக சொல்லவேண்டுமென்றால். என்னுடைய ஒலித்தொகுப்பான “பாடும் நிலா பாலு” தளத்தில் ”பாடும் நிலாவும் பரமரசிகனும்” என்ற தலைப்பில் ஓர் ஒலித்தொக்குப்பு ஜூன் 4ஆம் தேதி அன்று எனது அபிமான பாடகர் டாக்டர் பாலுஜியின் பிறந்த நாளில் ஒலிபரப்பினார்கள். அது போலவே இதுவும் ஒரு வித்தியாசமான இனிமையான பாடல்கள் உடைய ஒலித்தொகுப்பு. சந்தேகத்திற்க்கு இடமில்லாமல் வானொலி அறிவிப்பாளர் திரு. லக்ஷ்மி நாராயணா அவர்கள் டிஜிட்டல் குரலில் மறுமுறை தேன் கிண்ணம் ரசிகர்களுக்காக வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். தங்களீன் ஆர்வத்தின் குறுக்கே நான் நிற்க விரும்பவில்லை. திரு. ஆர்.ஜி. லக்ஷ்மி நாராயணா குரலில் கேட்டு மகிழுங்கள் இந்த ஒலித்தொகுப்பை.
நாதஸ்வர நாயணத்தில் மூழ்க தாயாராகுங்கள். திருப்புர் அகிலா என்.விஜயக்குமார் அவர்களின் அபார உழைப்பிற்க்கு தேன்கிண்ணம் பதிவாளர்கள் சார்பாக மிக்க நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் பெருமையடைகின்றேன்.
குறிப்பு: ஒலித்தொகுப்பின் நடுவில் சில வானொலி விளம்பரங்கள் தவிர்க்க முடியவில்லை எப்போதும் தேன்கிண்ணத்தில் பாடல் மட்டும் கேட்டு வரும் இசைப்பிரியர்களூக்கு இதோ இந்த ஒலித்தொகுப்பு விளம்பரத்துடன் கேட்பதும் ஒரு வித்தியாமாக இருக்கும். எந்த வித உட்கருத்துடனும் இதை நான் சொல்லவில்லை. ஒலித்தொகுப்பு இறக்குமதி வகையில் பதியப்பட்டுள்ளது. ஆகையால் ஒலித்தொகுப்பை இறக்கு மதி செய்து விளம்பரங்களளை விரும்பாதவர்கள் ஓட்டி விட்டு கேளூங்கள். ஆணால், மறக்காமல் படைப்பாளிக்கு ஒரு வாழ்த்துச்சொல்லிவிடுங்கள்.
1. நாதஸ்வரம் ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் - பூவும் பொட்டும்.
2. மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு, கந்தன் கருணை,
3. நலந்தானா உடலும் உள்ளமும், தில்லானமோகனாம்பாள், நாதஸ்வரம் - மதுரை சகோதரர்கள்
4. தங்கத்தேரோடும் வீதியிலே, லக்ஷ்மிகல்யாணம்
5. எட்டு அடுக்கு மாளிகையில், பாதகாணிக்கை
6. சித்தாடை கட்டிக்கிட்டு, வண்ணக்கிளி
7. நடக்கும் என்பார் நடக்காது, தாயைக்காத்த தனயன்
8. இத்தன் மாந்தருக்கும் ஒரு கோவில் போதாது, உண்மையே உன் விலை என்ன?
9. சிங்கார தேவனே, கொஞ்சும் சலங்கை
|
பதிந்தவர் Anonymous @ 1:51 PM 4 பின்னூட்டங்கள்
வகை வானொலி
640. எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பதிந்தவர் MyFriend @ 4:44 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், கார்த்திக், சித்ரா
Thursday, August 7, 2008
639. நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
பதிந்தவர் MyFriend @ 4:56 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான்
Wednesday, August 6, 2008
Tuesday, August 5, 2008
637. நறுமுகையே நறுமுகையே
பதிந்தவர் MyFriend @ 1:55 PM 2 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ, மணிரத்னம்
Monday, August 4, 2008
635. எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
பதிந்தவர் MyFriend @ 4:25 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான்
634. ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே
பதிந்தவர் கப்பி | Kappi @ 6:16 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2008, AR ரஹ்மான், க்ரீஷ், நரேஷ் ஐயர், நா. முத்துக்குமார்