தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
நடந்தா காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணு படும்
பேசும் போது தாயப் பார்த்தேன்
தோளில் தூங்கும் பிள்ளை ஆனேன்
நெஞ்சத்திலே ஏஏ
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆரிரரோ பாடவோ
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
வீடெதும் இல்லே வாசலுமில்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இனி நான் கோடி முறை பொறப்பேன்
உன நான் பார்க்க விழி தொறப்பேன்
இது சத்தியமே
நீரும் போனா மேகம் ஏது
நீயும் போனா நானும் ஏது
என்னுயிரே ஏஏ
என்னுயிரில் நீ இருக்க
உன்னுயிரும் போகுமோ
(தாழம்பூவே வாசம் வீசு)
துபாய் ரங்கனின் நேயர் விருப்பமாக ..
திரைப்படம் : கைகொடுக்கும் கை
பாடியவர்கள் : SPB , S .ஜானகி
இசை: இளையராஜா
Thursday, January 13, 2011
தாழம்பூவே வாசம் வீசு
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 12:35 PM
வகை S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
ரொம்பப் பிடிச்ச பாட்டு :)))))))))))
நன்றிகள் பலப்பல...
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. ரசித்த பாடல் வலைப்பூவில் போட எடுத்து வைத்திருந்தேன். :)
பகிர்வுக்கு நன்றி.
Post a Comment