மயக்கும் வசிகர குரலுக்கு சொந்தகாரர் எஸ்.பி.பி மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் அமைந்த ஒரு அருமையான பாடல். வாலிப கவிஞரின் மிகைப்படுத்தாத அழகான உவமைகளோடு அருமையான வரிகளோடு அமைந்த பாடல் இது.பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்பாவை சொகுசு பார்க்க கோடி பெறும்.. கோடி பெறும்..சித்தாடை போட்ட சின்னமணித்தேருசில்லென்னு பூத்த செவ்வரளிப்பூவுசெப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலைதான்..(பாத கொலுசு)குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்தி வரும்கொய்யாத மாங்கனியை கொடியிடை தான் ஏந்தி வரும்மத்தாப்பு வாணமெல்லாம் வாய் சிரிப்பு காட்டி வரும்மானோடு மீன் இரண்டை மைவிழியோ கூட்டி வரும்பொன்னாக ஜொலிக்கும் பெண்பாவை அழகுஒன்னாக கலந்த முன்னூறு நிலவுபொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில் தான்(பாத கொலுசு)செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வச்ச சித்திரமேதென்பாண்டி கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமேதொட்டாலும் கை மணக்கும் தென்பழனி சந்தனமேதென்காசி தூறலிலே கண்விழித்த செண்பகமேபெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோஈரேழு உலகில் ஈடாக யாரோநெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ(பாத கொலுசு)பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்திபொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்திகல்யாண பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்திபூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டு உடுத்திஅன்றாடம் அலைந்து எங்கேயும் தேடிகண்டேனே எனக்கு தோதான ஜோடிவந்தாச்சு காலநேரம் மாலையிடத்தான்(பாத கொலுசு)சித்தாடை போட்ட சின்னமணித்தேருசில்லென்னு பூத்த செவ்வரளிப்பூவுசெப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலைதான்..பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்பாவை சொகுசு பார்க்க கோடி பெறும்.. கோடி பெறும்படம்:- திருமதி.பழனிச்சாமிஇசை:- இளையராஜாபாடியவர்:- SP.பாலசுப்பிரமணியம்பாடல்:- வாலி
Post a Comment
0 Comments:
Post a Comment