Friday, March 28, 2008

344. சகியே சகியே சகித்தால் என்ன



சகியே சகியே சகித்தால் என்ன
சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக
(சகியே..)

ஏப்ரல் மாதத்தில் பூக்கும் பூக்கள் அத்தனையும்
இன்று உன் கோட்டில் மலர்ந்ததென்ன
உந்தன் கொலுசின் பாடல் கொடியின் காதில்
கேட்டது கேட்டது அதனால்
ஜூலை ஏழாம் நாள் மணி ஏழு பத்தோடு
உந்த காலங்கள் உறைந்ததென்ன
உன்னை முதலாய் முதலாய் பார்த்ததும்
மூச்சே நின்றது நின்றது அதனால்
உன் உயிரின் பெண் வடிவம் நாந்தானே
என் உயிரின் ஆண் வடிவம் நீதானே
ஏன் என்று ஏதென்று சொல்வேனே
சில்லென்ற தீ ஒன்று நீதானே
(சகியே..)

உன்னை கண்டதும் எந்தன் பச்சை நரம்பும்
வெட்க செந்தூரம் வடிந்ததென்ன
உந்தன் உடலும் உடையும் ஊடல் கொள்ளும்
நகசியம் ரகசியம் என்ன
உன்னை கண்டதும் வானின் பாதி நீயென்றும்
வானில் அசரீரி ஒலித்ததென்ன
எந்தன் உயிரும் உடலும் உந்தன் திசையில்
சாய்ந்தது சாய்ந்தது என்ன
உன் மார்பும் உன் தோளும் என் வீடு
என்னென்ன செய்வாயோ உன் பாடு
உன் கண்ணம் நான் உண்ணும் பூக்காடு
உன் உதடே என் உணவு இப்போது
(சகியே..)

படம்: யூத்
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
வரிகள்: வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam