நெஞ்சே நெஞ்சே நீ எங்கேநானும் அங்கே என் வாழ்வும் அங்கேஅன்பே அன்பே நான் இங்கேதேகம் இங்கே என் ஜீவன் எங்கேஎன் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய்என் தாகங்கள் தீர்க்காமல் கடலில், ஏன் சேர்கிறாய்நெஞ்சே நெஞ்சே நீ எங்கேநானும் அங்கே என் வாழ்வும் அங்கேகண்ணே என் கண்ணே நான் உன்னை காணாமல்வானும் என் மண்ணும் பொய்யாக கண்டேனேஅன்பே பேரன்பே நான் உன்னைச் சேராமல்ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனேவெயில் காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்பிரிவொன்றை கொண்டால் தான் காதல் ருசியாகும்உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளும்உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அனலாகும்நெஞ்சே நெஞ்சே நீ எங்கேநானும் அங்கே என் வாழ்வும் அங்கேஅன்பே அன்பே நான் இங்கேதேகம் இங்கே என் ஜீவன் எங்கேகள்வா ஏய் கள்வா நீ காதல் செய்யாமல்கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதேகாதல் மெய் காதல் அது பட்டு போகாதேகாற்று நம் பூமி நமை விட்டு போகாதேஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்ஆனால் நீ மனம் மாறி போக கூடாதேஏ மச்சத் தாமரையேஎன் உச்சத் தாரகையேகடல் மண்ணாய் போனாலும்நம் காதல் மாறாதேநெஞ்சே நெஞ்சே நீ எங்கேநானும் அங்கே என் வாழ்வும் அங்கேஅன்பே அன்பே நான் இங்கேதேகம் இங்கே என் ஜீவன் எங்கேஎன் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்உன் தாகங்கள் தீராமல் மழையே ஏன் வருகிறாய்படம் : அயன் (2009)இசை : ஹாரிஸ் ஜெயராஜ்பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, மாலதிவரிகள் : வைரமுத்து
Post a Comment
0 Comments:
Post a Comment