Friday, July 31, 2009
Thursday, July 30, 2009
அக்னி நட்சத்திரம் - ஒரு பூங்காவனம்
|
ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
(ஒரு பூங்காவனம்...)
நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
(ஒரு பூங்காவனம்...)
நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
(ஒரு பூங்காவனம்...)
படம் : அக்னி நட்சத்திரம்
பாடியவர் : S ஜானகி
இசை : இளையராஜா
பதிந்தவர் G3 @ 11:46 AM 3 பின்னூட்டங்கள்
எங்கே என் புன்னகை
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், SP பாலசுப்ரமணியம், ஷோபா
Wednesday, July 29, 2009
சக்கர இனிக்கிற சக்கர
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், SP பாலசுப்ரமணியம், சுஜாதா
Tuesday, July 28, 2009
பூவேலி - காண்பதில் எல்லாம்
காண்பதில் எல்லாம் தலைகீழ் தோற்றம்
என்னொடு ஏனோ இத்தனை மாற்றம்
பூமி என்பது தூரம் ஆனதே
நட்சத்திரங்கள் பக்கம் வந்ததே
மனிதர் பேசும் பாஷை மறந்து
பறவைகளோடு பேச தோணுதே
காணும் பிம்பம் கண்ணில் மறைந்து
காணா உருவம் கண்ணில் தோணுதே
அன்பு திருமுகம் தேடி தேடி
கண்கள் என்னை தாண்டி போகுதே
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
புரியா மொழியோ புரிந்து போகும்
புரிந்த மொழியோ மறந்து போகும்
சரியாத உடை சரி செய்வதாக
சரியாய் இருந்தும் சரியச் செய்யும்
நிலவை போலவே இருளும் புடிக்கும்
உணவை போலவே பசியும் ருசிக்கும்
எந்த பேனா வாங்கும் பொழுதும்
என்னவள் பெயர் தான் எழுதிப்பார்க்கும்
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
கண்ணாடி முன்னே பேசிப் பார்த்தால்
வார்த்தைகள் எல்லாம் முந்தி அடிக்கும்
முன்னாடி வந்து பேசும் பொழுதோ
வார்த்தைகள் எல்லாம் நொண்டி அடிக்கும்
பாதிப் பார்வை பார்க்கும் போதே
பட்டாம் பூச்சிகள் நெஞ்சில் பறக்கும்
கல்லில் இருந்தும் கவிதை முளைக்கும்
காகிதம் மணக்கும் கண்ணீர் இனிக்கும்
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
கண்கள் என்னும் இரண்டு ஜன்னல்
திறந்து வைத்தும் மூடிக் கொள்ளும்
இதயம் என்னும் ஒற்றைக் கதவு
மூடி வைத்தும் திறந்து கொள்ளும்
நீ என்பது நீ மட்டும் அல்ல
மூளையின் மூலையில் ஒரு குரல் கேட்கும்
நான் என்பதின் இன்னொரு பாதி
யார் என்பதை இதயம் கேட்கும்
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
படம் : பூவேலி
இசை : பரத்வாஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன், சுஜாதா
மாசிலாமணி - டோரா டோரா அன்பே டோரா
டோரா டோரா அன்பே டோரா
உனக்கு என்ன அழகே ஊரா
நீ என்ன பூக்களின் தேசமா
டோரா டோரா அன்பே டோரா
மனசும் மனசும் பேசுது ஜோரா
நீ என்ன என்னுயிர் சுவாசமா
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே
என் உயிரின் துண்டாகும்
உன் ஸ்பரிசத்தில் நிறமாற்றங்கள்
என் மேலே உண்டாகும்
உந்தன் உயிரோடு உயிர் சேறும் ஓர் நொடி
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி
(டோரா டோரா..)
இது இது இது இது காதலா
என் இதயத்திலே ஒரு கூக்குரல்
அது அது அது அது காதல்தான்
என்னை தடவியதே உன் பூவிதழ்
பூக்கூடை போலே தான் என் வசம் மோதினாய்
கூழாங்கல் போலே தான் உடைகிறேன் ஏந்துவாய்
இதயம் எங்கே இயங்கும் என்று
உன்னால் கண்டேன் இப்போதே
(உந்தன்..)
ஒரு ஒரு ஒரு ஒரு சமயத்தில்
உன் மனதினிலே என் ஞாபகம்
சில சில சில சில நேரத்தில்
பொய் கோபத்தை காட்டிடும் உன் முகம்
யார் கண்கள் பார்த்தாலும் உன்னைப் போல் தோன்றுதே
ஐயப்போ கிறுக்கா நீ உன் மனம் திட்டுதே
எனக்கும் கூட உனக்கு கூட
இது போல் மாற்றம் உண்டாச்சோ
(உந்தன்..)
(டோரா..)
படம்: மாசிலாமணி
இசை: D இமான்
பாடியவர்கள்: பால்ராம், கல்யாணி
Monday, July 27, 2009
சத்தம் போடாதே : அழகுக் குட்டிச் செல்லம்
அழகுக் குட்டிச் செல்லம்
உன்னை அள்ளித் தூக்கும் போது
உன் பிஞ்சுவிரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளைக் கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பிப் போக மாட்டேன்
அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே
எனக்குப் பேசத் தெரியல
எனக்குத் தெரிந்த பாஷை பேச
உனக்குத் தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புதுப்பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி
ரோஜாப்பூ கைரெண்டும்
காற்றோடு கதைபேசும்
உன் பின்னழகில் பெளர்ணமிகள்
தகதிமிதா ஜதிபேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால்வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டைப் பிடித்துவிட்டான் இப்படி ஓர்
அட்டினக்கால் தோரணை தோரணை
நீ தின்ற மண்சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்
நீ சிணுங்கும் மொழிகேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்குக் காட்டி ஓடுகின்ற
கண்ணனே புன்னகை மன்னனே
திரைப்படம் : சத்தம் போடாதே
பாடல் : நா. முத்து குமார்
பாடியவர் : சங்கர் மஹாதேவன்
இசை : யுவன் சங்கர் ராஜா
பதிந்தவர் நாமக்கல் சிபி @ 8:32 PM 1 பின்னூட்டங்கள்
இதயத்தை திருடாதே - காவியம் பாடவா தென்றலே
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே
காவியம் பாடவா தென்றலே
விளைந்ததோர் வசந்தமே
புதுப்புனல் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் எனபதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
கலைந்து போகும் கானல் நீரிது
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
புலர்ந்ததோ பொழுதிதுவோ
புள்ளினத்தின் மகோத்ஸவம்
இவை மொழி இசைத்ததும்
சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே
மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்கம்தான்
முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
காவியம் பாடவா தென்றலே
படம் : இதயத்தை திருடாதே
இசை : இளையராஜா
பாடியவர் : மனோ
பாடல் வரிகள் : வாலி
வாமணன் - ஒரு தேவதை பார்க்கும்
ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
மிக அருகினில் இருந்தும் தூரமிது
இதயமே ஓ இவளிடம்
உருகுதே ஓ
இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
பார்க்காதே ஓ என்றாலும் ஓ
கேட்காதே ஓ..
என்னை என்ன செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும் தரையினில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வாழ்க்கை தெரிஎதும் தொலைத்து போகிறேன்
காதல் என்றால் ஓ பொல்லாதது
புரிகின்றது ஓ
கண்கள் இருக்கும் காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே
மரணன் நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழ்வேன்
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ
இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
(ஒரு தேவதை..)
படம்: வாமணன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ரூப்குமார்
பதிந்தவர் MyFriend @ 5:10 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2009, யுவன் ஷங்கர் ராஜா, ரூப்குமார்
Sunday, July 26, 2009
வயசுப் பொண்ணு : காஞ்சிப் பட்டுடுத்தி
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகை பெற வேண்டும்
தென் குமரி கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே
பெண் குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்
(தென் குமரி கடலினிலே...)
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பேசுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
நாம் சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
(காஞ்சிப்பட்டுடுத்தி...)
தேனருவிக்கரையினிலே திருக்குற்றால மலையினிலே
நீரருவி உடல் தழுவக் குளிக்கணும்
நான் நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
பொய்க்கோபம் கொண்டு நீ விலகிப்போகணும்
பொய்க்கோபம் கொண்டு நீ விலகிப்போகணும்
(காஞ்சிப்பட்டுடுத்தி...)
பூம்புகாரின் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளை சேர்க்கணும்
(பூம்புகாரின் நாயகியாம்...)
மாமியார் வாழ்த்தனும் மற்றவர் போற்றனும்
மாமியார் வாழ்த்தனும் மற்றவர் போற்றனும்
இந்த மாநிலமே உன் புகழை பாடனும்
இந்த மாநிலமே உன் புகழை பாடனும்
(காஞ்சிப்பட்டுடுத்தி...)
படம்: வயசுப்பொண்ணு.
பாடியவர்கள்: யேசுதாஸ், சாவித்திரி
பாடலாசிரியர் : முத்துலிங்கம்.
இசை: மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதன்.
இன்று பிறந்த நாள் விழா காணும் அன்பு நண்பர்
நட்புடன் ஜமால் அவர்களுக்காக இந்தப் பாடல் பரிசளிக்கப் படுகிறது!
இந்தப் பாடல் டெடிகேட் செய்யப் படுகிறது!
பதிந்தவர் நாமக்கல் சிபி @ 11:59 PM 16 பின்னூட்டங்கள்
ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்
பதிந்தவர் MyFriend @ 5:35 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, தேவா, மது பாலகிருஷ்ணன், ஹரிணி
வாமணன் - ஏதோ செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
(ஏதோ..)
உன்னோடு பேசினால் உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே
கண்ணாடி பார்க்கையில் என் கண்கள் உன்னை காட்டுதே
பெண்ணே இது கனவா நிஜமா உன்னை கேட்கின்றேன்
அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே
பெண்ணே எந்தன் கடிகாரம் எந்தன் பேச்சை கேட்கவில்லை
உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை
இதுவரை யாரிடமும் என் மனது சாயவில்லை
என்ன ஒரு மாயம் செய்தாய் என்னிடத்தில் நானுமில்லை
என்ன இது என்ன இது என் நிழலை காணவில்லை
உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை
எங்கே என்று கேட்டேன் உன் காலடி காட்டுதடி
அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே
காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள வார்த்தை ஏதும் தேவையில்லை
மனதில் உள்ள ஆசை சொல்ல மௌனம் போல மொழி இல்லை
இதுவரை என் உயிராய் இப்படி நான் வாழ்ந்ததில்லை
புத்தம் புது தோற்றமிது வேரெதுவும் தோன்றவில்லை
நேற்று வரை வானிலையில் எந்த ஒரு மாற்றமில்லை
இன்று எந்தன் வாசலோடு கண்டுகொண்டேன் வானவில்லை
ஒரே ஒரு நாளில் முழு வாழ்க்கை வாழ்ந்தேனே
அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே
ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
(ஏதோ..)
படம்: வாமணன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஜாவேட் அலி, சௌம்யா ராவ்
பதிந்தவர் MyFriend @ 4:58 AM 0 பின்னூட்டங்கள்
Friday, July 24, 2009
தாலி தானம் : ஒரு புல்லாங்குழல்....!
பி.சுசீலா:
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
வாணி ஜெயராம்:
என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன்
அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன்!
என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன்
அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன்!
பி.சுசீலா:
பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்!
பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன்!
பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்!
பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன்!
வாணி ஜெயராம்:
கண்கள் ரெண்டும் வைரத் துண்டு
கைகள் ரெண்டும் அல்லிச் செண்டு
அதில் தேன் எடுத்தேன் சுவைத்தேன்
சுசீலா:
பட்டம் கட்டும் மன்னன் என்று
கப்பம் கட்ட முத்தம் ஒன்று கொடுத்தேன்
மலர்த்தேன் குவித்தேன்!
வாணி ஜெயராம்:
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
சுசீலா:
முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன்
மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன்!
முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன்
மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன்!
வாணிஜெயராம்:
பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன்
மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன்!
பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன்
மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன்!
சுசீலா:
பட்டு வைத்த கன்னம் ரெண்டு
தொட்டு வைத்த சின்னம் ஒன்று
பதித்தேன் அதில் தேன் குடித்தேன்!
வாணி ஜெயராம்:
பஞ்சு மெத்தை நெஞ்சிலிட்டு
அஞ்சுகத்தைக் கொஞ்சவிட்டு
அணைத்தேன் ரசித்தேன் சிரித்தேன்!
சுசீலா:
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இருவரும்:
ஆரீராரிரோ ஆரீராரிரோ
ஆரீராரிரோ ஆரீராரிரோ
பதிந்தவர் நாமக்கல் சிபி @ 10:23 PM 0 பின்னூட்டங்கள்
கோகுலத்தில் சீதை : எந்தன் குரல் கேட்டு...!
எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே நண்பனே...
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்வேன்
நண்பனே நண்பனே நண்பனே...
எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
ல ல லா ல ல லா........
இரவென்றும் பகலென்றும்
உனக்கில்லையே...
இளங்காலை பொன்மாலை
உனக்கில்லையே....
மது வென்னும் தவறுக்கு
ஆளாகிறாய்....
அதற்காக நியாயங்கள்
நீ தேடுகிறாய்
ஆயிரம் பூக்களில்
ஆனந்தம் காண்கிறாய்
நிறங்களே வேற்றுமை
நினைத்திடு நண்பனனே....
மது கிண்ணம் தலை எடுத்து
பெண்ணை விலைக்கொடுத்து
நீ மூடுவாய்.....
எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
ல ல லா ல ல லா........
வரவின்றி செலவானால்
தவறில்லையே
வாழ்நாட்கள் செலவானால்
வரவில்லையே
நேற்றோடும் இன்றோடும்
நீயில்லையே
நாளை உன் கையோடு
உனக்கில்லையே
யாரிடம் தவறு இல்லை
யாரிடம் குறை இல்லை
தூக்கமே நிம்மதி
தூங்கிடு நண்பனே.....
நீ கடந்த காலங்களை
களைந்து எறிந்துவிடு
விழி மூடுவேன்........
எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே.. நண்பனே ...நண்பனே...
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்வேன்
நண்பனே... நண்பனே... நண்பனே...
படம்: கோகுலத்தில் சீதை
இசை : தேவா
பாடியவர் : சித்ரா
நன்றி : கவி தோழியின் பக்கங்கள்
பாடலை விரும்பிக் கேட்டவர் : நட்புடன் ஜமால்
பதிந்தவர் நாமக்கல் சிபி @ 2:59 PM 1 பின்னூட்டங்கள்
தென்றல் - வணக்கம் வணக்கம் வணக்கம்
பதிந்தவர் G3 @ 11:09 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, SP பாலசுப்ரமணியம், புஷ்பவனம் குப்புசாமி, வித்யாசாகர்
சொட்ட சொட்ட நனையுது
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், ஸ்ரீநிவாஸ்
Thursday, July 23, 2009
அயன் - பளபளக்குற பகலா நீ
பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை
கூட்டை தான் தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை
வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா அதை அனுபவிடா
காலம்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா
பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
எட்டித்தொடும் வயது இது
ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
அதிசயம் என்னவென்றால்
அதன் இருபக்கம் கூரிருக்கும்
கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூரியனில் செடி முளைக்கும்
புலன்களை அடக்கி வைத்தால்
தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்
காலில் குத்தும் ஆணி
உன் ஏணி என்று காமி
பல இன்பம் அள்ளிசேர்த்து ஒரு
மூட்டை கட்டி வா நீ வா நீ வா
பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
இதுவரை நெஞ்சிலிருக்கும் சில
துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து
தொடுவானம் வரை போய் வருவோம்
அடைமழை வாசல் வந்தால்
கையில் குடையின்றி வா நனைவோம்
அடையாளம் தான் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்
என்ன கொண்டு வந்தோம்
நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும்
வா வேற என்ன வேண்டும் வேண்டும்
பளபளக்குற பகலா நீ
படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை
கூட்டை தான் தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை
வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா அதை அனுபவிடா
காலம்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா
படம் : அயன்
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஹரிஹரன்
பதிந்தவர் G3 @ 1:00 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, ஹரிஹரன், ஹாரிஸ் ஜெயராஜ்
ராமன் தேடிய சீதை - வானத்தை விட்டு விட்டு
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, திப்பு, வித்யாசாகர்
Wednesday, July 22, 2009
கன்னத்தில் முத்தமிட்டால் - சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா
அமுதாவை கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
ஹே.. நச்சரிக்கும் சிட்டுக்குருவி
ஹே.. ரெக்கை கட்டி பறக்கும் அருவி
ஹேஹேஹேஹேஹேஹே
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
ஹே.. ஹே..
கல்லை கூட கனிய வைத்து பல்லை காட்டி சிரிக்க வைக்கும்
ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா
அமுதாவை கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா
ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா
அமுதாவை கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா
சின்ன சின்ன குறும்புகள் திட்டமிட்டு புரிகிறாள்
பொங்கி வரும் கோபத்தை புன்னகையில் துடைக்கிறாள்
கன்னக்குழியில் கவலை புதைப்பாள்
ஜடையில் ஆகாயம் இழுப்பாள்
இன்பங்களின் எல்லையும் அவளே
தொல்லைகளின் பிள்ளையும் அவளே
நகமுள்ள தென்றலும் அவள்தானே
அலையை பிடித்து கரையில் கரையில் கட்டுவது நடக்கமுடிந்த செயலா
இவளும் கூட ஆட பிறந்த அலையல்லவாஆஆஆஆஆஆ
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
ஹே.. நச்சரிக்கும் சிட்டுக்குருவி
ஹே.. ரெக்கை கட்டி பறக்கும் அருவி
ஹேஹேஹேஹேஹேஹே
பல்முளைத்த பட்டாம்பூச்சி கன்னத்தை கடிக்குமே
பாசத்தோடு முத்தம் தந்து பரிசும் கொடுக்குமே
அன்னை அன்னை அவளுக்கே அன்னை கூட இவள்தானே
மகளென்று வைத்திருக்கும் மாமியாரும் இவள்தானே
பள்ளி வகுப்பில் வில்லி இவளே
படிப்பில் ஹீரோயின் இவளே
ஆயிரம் கேள்விகள் எறிவாள்
அவள் மட்டும் விடைகள் அறிவாள்
டீச்சருக்கு வீட்டில் வகுப்பெடுப்பாள்
இவளை நாளை மணக்கப்போகும் அசடு என்ன பாடு படுவான்
இவள் பாதம் கழுவும் நீரில் சமயல் செய்வான்
நோ நோ நோ நோ நோ நோ நோ
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
ஹே.. ஹே..
கல்லை கூட கனிய வைத்து பல்லை காட்டி சிரிக்க வைக்கும்
படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
இசை : AR ரஹ்மான்
பாடியவர்கள் : சுஜாதா, ஹரிஹரன், திப்பு, கார்த்திக், மதுமிதா
பாடல் வரிகள் : வைரமுத்து
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேன்கிண்ணத்தின் சூறாவளி .:: மை ஃபிரண்ட் ::. ற்காக சுஜாதா பாடிய இந்த பாடல் ஸ்பெஷலாக டெடிகேட் செய்யப்படுகிறது :-)
பதிந்தவர் G3 @ 9:50 AM 6 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், கார்த்திக், சுஜாதா, திப்பு, மதுமிதா, வைரமுத்து, ஹரிஹரன்
நினைத்தாலே இனிக்கும் - நண்பனை பார்த்த தேதி மட்டும்
நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டிக்கொண்டது என் ஞாபகத்தில்
என்னுயிர் வாழும் காலமெல்லாம்
அவள் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்
உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்
என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மறவாதே
(நண்பனை..)
சிறகு இல்லை வானம் இல்லை
வெறும் தரையிலும் நாங்கள் பறப்போம்
இளமை இது ஒரு முறைதான்
துளி மிச்சம் இல்லாமல் இசைப்போம்
கவலை இல்லை கபடம் இல்லை
நாங்கள் கடவுளுக்கே வரம் கொடுப்போம்
எரிமலையோ வெறும் மழையோ
எங்கள் நெஞ்சை நிமிர்த்திதான் நடப்போம்
வரும் காலம் நமதாகும்
வரலாறு படைப்போம்
உறங்காமல் அதற்காக உழைப்போம்
(நண்பனை..)
விதவிதமாய் கனவுகளை தினம்
நெஞ்சிலே நாங்கள் சுமப்போம்
பயமறியா பருவம் இது
நாங்கள் நினைப்பதெல்லாம் செய்து முடிப்போம்
சுமைகள் என்று ஏதும் இல்லை
இங்கு ஜாதி மதங்களை மறப்போம்
பெண்களென்றும் ஆண்களென்றும்
உள்ள பாகுபாட்டையும் வெறுப்போம்
மழை தூவும் வெயில் நேரம்
அது போலே மனது
மலர் போலே தடுமாறூம் வயது
(நண்பனை..)
படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்: பென்னி தயால்
பதிந்தவர் MyFriend @ 1:37 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2009, பென்னி தயால், விஜய் ஆண்டனி
Tuesday, July 21, 2009
ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு
பதிந்தவர் MyFriend @ 2:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, மஹதி, ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிஹரன், ஹாரிஸ் ஜெயராஜ்
கிழக்குச் சீமையிலே : மானூத்து மந்தையில...
மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி - அவன்
தங்க கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சுமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே
நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமச்சி
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா
வெல்லக் கொடல் வலிச்சா வெல்லப்பூண்டு உரிச்சி
வெல்ல கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
பிள்ளைக்கு தாய்ப்பாலத் தூக்கிக் குடுக்கச்சொல்லு
மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு
ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்
வெள்ளிச்சங்கு செஞ்சா வெளக்கி வெக்க வேணுமுன்னு
தஙத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு
மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
படம் : கிழக்குச் சீமையிலே
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
------------------------------------------------------------------------------
பாடலை விரும்பிக் கேட்டவர்:
கல்லூரியில் உடன்பயின்ற தன் உடன்பிறவாச் சகோதரிக்கு பொண்ணு பிறந்துட்டா என்றவுடன் சந்தோஷத்தில் துள்ளிக்குதிச்ச தாய்மாமா பிரபு
உங்க வாழ்த்துக்களை அவருக்கு தனிமடலிலும் தெரியப் படுத்தலாம் : skpprabhu@gmail.com
தொலை பேசி எண்: +91 9894186762
வாழ்த்துக்கள் தாய்மாமன் பிரபு!
பதிந்தவர் நாமக்கல் சிபி @ 12:12 PM 1 பின்னூட்டங்கள்
இருவர் - ஹல்லோ மிஸ்டர் எதிர்கட்சி
பதிந்தவர் G3 @ 11:38 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், ஹரிணி
Monday, July 20, 2009
காதல் சொல்வது உதடுகள் அல்ல
காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல கவிதைகள் தலைவா
கவிதை என்பது புத்தகம் அல்ல பெண்கள் தான் சகியே
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல நீ மட்டும் சகியே
அடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடையா
இது என்னடி இதயம் வெளியேறி அலைகிறதே காதல் இதுவா
எப்படி சொல்வேன் புரியும் படி ஆளைவிடுடா
மன்னிச்சுக்கடி காதல் செய்வேன் கட்டளைப்படி
(காதல்..)
படப்படக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும் சொல்வது சரியா
தவறு செய்தால் முத்தம் தந்து என்னை திருத்திக்கணும் தண்டனை சரியா
எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லிவிடுடா
சொல்லுகிறேன் இப்போது முத்தம் கொடுடி
(காதல்..)
படம்: பத்ரி
இசை: ரமண கோகுலா
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சுனிதா
பதிந்தவர் MyFriend @ 11:53 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, சுனிதா, ரமண கோகுலா, ஸ்ரீநிவாஸ்
Sunday, July 19, 2009
ஏஞ்சல் வந்தாளே
பதிந்தவர் MyFriend @ 11:47 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, சித்ரா, தேவிஸ்ரீ பிரசாத், ரமண கோகுலா
Saturday, July 18, 2009
மாலை நேரம் மழை தூறும் காலம்
blogger சோம்பேறி தன் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருடைய விருப்பப்பாடலாக இங்கே இப்பாடல் . பிறந்தநாள் வாழ்த்துக்கள் சோம்பேறி..
மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே
ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..
உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓர் ஆயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்னை இழந்தேன் என
ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..
ஒரு முறை
வாசலில்
நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன?
இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன?
என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன?
(மாலை நேரம் மழைத்தூறும் )
(ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது)
இசை: GV ப்ரகாஷ்
திரைப்படம்: ஆயிரத்தில் ஒருவன் (2009)
பாடியவர்: அண்ட்ரியா
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 2:40 PM 5 பின்னூட்டங்கள்
தங்க மகன் இன்று சிங்க நடை
பதிந்தவர் MyFriend @ 11:37 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, KJ ஜேசுதாஸ், சித்ரா, தேவா
Friday, July 17, 2009
பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பாட்ஷா பாட்ஷா பாட்ஷா பாட்ஷா
ஹேய் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பட்டாளத்து நடையப்பாரு பகை நடுங்கும் படையப்பாரு
கோட்டு ஷூட்டும் ரெண்டும் எடுத்து
போட்டு நடக்கும் புலியப் பாரு
காற்றில் எறியும் நெருப்பைப்போல சுட்டெறிக்கும் விசியைப் பாரு
நாற்றம் வேர்வை ரெண்டும் கொண்ட
ராஜாங்கத்தின் மன்னன் தானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
பாட்ஷா பாட்ஷா பாட்ஷா பாட்ஷா
ஹேய் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பாச்சா என்னைக்கும் பலிக்கும் பாரு
பாட்ஷா திட்டம் ஜெயிக்கும் பாரு
பம்பாயில் இவன் பேர சொன்னா
அரபிக் கடலும் அலறும் பாரு
கள்ளிப் பயல்கள் சதியை எல்லாம்
சொல்லி அடிக்கும் சூரன் பாரு
நூறு முகங்கள் மாறி வந்தும்
ஏறு முகத்தில் இருக்கும் வீரந்தான்
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
படம்: பாட்ஷா
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பதிந்தவர் MyFriend @ 11:29 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், தேவா
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
பதிந்தவர் நாகை சிவா @ 9:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, கெளதமி ராவ், தாமரை, ரோபி, ஹாரிஸ் ஜெயராஜ்
சமயபுரத்தாளே சாட்சி : சமயபுரத்து நாயகியே....!
சமயபுரத்து நாயகியே
சமயத்தில் காக்கும் நாரணியே!
காரணியே பவ தாரணியே அன்னபூரணியே!
வேப்பஞ்சேலை உடுத்திய பேருக்கு
காப்பாய் நிற்கும் தயவல்லவோ?!
உரியவர்கருளும் பெரியபாளையத்
திருநகர் வாழும் தாயல்லவோ?!
கேட்டை களையும் கோட்டை மாரியாய்
சேலத்தில் வளரும் சுடரல்லவோ?!
பால் குடம் பொங்கல் படைப்பவர்க்குதவும்
கோலவிழி அம்மன் அவளல்லவோ?! (சமயபுரத்து)
ஆடித் தேர் கொண்டு அழகாய் வலம் வரும்
வேற்காடமர்ந்த அருளல்லவோ?!
ஆலயம் மன்ன திருப்பெயர் விளங்க
அருமறை பாடும் பொருளல்லவோ?!
தருமத்தைக் காப்பாள் துயர்களைத் தீர்ப்பாள்
துர்க்கை பவானி அவளல்லவோ?!
கருமத்தி நீக்கி கவலையைப் போக்கி
கை கொடுக்கும் குளிர் நிழலல்லவோ?!
சிம்ம வாஹினி! ஜகன் மோகினி! தர்ம ரூபினி! கல்யாணி!
கமல வாசினி! மந்தஹாசினி! கால பயங்கரி! காமாக்ஷி!
மாலினி சூலினி ஜனனி ஜனனி சங்கரி ஈச்வரி மீனாக்ஷி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
சர்வத்திற்கும் இங்கு நீ சாட்சி!
சமயபுரத்தாளே சாட்சி!
நன்றி : அம்மன்பாட்டு
பதிந்தவர் நாமக்கல் சிபி @ 3:32 AM 2 பின்னூட்டங்கள்
Thursday, July 16, 2009
ஸ்டைலு ஸ்டைலுதான்
பதிந்தவர் MyFriend @ 6:23 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், சித்ரா, தேவா
Wednesday, July 15, 2009
இத்துணூண்டு முத்ததில இஷ்டம் இருக்கா
பதிந்தவர் MyFriend @ 5:23 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, உதித் நாராயண், சௌமியா, வித்யாசாகர்
மறுபடியும் - எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே
வினாக்களும் கனாக்களும் வீனாக ஏன்
பொன்னாள் வரும் கை கூடிடும் போராட்டமே
நாளை என்றோர் நாளை நம்புங்கள்
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே
மண்மீதிலே எந்த ஜீவனுக்கும்
அளவில்லாத ஆசைகள்
ஒன்றல்லவே ஓராயிரத்தை
தாண்டி நிற்க்கும் தேவைகள்
மண்மீதிலே எந்த ஜீவனுக்கும்
அளவில்லாத ஆசைகள்
ஒன்றல்லவே ஓராயிரத்தை
தாண்டி நிற்கும் தேவைகள்
நினைத்தது நடப்பது எவன் வசம்
அணைத்தையும் முடிப்பது அவன் வசம்
தெய்வம் என்ற ஒன்றை நம்புங்கள்
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே
படம் : மறுபடியும்
இசை : இளையராஜா
பாடியவர் : KJ.ஜேசுதாஸ்
பதிந்தவர் G3 @ 1:48 PM 1 பின்னூட்டங்கள்
வகை 1990's, KJ ஜேசுதாஸ், இளையராஜா
Tuesday, July 14, 2009
தூக்கமும் கண்களை தழுவட்டுமே
வணக்கம் தேன் கிண்ண நேயர்களே, இதோ மீண்டும் ஒரு பழைய சாதம் பாடல் பட்டியலை பாருங்கள் தொகுப்பாள திரு.சூரியகாந்தன் காந்தக்குரலில் மனதை வருடும் மீண்டும் ஒரு மயிலிறகு ஒலித்தொகுப்பை கேட்டு மகிழுங்கள். இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.சூரியகாந்தன் அவர்களுக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.
1.மன்னவனே அழலாமா,கற்பகம்,பி.சுசீலா >> 2.தாயின் மடியில் தலை,தாயின்மடியில்,டி.எம்.எஸ்,வாலி >> 3.கன்னண் வருவான், >> 4.நீதியே நீயும் இன்னும் , பூம்புகார்,ஆர்.சுதர்ஸ்னம்.கே.பி.சுந்தராம்பாள்,மாயவநாதன், >> 5.சிங்கார புன்னகை,மகாதேவி >> 6.செல்லக்கிளிகலாம்,எங்கமாமா,கண்ணதாசன்,டி.எம்.எஸ்
7.கண்கள் இரண்டும்,மன்னாதிமன்னன்,எம்.எஸ்.வி.ராமமூர்த்தி,பி.சுசீலா
8.பாலும் பழமும்,டி.எம்.எஸ்,எம்.எஸ்.வி.ராமமூர்த்தி >> 9.தூக்கமும் கண்களை தழுவட்டுமே, எஸ்.ஜானகி.
|
பதிந்தவர் Anonymous @ 3:58 PM 0 பின்னூட்டங்கள்
வகை வானொலி
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே
ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அணல் வெளியோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறீயே தொட்டாச்சிணுங்கி பெந்தானோ
அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி
(அடி லஜ்ஜாவதியே..)
பூவரச இலையிலே பீப்பி செஞ்சு ஊதினோம்
பள்ளிக்கூட பாடம் மறந்து பட்டாம் பூச்சி தேடினோம்
தண்ணிப்பாம்பு வரப்பில் வர தலைதெறிக்க ஓடினோம்
பணங்காயின் வண்டியில் பசு மாட்டு தொழுவத்தை
சுற்றி வந்து பப்பாய்க்கு போனதாக சொல்லினோம்
அடடா வசந்தம் அது தான் வசந்தம்
மீண்டும் அந்தக் காலம் வந்து மகிழ்ச்சியாக மாறுமா
Baby dont you ever leave
I'm your don raja
Come on anytime You are my dilruba
I can never stop this feel in
I'm your don raja
yeah Hey Hey
Baby run your body with this freaky thin
and I wont let you go
and I wont let you down through the fire
through the limit
To the wall to just to be with you
I'm gladly risk it all
Ha let me do it one more time
do it one more time
Ha baby come on and
lets get it into the party
காவேரி நதியிலே தூண்டில்கள் போட்டதும்
கண்ணே உன் தூண்டில் முள்ளில் குட்டித்தவளை விழுந்ததும்
கை கொட்டி கேலி செய்த ஞாபகங்கள் மறக்குமா
கட்டை வண்டி மையினால் கட்ட பொம்மன் மீசையை
கண்ணே நீ வரைந்து விட்டு ராஜ ராஜன் என்றதும்
அடடா வசந்தம் அது தான் வசந்தம்
காலம் கடந்து போன பின்னும்
காதல் கடந்து போகுமா
(அடி லஜ்ஜாவதியே..)
படம்: 4 ஸ்டூடண்ஸ்
இசை: ஜாஸ்ஸி கிஃப்ட்
பாடியவர்: ஜாஸ்ஸி கிஃப்ட்
பதிந்தவர் MyFriend @ 11:05 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, ஜாஸ்ஸி கிஃப்ட்
Monday, July 13, 2009
துண்டை காணோம் துணிய காணோம்
துண்டை காணோம் துணிய காணோம்
துண்டை காணோம் துணிய காணோம்
தூங்கும் போது மணிய காணோம்
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
தொடாமலே தூக்குறியே பொடாவுல போடுறியே
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
குவாட்டர் அடிச்சேன் ஃபுல்லு அடிச்சேன் போதை ஏறல
உருண்டு படுத்தேன் பொறண்டு படுத்தேன் தூக்கம் போதல
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
நீ சிரிச்சா புது காவேரியும் இங்கே சுரக்கும்
நான் அணைச்சா அந்த நெய்வேலிக்குள் ஷாக்கு அடிக்கும்
இளநீர் குலையே என்ன இம்சை பண்ணுறியே
இளமை புயலாய் வந்து இடுச்சுத் தள்ளுறியே
நான் புயலிருக்கும் கேக்குடா
ஒடச்சிடாம தூக்குடா
தெகட்டும் வரை தின்னுடா நீ நீ நீ
சினேகிதனே என்ன சிந்தனைடா
மனசுக்குள்ளே எந்தன் தேவதைடா
ஓ சாத்து சாத்து சாத்துங்கடா
என்னை இழுத்து போத்துங்கடா
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
(துண்டை..)
வா திருடா நான் வாலிபத்தின் வாசப்படிடா
டா அடடா இவ டாட்டா தயாரிப்பாடா
சரியோ தவறோ வந்து தவுலு வாசிங்கடா
சலிக்கும் வரைக்கும் என்ன சல்லடையாக்குங்கடா
சும்மா சுறுக்குனு தான் கிள்ளுற
சுவிங்கமாக்கி மெல்லுற
ஒரசுரியே உசுப்புரியே நீ நீ நீ
சையோ சையடா எனக்கு சைவம் வேணாம்டா
ஹையோடா டையோடா இப்ப அதிகம் வேணாம்டா
தேக்கு தேக்கு தேக்கு மரம்
பாக்க பாக்க பாக்க ஆசை வரும்
(துண்டை..)
படம்: தேவதையை கண்டேன்
இசை: தேவா
பாடியவர்கள்: தனுஷ், அனுராதா ஸ்ரீராம்
பதிந்தவர் MyFriend @ 7:11 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, அனுராதா ஸ்ரீராம், தனுஷ், தேவா
எங்கிருந்தாய் நான் மண்ணில்
படம் : வின்னர் (2003)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : ஹாரீஸ் ராகவேந்திரா
வரிகள் :
பதிந்தவர் நாகை சிவா @ 2:25 AM 0 பின்னூட்டங்கள்
Sunday, July 12, 2009
பாச மலர் - வாராய் என் தோழி வாராயோ
பதிந்தவர் G3 @ 6:00 AM 4 பின்னூட்டங்கள்
வகை 1960's, LR ஈஸ்வரி, MS ராஜேஸ்வரி, கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி
Saturday, July 11, 2009
வாடி வாடி வாடி கைப்படாத சீடி
எனக்கு மியூசிக்கை பத்தி என்ன தெரியுமா?
பீட்டரக்காக்கு என்னை பத்தி தெரியல
அபிதேக்கோ சூப்பிஸ்தாணு
வாடி வாடி வாடி கைப்படாத சீடி
தௌஸண்ட் வால்ப் பல்பு போல கண்ணு கூசுதேடி
ஆ அவுத்துவிடும் பாட்டுல பல விசிலு சத்தம் நாட்டில
புரியாத ராகமெல்லாம் தேவையில்ல
அட கேளு கேளு இது கானாப் பாட்டு
நேரா உன் நெஞ்சுக்குள்ள சேரும் பாட்டு
அட டிஸ்கோ வந்தாலும் கிஸ்கோ வந்தாலும்
ஓரம் போகாது இந்த பாட்டு
அட மைக்கேல் வந்தாலும் மடோனா வந்தாலும்
தோத்துப் போகாது தமிழ் கானாப் பாட்டு
(வாடி..)
ஏய் பீட்டட் இன்னா குவாட்டர்
அவ தள்ளிகினு போறது உன் டாட்டர்
ஏய் ராமே கூலு மாமே பேசிக்கிட்டா தப்பில்ல
தொட்டபெட்ட மலையை பக்கம் ஏறாதே
ஏய் பாட்டிலுன்னா குலுக்குடா தியேட்டருன்னா கலக்குடா
சச்சினோட பாலிசி மாறாதே
ஏய் கேளு கேளு இது கானா பாட்டு
கவலைக்கெல்லாம் கப்சா கொடுக்கும் பாட்டு
அட ராக்கும் வந்தாலும் ஜாஸ்ஸு வந்தாலும்
காரம் குறையாது இந்த பாட்டு
ஷேக்கன் ஆகாது தமிழ் கானா பாட்டு
ஏய் கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமு
ஏய் சோமு எதுக்கு ஃபிலிம்மு
நீ நீயாக வாழ்ந்து பாரு மாமு
அட பந்தா எதுக்குடா கொஞ்சம் அடங்குடா
நேட்து வர நாயக்கர் கூட பண்ணுதானே
ஏய் பிகரு மடக்கத்தான் பிட்சா ஹார்ட் கேட்குதா
தாஸ் பார்க் கையேந்தி பவந்தானே
ஏய் கேளு கேளு இது கானா பாட்டு
அட மேதை என்றாலும் பேதை என்றாலும்
வேதம் போலாகும் இந்த பாட்டு
அட குமரி ஆனாலும் கிழவி ஆனாலும்
கூத்தாட வைகும் தமிழ் கானா பாட்டு
(வாடி..)
அட தூள் மாமே இது
இது தமிழ் கானா பாட்டு
படம்: சச்சின்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: விஜய்
பதிந்தவர் MyFriend @ 7:08 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, தேவிஸ்ரீ பிரசாத், விஜய்