தென்றல் காற்று பூவுக்காக
சிதறும் தூறல் பூமிக்காக
இன்று யாவும் நாளைக்காக
எனது பாடல் யாருக்காக
வந்தோமே வாழ்வில்
ஆனாலும் தேடல் தொடற
நிலாவைப்போல் தேயும் தேதிகள்
கட்டும் ஆடை பேருக்காக
கலைந்துப்போகும் தேவைக்காக
உதட்டுச்சாயம் ஆசைக்காக
உலர்ந்துப்போகும் லீலைக்காக
எல்லாமே மாயம் என்றாகும் வாழ்வில் தினமும்
கனாவைப்போல் தீரும் ஆசைகள்
கூடக் கூடக் கூடாது கூடல்
தேடத்தேடத் தீராது தேடல்
பாடப்பாட ஓயாதுப் பாடல் சுகமே சுகமே
(கூடக்..)
வீசுகின்ற ஓர் வாசம்
பூவுக்கில்லையே சந்தோஷம்
பூசிக்கொள்கிறேன் ஏதேதோ
தேகம் எங்கிலும் உன் வாசம்
கண் ஒன்று காதல் கண் ஒன்றூ
கண்ணிலே போதை உண்டு
இன்பமே யாவும் இன்பம்தான்
பெண் என்றும் துன்பம்தான்
கூடக் கூடக் கூடாது கூடல்
தேடத்தேடத் தீராது தேடல்
பாடப்பாட ஓயாதுப் பாடல் சுகமே சுகமே ஓ..
(கூடக்..)
தொட்டுக்கொள் நாளும் தொட்டுக்கொள்
உன்னிடம் நானே நானே
சொந்தமே யாருமே சொந்தம்தான்
நீ சொர்க்கம் சொர்க்கம்தான்
(தென்றல்..)
கூடக் கூடக் கூடாது கூடல்
தேடத்தேடத் தீராது தேடல்
பாடப்பாட ஓயாதுப் பாடல் சுகமே சுகமே ஓ..
(கூடக்..)
படம்: நாணயம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: சுனிதா சாரதி
Tuesday, December 8, 2009
நாணயம் - தென்றல் காற்று பூவுக்காக
பதிந்தவர் MyFriend @ 1:55 AM
வகை 2000's, 2009, சுனிதா சாரதி, ஜேம்ஸ் வசந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment