Saturday, December 26, 2009

கூட்டத்திலே கோவில் புறா



கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணப் பார்க்கையிலே
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது
(கூட்டத்தில..)

நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
என் பாடல் உன் நெஞ்சில் யாழ் மூட்டுது
என் ஆசை உன்னைத் தாளாட்டுது
பூங்குயிலே பூங்குயிலே உந்தன் பாதையிலே
ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவை உன்னை எண்ணிக்கொண்டு
பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து
வாழுகின்றாய் கோவில் கொண்டு
ஆனந்த மேடைல் பூவிழி ஜாடையில்
ஆயிரம் காவிய நாடகமாடிட
எண்ணுது என் மனமே
(கூட்டத்திலே..)

நீதானே நானாடும் பிருந்தாவனம்
நின்றாடும் தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன் மேகமே
என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே
கண்ணிப்பெண்ணே நீயும் இல்லையென்றால்
கானமழை வருமோ
தாமரை பூ நான் எடுத்து
நீ நடக்கும் வேளையிலே
தாலாட்டுடன் சந்தங்களைக் கற்றுக்கொண்டேன் பொன்மயிலே
என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில்
வான் மழை போல் இந்த பாவலன்
நெஞ்சினில் வாழிய வாழியவே
(கூட்டத்திலே..)

படம்: இதய கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

2 Comments:

ஈரோடு காக்கா said...
This comment has been removed by the author.
ஈரோடு காக்கா said...

பாட்டு எழுதியவர் யார் என்பதையும் சொல்லுங்க.

Last 25 songs posted in Thenkinnam