இன்று பிறந்தநாள் கொண்டாடும் பதிவர் ராமலக்ஷ்மிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. அழகான அவரின் கவிதைகளின் கருத்துக்களைப் போலவே இப்பாடலும் இனிமையானதும் பொருத்தமானதும் கூட. பாடலைத் தேர்வுசெய்த நண்பர் ஆயில்யனுக்கு நன்றிகள்.
அன்பே தெய்வமே கண்டேன் பூமி மேலே
ஒளியேற்றுவோம் பிறர் வாழ்வில் நாமே
நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா -[நிலாவே](3)
மலரே உன் வாசம் அழகே
மழையே உன் சாரல் அழகே
நதியே உன் தேகம் அழகே
கடலே உன் நீலம் அழகே
பனியே உன் காலம் அழகே
பகலே உன் காலை அழகே
இரவே உன் மாலை அழகே
உலகே என் தேசம் அழகே
கவிதை அழகே
கலைகள் அழகே
மழலை அழகே - மறந்தாயே
மனிதா மனிதா
வாழ்க்கை முழுதும்
அழகை அருகில் காண்பாயே
வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே
இது உண்மையேஏஏ
(நிலாவே) -2
முகமே உன் கண்கள் அழகே
விழியே உன் பார்வை அழகே
இதழே உன் பேச்சு அழகே
மொழியே உன் வார்த்தை அழகே
மனமே உன் எண்ணம் அழகே
நினைவே உன் நேர்மை அழகே
உயிரே உன் மூச்சும் அழகே
மனிதா உன் தேகம் அழகே
சிரிப்பும் அழகே
அழுகை அழகே
மனிதா வாழ்க்கை இதுதானே
தண்ணீர் விட்டு
பாலை அருந்தும்
அன்னப்பறவை நீதானே
வாழ்க்கை இன்பமே
வாழ்வோம் என்றுமே
மதி வெல்லுமேஏஏ
நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா - 2
பாடல் இடம்பெற்ற திரைப்படம் :கோகுலத்தில் சீதை
பாடியவர் : சித்ரா
இசை: தேவா
Monday, December 28, 2009
நிலாவே வா வா நில்லாமல் வா
Subscribe to:
Post Comments (Atom)
12 Comments:
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி அக்கா! :)
அழகான கருத்துக்கள் பொதிந்த பாடல்! தேடி பிடித்து ஒலியேற்றியமைக்கு முத்தக்காவுக்கு நன்றிகளுடன்...! :)
எங்கள் வாழ்த்து(க்)களையும் சொல்லிக்கறேன்.
ராமலஷ்மிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
அவரின் இனிய கவிதை போல பாடலும் அழகு.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்ங்க :)
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி அக்கா! :)
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
அருமையானப் பாடலைப் பதிந்து வாழ்த்தியிருக்கும் அன்பிற்கு நன்றிகள் முத்துலெட்சுமி. பாடலைத் தேர்வு செய்த ஆயில்யனுக்கும் நன்றி. கேட்டு மகிழ்ந்தேன். நண்பர்களின் வாழ்த்துக்களில் நெகிழ்ந்தேன்.
@
ஆயில்யன்
துளசி மேடம்
சின்ன அம்மிணி
மாதேவி
நான் ஆதவன்
தமிழ் பிரியன்
அண்ணாமலையான்
அனைவரின் வாழ்த்துக்களுக்கும் என் அன்பான நன்றிகள்.
happy birthday ramalakshmi
@ புதுகைத் தென்றல்,
வாழ்த்துக்களுக்கு நன்றி தென்றல்.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி
நன்றி கோவை ரவி!
Post a Comment