Wednesday, December 9, 2009

யோகி - ஹேய் யாரோடு யாரோ


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஹேய் யாரோடு யாரோ
இந்த சொந்தம் என்னப் பேரோ
நேற்றுவரை நீயும் நானும் யாரோ யாரோதான்
ஓர் ஆளில்லா வானில் கருமேகங்களின் காதல்
கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்கும்மோ

வஞ்சம் கொண்ட நெஞ்சம்
உருகுது கொஞ்சம்
சருகாவே தொலையுதே தகும்மோ
இது என்ன மாயம் சூரியனில் ஈரம்
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ
நதி வந்து கடல் மீது சேறும்போது
புயல் வந்து மலரோடு மோதும்போதும்
மழை வந்து வேலோடு கூடும்போ
யாரோடு யாரும் இங்கே ஹே ஹே ஹே

இதயங்கள் சேரும் நொடிக்காக யாரும்
கடிகாரம் பார்பப்து இல்லையே
நீரோடு வேரும் வேரோடு பூவும்
தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே
ஓர் உறவும் இல்லாமல்
உணர்வும் சொல்லாமலே புது முகவரி தேடுதோ
வாய் மொழியில் இல்லாமல்
வழியும் சொல்லாமல் பாசக்கலவரம் சேருதோ
ஒரு விண்மீன் நீயே மின்சாரத்தை தேடிவரும்போது
என்ன ஞாயம் கூறு விதிதானே
(வஞ்சம்..)

பறவைக்குக் கால்கள் பகையானால் கூட
சிறகுக்கு ச்ல்லம் இல்லையே
துளையிட்ட மூங்கில் தாங்கிய இரணங்கள்
இசைக்கின்ற போதும் இன்பமே
சிறு விதையும் இல்லாமல் கருவும் கொல்லாமலே
இங்கு ஜனனமும் ஆனதே
ஒரு முடிவும் இல்லாமல் முதலும் இல்லாமல்
காயம் புதிர்களைப் போடுதே
அட அருகம் புல்லின் நுனியில் ஏறி
நெறுப்பும் பனிபோல
எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதே

படம்: யோகி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, உஸ்தாட் சுல்தான்கான்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam