கூத்தடிச்சிடவா குறும்பு செஞ்சிடவா
ராத்திரி முழுசும் ரகலப்பண்ணிடவா
நேத்த விட்டுட்டுவா நெஜத்தத் தொட்டுடவா
பார்த்தத உடனே படம் புடிச்சிடவா
செல்போன் சிணுங்கிடவே லப்டம் எகுருதுப்பார்
சல்வார் அழைக்கையிலே சந்தோஷம் மொளைக்குதுப்பா
காலைப் பொழுது விடியிறவரை கவலை மறந்துப்பறந்திடவா
(கூத்தடிச்சிடவா..)
சிரிச்சிப் பேசி மயக்கம் நீங்க
எதுக்குக் காதல் பூமியில
சிரிக்க மறந்தா எதுக்கு வாழ்க்கை
வருத்தமாதும் போகையில
கொழந்தைப்போல நெறுங்குவீங்க
நெருங்கி வந்தா மாறுவீங்க
தொடங்கும் போது சைவம் நீங்க
போகப்போக மோசம் நீங்க
முதலில் பேசி மடக்குவீங்க
பிறகு ஏனோ அடக்குவீங்க
கிறுக்க வேல ஒதுங்கிப்போங்க
காதல் உலகம் அமைதிக்கெட்டது
பெண்ணிடம் என்பதை புரிஞ்சுக்கோங்க
(கூத்தடிச்சிடவா..)
கனவு வேணும் தூங்கப்போனா
சும்மா கூச்சல் போடாதீங்க
காலம் பூரா கனவே கண்டா என்ன ஆகும்
வாழ்க்கை தாங்க
இரவுக்கேது பூட்டுச்சாவி கடலுக்கேது வேலி வேலி
புயலைப் போல ஆட்டம் போட்டா
வாழ்க்கையெல்லாம் ஜாலி ஜாலி
திருந்திடாத பிறவி நீங்க
அறுந்தவாலா அலையிறீங்க
வெளிய வேஷம் போடுறீங்க
பெண்ணின் அழகை தவறவிட்டவன்
கண்கள் இருந்தும் குருடந்தானே
(கூத்தடிச்சிடவா..)
படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: பிரசாத், ராம்குமார், விஜய் உமா, சரயு
Monday, December 14, 2009
யாதுமாகி - கூத்தடிச்சிடவா
பதிந்தவர் MyFriend @ 1:16 AM
வகை 2000's, 2009, சரயு, பிரசாத், ராம்குமார், விஜய் உமா, ஜேம்ஸ் வசந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment