காஞ்சனையே காஞ்சனையே
தீ மீது தேன் சிந்த வா வா (காஞ்சனையே)
எனது கவிதையில் முதல் வரி நீதான்
மொத்தக்கவிதையும் ஒரே ஒரு வரிதான்
இனி எந்தன்
வாழ்விலே
பெண்ணென்றால் நீ மட்டும் தான்
ஓ ..
உன் பார்வை பட்டாம்பூச்சி
என் மேல் அமர்ந்தே செல்ல
நான் அந்த பாரம் பட்டு
விழுந்தேன் விழுந்தேன் மெல்ல
ஓ..கைகள் கொடுத்து தூக்கி நிறுத்து
வீழ்த்தி சென்றவள் நீயல்லவோ
என்னை மீறி உன்னை எண்ணினேன்
ஒரு மின்னல் கீறி
இருள் அள்ளினேன்
இங்கு எந்தன் கடிகாரமும்
அதன் முட்கள் காட்டும் நொடிநேரமும்
உன்னைத்தான் சுற்றுது
இல்லையேல் முற்றுது
காதலை எங்கு போய் விற்பது? - (காஞ்சனையே)
ம்..தூங்காமல் காத்து காத்து
விழித்தே கழித்தே இரவை
ஏமாற்றம் தாளமல் தான்
தூதாய் தொடுத்தேன் நிலவை
ம்..தூக்கி எறிய தீயில் சரிய
காதல் மனமென்ன காகிதமா?
காலை மாலை இருவேளையும்
எந்தன் கனவில் வந்து நின்று சீண்டினாய்
ஒன்றும் நேரவில்லை என்று பின்- நீ
கள்ளம் சொல்லி என்னை தாண்டினாய்
ஏன் உன்னை சந்தித்தேன்
என்றே நான் சிந்தித்தேன்
என் இரு கண்களை
கண்டித்தேன் - (காஞ்சனையே)
திரைப்படம்: நெஞ்சில் ஜில் ஜில்
பாடல்வரிகள் : தாமரை
இசையமைத்தவர்: D இமான்
பாடலைப்பாடியவர்:
Wednesday, September 16, 2009
காஞ்சனையே காஞ்சனையே ...
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
உங்களை ஒரு தொடருக்கு அழைத்திருக்கிறேன். ஒரு முறை என் வலையத்துக்கு வாருங்களேன்.
http://maunarakankal.blogspot.com
Post a Comment