கே.ஜே.ஜேசுதாஸ் பாடியது:சந்திரரே சூரியரேநட்சத்திர நாயகரேஅமரன் கதையைக் கொஞ்சம்அறிந்து வந்து சொல்லுங்களேன்வீரர் குல ஆம்பிளை - அவன் மறவர் குல மணிப்புள்ளதைரியம் இருந்துச்சுன்னாசமுத்திரமும் காலளவுதுணிச்சல் வளர்ந்திருந்தாதூண்களெல்லாம் நூலளவுஎதிரி இல்லையின்னுஎழுதி வச்சான் ஏட்டிலேகீதையைப் படிக்கவில்லஅவனும் ஒரு கண்ணனேஅவன் கடலைப்போலகாத்தைப் போலகாக்க வந்த சாமிங்க(சந்திரரே சூரியரே)தங்கம் போல மனசிருக்குதருமனாக மாறுவான்சிங்கத்தை வேட்டையாடிசேரிக்கெல்லாம் போடுவான்அமரன் சீறி வந்தா அலையும்கூட அடங்குமேகுத்தமுல்ல ஊருலஅவன் சுத்தமுல்ல ஆளுங்கஅவன் முகத்தைப் பார்த்துமனசு பூத்துகோடி சனம் வாழ்த்துங்க(சந்திரரே சூரியரே)***********'பாடும் நிலா' பாலு பாடியது:சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனேகிழக்கு வெளுத்ததடாமனசும் அங்கே சிவந்ததடாசுட்ட வடு ஆறலநெஞ்சில் பட்ட பின்பும் மாறல(சந்திரனே சூரியனே)நெஞ்சிலே நெருப்பை வைச்சாநீரும் அணைக்க முடியுமா?கண்ணிலே முள்ளு தைச்சாஇமையை மூட முடியுமா?பாரதக் கதையும் கூடபழியில் முடிஞ்ச காவியம் தான்இருப்பதும் இறப்பதும்அந்த இயற்கையோட கையிலேநான் மறைஞ்ச பின்னும் நிலைப்பதுஎன் உயிரெழுதும் கதையிலே(சந்திரனே..)நீயும் நானும் வாழனும்ன்னாதீமை எல்லாம் தீயிடுகெட்டதிங்கு அழியனும்ன்னாகொடுமை எல்லாம் பலிகொடுகண்ணன் கீதையிலேசொன்னதைப்போல் நடந்திடுபச்சைப் பயிர் வாழமண்ணில் களையெடுத்தா தவறில்லஅந்த முடிவில் தானே தொடக்கம் தேடிபுதுக்கதை நான் எழுதறேன்(சந்திரனே சூரியனே)படம்: அமரன்இசை: ஆதித்யன்பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்/எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
Post a Comment
0 Comments:
Post a Comment