ஆண்: ரோஜா மலரே ராஜக்குமாரிஆசை கிளியே அழகிய ராணிஅருகில் வரலாமா வருவதும் சரிதானாஉறவும் முறைதானாபெண்: வாராய் அருகில் மன்னவன் நீயேகாதல் சமமன்றோ பேதம் இல்லையன்றோகாதல் நிலையன்றோஏழையென்றாலும் ராஜகுமாரன்ராஜா மகளின் காதல் தலைவன்உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோஎன்றும் நிலையென்றோஆண்: வானத்தின் மீதே பறந்தாலும்காக்கை கிளியாய் மாறாதுகோட்டையின் மேலே நின்றாலும்ஏழையின் பெருமை உயராதுஓடி அலைந்து காதலில் கலந்துநாட்டை இழந்தவர் பலரன்றோஓடி அலைந்து காதலில் கலந்துநாட்டை இழந்தவர் பலரன்றோபெண்: மன்னவர் நாடும் மணிமுடியும்மாளிகை வாழ்வும் தோழியரும்பஞ்சணை சுகமும் பால் பழமும்படையும் குடையும் சேவகரும்ஒன்றாய் இணையும் காதலர் முன்னேகானல் நீர் போல் மறையாதோஒன்றாய் இணையும் காதலர் முன்னேகானல் நீர் போல் மறையாதோ(ரோஜா மலரே ராஜக்குமாரி)ஆண்: பாடும் பறவைக் கூட்டங்களேபச்சை ஆடைத் தோட்டங்களேபெண்: விண்ணில் தவழும் ராகங்களேவேகம் போகும் மேகங்களேஆண், பெண்: ஓர்வழிக் கண்டோம் ஒரு மனமானோம்வாழியப் பாடல் பாடுங்களேன்ஓர்வழிக் கண்டோம் ஒரு மனமானோம்வாழியப் பாடல் பாடுங்களேன்(ரோஜா மலரே ராஜக்குமாரி)படம்: வீரத்திருமகன்பாடியவர்கள்: P.B.ஸ்ரீனிவாஸ், சுசீலாஇசை: விஸ்வநாதன் ராமமூர்த்திவரிகள்: கண்ணதாசன்
Post a Comment
0 Comments:
Post a Comment