நூறுமுறை பிறந்தாலும்நூறுமுறை இறந்தாலும்உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்ஒருநாளும் போவதில்லைஉலகத்தின் கண்களிலேஉருவங்கள் மறைந்தாலும்ஒன்றான உள்ளங்கள்ஒருநாளும் மறைவதில்லை!ஓராயிரம் பார்வையிலேஉன் பார்வையை நான் அறிவேன்உன் காலடி ஓசையிலேஉன் காதலை நான் அறிவேன்(ஓராயிரம் பார்வையிலே)இந்த மானிடக் காதலெல்லாம்ஒரு மரணத்தில் மாறி விடும்அந்த மலர்களின் வாசமெல்லாம்ஒரு மாலைக்குள் வாடி விடும்நம் காதலின் தீபம் மட்டும்எந்த நாளிலும் கூட வரும்(ஓராயிரம் பார்வையிலே)இந்த காற்றினில் நான் கலந்தேன்உன் கண்களை தழுவுகின்றேன்இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்உன் ஆடையில் ஆடுகின்றேன்நான் போகின்ற பாதையெல்லாம்உன் பூமுகம் காணுகின்றேன்(ஓராயிரம் பார்வையிலே)படம்: வல்லவனுக்கு வல்லவன்இசை: வேதாபாடல்: கவியரசு கண்ணதாசன்பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன்
Post a Comment
0 Comments:
Post a Comment