குமுதம்போல் வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்தது என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ
(குமுதம்போல்..)
நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
பொன் விரல் கண்ட போதும் தினகரனும் புரியும்
நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
பொன் விரல் கண்ட போதும் தினகரனும் புரியும்
இதயத்தின் உயிர் ஓட்டமே
இன்ப உதயத்து மொழி கூட்டமே
இதயத்தின் உயிர் ஓட்டமே
இன்ப உதயத்து மொழி கூட்டமே
என் மனவீட்டின் முழு சாவி நீதானே
முத்தாரமே மணி முத்தாரமே
(குமுதம்..)
பண்பாடும் உன் கைகள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ என்னை மெல்ல உரசு
பண்பாடும் உன் கைகள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ என்னை மெல்ல உரசு
தினத்தந்தி அடிக்கின்றதே
தினத்தந்தி அடிக்கின்றதே
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே
நெஞ்சில் மன மாலை மலரே உன் நினைவெனும்
மணி ஓசையே தினம் மணி ஓசையே
(குமுதம்..)
ரதி என்னும் அழகிக்கும் நீதானே ராணி
கதி நீயே என்னை கொஞ்சம் கண் பாரு தேவி
ரதி என்னும் அழகிக்கும் நீதானே ராணி
கதி நீயே என்னை கொஞ்சம் கண் பாரு தேவி
ஆனந்த விகடன் சொல்லு
என்னை பேர் இன்ப நதியில் தள்ளு
ஆனந்த விகடன் சொல்லு
என்னை பேர் இன்ப நதியில் தள்ளு
நான் வாக்யாதி ப்ரதி ஆனேன் உன்னாலே
கண்ணே உஷா பசும் பொன்னே உஷா
(குமுதம்..)
படம்: மூவேந்தர்
இசை: சிற்பி
பாடியவர்: ஹரிஹரன்
Tuesday, November 2, 2010
குமுதம்போல் வந்த குமரியே
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment