Get Your Own Hindi Songs Player at Music Plugin
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா
திரும்ப திரும்ப கடிதம் போட்டு
திரும்ப திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை கொல்லும்
நினைவு காதலா
இமைக்கும்போது உன் முகம்
தெரிவதில்லை வாடினேன்
இமைகள் ரெண்டும் உயிரை கொல்லும்
நினைவு காதலா
உயிரை கொண்டு உன்னை மூடினேன் ஆ...
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா
உந்தன் மனம் சேலையாய்
காற்று கொண்டு போனதோ
காற்று கொண்டு போனதை
மேகம் வாங்கி கண்டதோ
வாங்கி கொண்ட சேலைதான்
வானவில் ஆனதோ
முத்தம் வைத்து கொல்வதை
வானம் என்னை எண்ணுதோ
எண்ணி வைத்த புலிகள்
நட்சத்திரம் ஆனதோ
உந்தன் பேரை சொல்வதில்
கோடி இன்பம் கூடுதோ
காதலித்து பார்க்கையில்
இதயம் நின்று போகுமே
இதயம் நின்று போயிடும்
ரத்த ஓட்டம் ஓடுமே
பிறப்பு போல இறப்பு போல
ஒரு முறைதான் காதல் தோன்றுமே ஆ
(திரும்ப..)
கவிஞன் மனச போல நீ
துருவி துருவி பார்க்கிறாய்
கிராம மண்ணின் தென்றலாய்
உரசி உரசி கேட்கிறாய்
இந்த பெண்மை ஆண்மை
உன்னை எண்ணி ஈர்க்குது
மேஜை விளக்கு போல நீ
தலை குனிந்து போகிறாய்
ஓடை கால மேகமாய்
கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்
இந்த தனித்தாண்டி
என்னை உன்னை கோர்த்தது
இதய துடிப்பு என்பதே
நிமிஷத்துக்கு என்பது
உன்னை பார்க்கும்போதுதான்
நூறு மடங்கு கூடுது
வெட்கம் பாதி சொர்க்கம் பாதி
மாறி மாறி வந்து போனது ஆ
(திரும்ப..)
படம்: பார்வை ஒன்றே போதுமே
இசை: பரணி
பாடியவர்கள்: ஹரிணி, உன்னி கிருஷ்ணன்
Saturday, November 20, 2010
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
பதிந்தவர் MyFriend @ 1:14 AM
வகை 2000's, உன்னி கிருஷ்ணன், பரணி, ஹரிணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment