கற்றருந்த தென்றலே காலை நேர தென்றலே
கொண்டு வந்த பாடல் என்ன பாடு
கண் விழித்த பூக்களே கண் விழித்த பூக்களே
பாடுகின்ற தென்றலோடு ஆடு
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு
(கற்றருந்த..)
தண்ணிக்குள்ளே கெண்டை மீன்கள் துள்ளும் போதிலே
கை வளயல் ஓசை வளையல் ஓசை கேட்டதில்லையா
நீ கேட்டதில்லையா நீ கேட்டதில்லையா
வந்து வந்து பாடுகின்ற பாடல் கேட்கையில்
இளம் பூக்களுக்கு புல்லரிக்கும் பார்த்ததில்லையா
நீ பார்த்ததில்லையா நீ பார்த்ததில்லையா
பாறைக்குள்ளும் தேரை உண்டு கேட்டதில்லையா
பூமிக்குள்ளும் பாடல் உண்டு உண்மை இல்லையா
காற்று மண்டலம் வாசல் ஆனது
மூச்சிழுக்கும் போது பாட்டு உள் நுழைந்தது
(கற்றருந்த..)
மேற்கு வானம் மஞ்சள் பூச பாட்டு வந்தது
என்னை மெல்ல மெல்ல தென்றல் தீண்ட பாட்டு வந்தது
புது பாட்டு வந்தது பாட்டு வந்தது
மொட்டு விட்ட பூவைப் பார்த்து பாட்டு வந்தது
குளிர் தீண்ட தீண்ட குளிக்கும் போது பாட்டு வந்தது
பாட்டு வந்தது முழு பாட்டு வந்தது
ஜன்னல் ஓரம் நிலவு பார்த்து பாட்டு வந்தது
சலசலக்க மழை அடிக்க பாட்டு வந்தது
மேடை ஏறவும் மாலை சூடவும்
பாடி பாடி பார்ப்பதில்லை பாட்டு என்பது
(கற்றருந்த..)
படம்: கண்ணன் வருவான்
இசை: சிற்பி
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
1 Comment:
பாடல் வரிகளுடன்...தேன் கிண்ணம்...!
அருமை.. :-))
Post a Comment