பதிவர் நாகை சிவா அவர்களின் திருமண நாளுக்காக இப்பாடல் தேன்கிண்ணத்தில் ஒலிக்கிறது..தம்பதியருக்கு வாழ்த்துக்கள் .
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித் தீண்டித் தூண்டும் விரலை
திட்டிக்கொண்டே தித்தித்தோம்
(தோம்..)
ஆணில் உள்ள பெண்ணைக் கொஞ்சம்
பெண்ணில் உள்ள ஆணைக் கொஞ்சம்
கொஞ்சச் சொல்லி கொஞ்சச் சொல்லி
கொஞ்சச் சொல்லி யாசித்தோம்
(ஆணில்..)
கொத்திக் கொத்தி பேசும் கண்ணை
திக்கி திக்கி வாசித்தோம்
சுற்றிச் சுற்றி வீசும் காற்றை
நிற்கச் சொல்லி ஸ்வாசித்தோம்
உன்னை என்னை துண்டித்தோம்
உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம்
மீண்டும் மீண்டும் சீண்டும் இதழை
முத்தம் செய்து தித்தித்தோம்
(தோம்..)
தீயில் உள்ள நீரைக் கொஞ்சம்
நீரிலுள்ள தீயைக் கொஞ்சம்
சேரச் சொல்லி சேரச் சொல்லி
சேரச் சொல்லி யாசித்தோம்
(தீயில்..)
ஒற்றைச் சொல்லை சொல்லத்தானே
கோடி சொல்லை வாடித்தோம்
மெல்லப் பேசி மெல்ல தொட்டு
மெதுவாய் வயதை சோதித்தோம்
நிழலையும் தேடி நேசித்தோம்
கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்
இன்னும் இன்னும் என்றே நம்மை
தின்னச்சொல்லி தித்தித்தோம்
(தோம்..)
படம்: அள்ளி தந்த வானம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா
வரிகள்: அறிவுமதி
Monday, November 29, 2010
தோம் தோம் தித்தித்தோம்
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் :)
வாழ்த்துகள் :)
பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துகள் புலி :))
வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் :)
மை பிரண்ட் க்கு சிறப்பு நன்றிகள் :)
Post a Comment