Get Your Own Hindi Songs Player at Music Plugin
வார்த்தை தவறி போனதனாலே
வாழ்க்கை தவறி போனது பாரு
நேற்று பொழுது திரும்ப வராது
அதற்கு பூமி அனுமதிக்காது
பூவை பெண்ணாய் சொன்னவன் யாரு
மலரை அறுத்து மருத்துவம் பாரு
வானம் தொலைவா
இல்லை வாழ்க்கை தொலைவா
இங்கு வாழும் மனிதா
உண்மை புரியலையே
(வார்த்தை..)
மின்னலுக்கும் மின்மினிக்கும் தகறாரா
கண் இருக்கு கன்னங்கள் தான் வரலாறா
பூக்கள் எல்லாம் சந்தேகித்தால் சருகாகும்
போதிமரம் கூட இங்கு விறகாகும்
இறைவனை ஒரு முறை வர வழைத்து
இல்லறம் நடத்திட சொல்ல வேண்டும்
மங்கையரின் மனதை கண்டு பிடிக்க
மற்றும் ஒரு கோலம்பஸ் இங்கு வேண்டும்
முதல் முறையா இல்லை முடிவுறையா
கரையே இல்லாத கடற்கரையா
வானம் தொலைவா
இல்லை வாழ்க்கை தொலைவா
இங்கு வாழும் மனிதா
உண்மை புரியலையே
படம்: சார்லி சப்ளின்
இசை: பரணி
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா
Sunday, November 21, 2010
வார்த்தை தவறி போனதனாலே
பதிந்தவர் MyFriend @ 1:46 AM
வகை 2000's, பரணி, ஹரிஷ் ராகவேந்திரா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment