ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்
முதல் பிறை போல் மனதினிலே
விழுந்தது உனதுருவம்
உதடுகளால் உன்னை படிப்பேன்
இருந்திடு அரை நிமிடம்
தொலைவது போல் தொலைவதுதான்
உலகில் உலகில் புனிதம்
இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகின்ற சுகம் சுகமே
கண் பட பட புதிர்களும் அவிழ்ந்திடுமே
(இறகே..)
மறுபடி ஒரு முறை பிறந்தேனே
விரல் தொட புருவம் சிவந்தேனே
ஓ இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ
சுடும் தனிமையை உணர்ந்திட
மர நிழல் போல என்னை சூழ
நரம்புகளோடு குறும்புகள் நானும்
எழுது என் கணக்கு
எனதிரு கைகள் தழுவிட
நீங்கும் இருதய சுலுக்கு
(ரகசிய..)
உயிர் அனு முழுவதும் உனை பேச
இமை தொடும் நினைவுகள் அணல் வீச
நினைச்சாலே செவப்பாகும் மருதாணி தோட்டம் நீ
தலை வைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ
எனதிரவினில் கசிகிற இரவொளி நீயே படர்வாயே
நெருப்புகளாலே நொறுங்கி விடாது இருபது வருடம்
ஹோ.. தவறுகளாலே தொடுகிற நீயும் அழகிய மிருகம்
(ரகசிய..)
குயிலே குயிலே குயிலினமே
எனக்கொரு சிறகு கொடு
முகிலினமே முகிலினமே
முகவரி எழுதி கொடு
அவனிடமே அவனிடமே
எனது கனவை அணைத்தும்
(இறகே..)
படம்: பீமா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், மதுஸ்ரீ
Monday, March 22, 2010
ரகசிய கனவுகள் ஜல் ஜல்
பதிந்தவர் MyFriend @ 4:52 AM
வகை 2000's, மதுஸ்ரீ, ஹரிஹரன், ஹாரிஸ் ஜெயராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment