Saturday, March 6, 2010

முண்டாசு சூரியனே முக்குளத்தில் மூத்தவனே



முண்டாசு சூரியனே முக்குளத்தில் மூத்தவனே
தேயாத சந்திரனே தேர்ப்போல நின்னவனே
நூறு தலைமுறையா ஊராளும் குளமே
வீர பரம்பரைக்கு வித்தான இனமே
வீச்சருவா சாமி இது வேலுகம்பு பூமி
கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி
(முண்டாசு..)

மானமுள்ள வீரமுள்ள வம்சம் வருதையா
அட மறையாத சூரியனின் வம்சம் வருதையா
வெட்டருவா வெரலிருக்கும் சிங்கம் வருதையா
எங்க தங்கமானம் காத்து நிக்கும் தங்கம் வருதையா
எட்டுப்பட்டி சனத்துக்கும் சாமிபோலடா
ஐயா வெரலுகூட சாஞ்சதுள்ள பூமி மேலடா
நீ தல குனிஞ்சு யாரு பார்த்ததில
நீ தல நிமிர்ந்து நாங்க பார்க்கவில்லை
(வீச்சருவா..)

அள்ளி அள்ளி கொடுத்ததிலே செவந்த கையடா
இது அருவால தூகி நின்ன ஐயனாருடா
கம்ப கூழு குடிக்கும் கடவுள் ஏதடா
அத எங்க ஊரு எல்லக்குள்ள வந்து பாருடா
நம்ம வம்சத்துல ஒருத்தன் கூட கோழை இல்லடா
ஐயா வாழும் மண்ணுல யாரும் இங்கே ஏழை இல்லடா
இது பரம்பரையா அள்ளி தந்த வானம்
ஏழு தலைமுறையா வாழ்ந்து வரும் மானம்
(வீச்சருவா..)
(முண்டாசு..)

படம்: சண்டைக்கோழி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஸ்ரீராம், கார்த்திக்
வரிகள்: நா. முத்துக்குமார்

2 Comments:

ஆளவந்தான் said...

”முக்குளம்” இல்லீங்க , முக்குலம் :)

ஆளவந்தான் said...

//
நீ தல குனிஞ்சு யாரு பார்த்ததில
நீ தல நிமிர்ந்து நாங்க பார்க்கவில்லை
//

உன்னை தல நிமிந்து நாங்க பாத்ததில்லை :)

Last 25 songs posted in Thenkinnam