உன் பார்வை என் மேல் பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக்கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனை சேர நீ எதை கேட்கிறாய் சொல்
(உன் பார்வை..)
இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்தை
எதுவென்று சொல்ல இல்லை ஒரு விவஸ்தை
உன்னை எண்ணி தினம் புல் அறிக்கும் மனதினை
செல்லறிக்க விடுபவள் நீதானே
விடாமல் கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி
நள்ளிரவு ஒவ்வொன்றும் முள் இரவு செய்தாயே
நுரையீரல் தேடும் ஸ்வாசமே
விழி ஓரம் ஆடும் சொப்பனமே
மடியில் நீ வந்தால் சௌக்கியமே
ஹேய் ஹேய் அன்பே
(உன் பார்வை..)
சில காதல் இங்கு கல்லரைக்குள் அடக்கம்
சில காதல் இங்கு சில்லறைக்குள் தொடக்கம்
அது போல அல்ல கல்லரையை கடந்திடும்
சில்லறையை ஜெயித்திடும் என் காதல்
உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்
அதுபோல காதல் சிக்காகோவும் கண்டதில்லை
சோவியட்டும் கண்டதில்லை என்பேன்
மழை நாளில் நீதான் வெப்பமே
வெயில் நாளில் தண்ணீர் தெப்பமே
உலி எதும் தீண்ட சிற்பமே ஹேய் அன்பே
(உன் பார்வை..)
படம்: சென்னை 600028
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்
Sunday, March 21, 2010
உன் பார்வை என் மேல் பட்டால்
பதிந்தவர் MyFriend @ 1:29 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
//சில்லறையை ஜெயித்திடும் என் காதல்//
நம் காதல் (?)
//அதுபோல காதல் சிக்காகோவும் கண்டதில்லை
சோவியட்டும் கண்டதில்லை என்பேன்//
நடுவில் ஒரு வரி மிஸ்ஸிங்.
Post a Comment