பிறையே பிறையே வளரும் பிறையே
இது நல்வரவே
மலரே மலரே மலர்ந்தாய் மலரே
உனக்கேன் தளர்வே
பயணம் எவர்க்கும் இங்கு முடியும்
இங்கு பிறந்தாயோ
உதயம் உனக்கு இங்கு தொடக்கம்
விழிகள் திறந்தாயோ
(பிறையே..)
தன்னன் தனியாக மண்ணில் வர ஏங்கினாயோ
என்ன துணிச்சலோடு இந்த வரம் வாங்கினாயோ
சோலையில் நின்ற போதிலும் மாலையே என்ற போதிலும்
பூவெல்லாம் என்றும் பூக்களே
இங்கு மாறுமா அதின் பெயர்களே
குடிசை என்ன செய்யும் கோட்டை என்ன செய்யும்
உன்னை மாற்றுமா
(பிறையே..)
ஊர்வலங்கள் எல்லாம் வரும் உன்னை நோக்கி தானே
ஊரும் உறவும் எது எல்லாம் உனக்கு ஒன்று தானே
பணத்திலே தினம் புரண்டவர்
பதவியில் தலை கணத்தவர்
புகழிலே எல்லை போனவர்
நிலை உயர்ந்தவர் அதில் தாழ்ந்தவர்
இந்த பேதம் எல்லாம் வந்து போக கண்டு
தெளிந்த மனிதன் நீ
(பிறையே..)
படம்: பிதாமகன்
இசை: இளையராஜா
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
Tuesday, March 9, 2010
பிறையே பிறையே வளரும் பிறையே
பதிந்தவர் MyFriend @ 2:23 PM
வகை 2000's, இளையராஜா, மது பாலகிருஷ்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment